ஹெல்மெட் போடாம வந்தவரை அவமானப்படுத்திய போலீசார்! மனுஷன் இனி ஹெல்மெட் இல்லாம வாசல்படிய தாண்டவே மாட்டாரு!

இந்தியாவில் டூவீலர் வாகன ஓட்டிகள் பலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டி சட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படியாக சட்ட விதிமுறை மீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு டிராஃபிக் போலீசார் வித்தியாசமான பாடம் கற்று கொடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் டூவீலர்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்பது மோட்டார் வாகன சட்ட விதிமுறை. சிலர் அதை பின்பற்றினாலும் பலர் அதை பின்பற்றாமல் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டி வருகின்றனர். இதை கண்காணிக்க ஆங்காங்கே போலீசார் தனிக்கையில் ஈடுபட்டாலும் தானியங்கி கேமராக்களை பொருத்தினாலும் இந்த விதிமுறையை மக்கள் பின்பற்ற தவறி வருகின்றனர்.

Real Time Helmet fine video

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சிவ்மோகா மாவட்டத்தில் உள்ள டிராஃபிக் போலீசார் இப்படியாக சட்டவிதிமுறைகளை மீறும் நபர்களுக்கு தக்க பாடம் புகட்ட வித்தியாசமான வழிமுறையை பின்பற்றினர். அதன்படி குறிப்பிட்ட டிராஃபிக் சிக்னலில் ஸ்பீக்கர்களை பொருத்தி அதை நேரடியாக கண்ட்ரோல் ரூமில் உள்ள ஃபோன் உடன் இணைத்துள்ளனர். இந்த போனில் பேசினால் டிராஃபிக் சிக்னலில் உள்ள ஸ்பீக்கரில் கேட்கும்படி செட்டப்பை தயார் செய்தனர்.

இந்நிலையில் அங்கு ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்த ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் டிராஃபிக் சிக்னலில் நின்று கொண்டிருக்கிறார். அவர் சட்ட விதிமுறைகளை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்ததை கண்ட்ரோல்ரூமில் இருந்து கவனித்த போலீசார் அவரை எச்சரிக்கும் விதமான போன் ரிசிவர் மூலம் எச்சரிக்கை விடுத்தார்.

Real Time Helmet fine video

அவர் எச்சரிக்கை விடுக்கும்போது பொதுவாக அல்லாமல் குறிப்பிட்ட நபரை அவரது வாகனம், அவர் அணிந்திருக்கும் உடை ஆகியவற்றை வைத்து அடையாளம் கண்டு எச்சரிக்கை விடுத்தார். அதனால் அவர் அந்த இடத்தில் தான் தவறு செய்ததை எண்ணி கூனி குறுகிவிட்டார். அவரிடம் ஹெல்மெட் அணியும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தார்.

இதை போலீசார் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்கிளல் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. குறிப்பிட்ட நபருக்கு வெறும் அபராதம் மட்டும் விதிப்பதன் மூலம் அவர் மீண்டும் அந்த தவறை செய்யாமல் தடுக்க முடியாது மாறாக இப்படியாக பொதுவெளியில் தான் சுட்டிக்காட்டப்படுவோம். என அறிந்த பிறகு இவர் மீண்டும் இந்த தவறை செய்ய வாயப்பில்லை என இந்த வீடியோவை பார்க்கும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையை பலர் வரவேற்றுள்ளனர். இந்தியாவில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு பெரிய அளவில் எடுபடவில்லை. மக்கள் பல்வேறு காரணங்களுக்காக ஹெல்மெட் அணியாமல் தவிர்க்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநில போலீசாரின் இந்த செயல் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. என்ன நடவடிக்கை எடுத்தாலும் அவர்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை. இதனால் கர்நாடக போலீசார் கையில் எடுத்துள்ள இந்த நடவடிக்கை இனி அவர்களை ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 19, 2025, 16:00 [IST]
English summary
Helmetless rider fine real time police control room
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+