ஏர்பேக் வசதி கொண்ட உலகின் முதல் தலைக்கவசம்... இப்படி ஒரு ஹெல்மெட்டதான் இந்த உலகமே எதிர்பார்த்துட்டு இருக்கு!

தலைக் கவசம் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான அம்சமாக இருக்கின்றது. இந்த அம்சத்தை ஓர் நிறுவனம் மிக அதிக பாதுகாப்பானதாக உருவாக்கியிருக்கின்றது. இதற்கு முன்னதாக இதுபோன்று அதிக பாதுகாப்பு வசதிகளுடன் வேறு எந்த நிறுவனம் ஹெல்மெட்டை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் ஹெல்மெட்டுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. எனவேதான் இதனை 'தலைக் கவசம்' என்பதற்கு பதிலாக 'உயிர் கவசம்' என்று அழைக்கின்றனர். இந்தியாவில் இதை இருசக்கர வாகன ஓட்டிகள் அணிவது கட்டாயம் ஆகும். இருசக்கர வாகனத்தை இயக்குபவர் மட்டுமின்றி அதில் பயணிப்பவரும் அதைக் கட்டாயம் அணிந்தாக வேண்டும். இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் அவர்களும் கட்டாயம் தலைக் கவசத்தை அணிய வேண்டும் என இந்திய மோட்டார் வாகன சட்டம் கூறுகின்றது.

ஹெல்மெட்

இந்த பாதுகாப்பு அம்சத்தையே மேலும் பல மடங்கு பாதுகாப்பானதாக ஓர் ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனம் மாற்றியிருக்கின்றது. அதாவது, மிகக் கடுமையான விபத்தைச் சந்தித்தாலும், அந்த ரைடருக்கு உச்சபட்ச பாதுகாப்பை வழங்கும் வகையிலேயே தனது புதுமுக ஹெல்மெட்டை அந்த தலைக்கவச உற்பத்தியாளர் உருவாக்கியிருக்கின்றார். ஏர் பேக் வசதிக் கொண்ட ஹெல்மெட்டே உருவாக்கப்பட்டுள்ளது. கார்களில் மட்டுமே காணப்படக் கூடிய பாதுகாப்பாக அம்சமாக ஏர் பேக்குகள் காட்சியளிக்கின்றன.

ஏர்பேக் என்பது பலூன் போன்று இருக்கும் ஓர் அம்சம் ஆகும். விபத்தின்போது தலை மற்றும் மார்பக பகுதியில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைக் குறைக்கும் பொருட்டே இந்த அம்சம் அனைத்து கார்களிலும் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பு கருதி மலிவு விலை கார் மாடல்களில்கூட குறைந்தபட்சம் இரு ஏர் பேக்குகளாக காரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு விடுகின்றன. இத்தகைய ஓர் அம்சத்தையே தற்போது முதல் முறையாக ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது புதுமுக ஹெல்மெட்டில் வழங்கியிருக்கின்றது.

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தற்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே ஏர் பேக் கொண்ட ஹெல்மெட்டை வடிவமைத்து உள்ளது. இதோடு நிறுத்திக் கொள்ளாமல் வெகுவிரைவில் இதனை உலகளவில் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டிற்குள் ஏர் பேக் வசதிக் கொண்ட இந்த ஹெல்மெட் விற்பனைக்கு வந்திவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணியிலேயே நிறுவனம் தற்போது தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது.

ஏரோ நிறுவனம் இந்த ஹெல்மெட்டை ஆட்டோலிவ் (Autoliv) எனும் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருக்கின்றது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் 70 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஏர் பேக் உடைகள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிறுவனத்துடன் இணைந்தே ஏரோ மிக அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட தலைக் கவசத்தை தயாரித்து உள்ளது.

உலகிலேயே ஏர் பேக் வசதி உடன் உருவாக்கப்படும் முதல் ஹெல்மெட் இது ஆகும். ஆகையால், ஒட்டுமொத்த வாகன உலகின் கவனமும் இந்த ஹெல்மெட்டின் பக்கம் திரும்பியிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ப்ளூடூத் இணைப்பு, வைப்பர், நைட் விஷன் மற்றும் காற்றை வடிகட்டும் ஃபில்டர் என வித்தியாசம் வித்தியாசமான ஹெல்மெட்டுகள்கூட உலகில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், ஏர் பேக் வசதியுடன் ஒரு ஹெல்மெட்கூட விற்பனைக்குக் கிடைக்கவில்லை.

இந்த நிலையையே விரைவில் ஏரோ நிறுவனத்தின் புதிய ஹெல்மெட் மாற்றியமைக்க இருக்கின்றது. ஹெல்மெட்டின் மேற்பகுதியிலேயே ஏர் பேக்குகள் இடம் பெற்றிருக்கும். இவை தானாகவே தாக்கத்தின்போது திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏர் பேக்குகள் மின்னணு முறையில் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நொடிப் பொழுதில் காற்றை உறிஞ்சி விரிவடையும். ஆனால், எவ்வளவு வேகத்தில் இது திறக்கும் என்பது பற்றிய முக்கிய விபரத்தை ஏரோ வெளியிடவில்லை.

ஆகையால், விபத்து போன்ற அசம்பாவிதங்களின்போது பாதுகாப்பான சூழல் இந்த ஹெல்மெட்டின் வாயிலாக கிடைக்கும். இத்தகைய சூப்பரான ஹெல்மெட்டையே ஏரோ நிறுவனம் தற்போது உருவாக்கியிருக்கின்றது. இதன் உருவாக்க பணிகளை நிறுவனம் 2020ம் ஆண்டு முதலே மேற்கொண்டு வருகின்றது. இந்த ஹெல்மெட் இசிஇ 22.06 பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டிற்கு இணங்க உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக அனைத்து நிலைகளிலும் இந்த ஹெல்மெட் வாயிலாகபாதுகாப்பான சூழல் மட்டுமே கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த ஹெல்மெட் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற துள்ளியமான விபரம் வெளியிடப்படவில்லை. இதேபோல் இந்த ஹெல்மெட் இந்தியா வருமா என்பதும் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், இப்படி ஒரு ஹெல்மெட்டே நம் அனைவரின் தேவையாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Helmet with airbag
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X