ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா? கொட்டாதா? உண்மை என்ன!
ஹெல்மெட் பயன்படுத்தினால் முடி கொட்டுமா? பலருக்கு இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது இந்த சந்தேகத்திற்கான பதிலை தான் இங்கே நாம் விரிவாக காணப்போகிறோம்.
இந்தியாவின் மோட்டார் வாகன சட்டப்படி இந்திய சாலைகளில் டூவீலர் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து கொண்டு தான் டூவீலர் ஓட்ட வேண்டும். அப்பொழுதுதான் விபத்து ஏற்படும் போது உயிரிழப்புகள் ஏற்படுவது குறையும். இதனால் தான் மத்திய அரசு இதை ஒரு சட்டமாக வைத்துள்ளது.

ஹெல்மெட் அணிந்து டூ வீலர் இயக்குவது தான் இந்திய மோட்டார் வாகன சட்டப்படி சரியான விஷயம். ஆனால் இன்று பலர் ஹெல்மெட் அணிவதை தவிர்த்து வருகின்றனர். இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லுகின்றனர். பெரும்பாலான நபர்கள் சொல்லும் முக்கியமான காரணம் ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டுவது தான்.
ஆனால் உண்மையில் ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா? சிலர் தினம் தோறும் ஹெல்மெட் அணிந்து பயணித்தாலும் அவர்களுக்கு முடி கட்டுவதில்லை ஏன்? இதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் முடி கொட்டும் பிரச்சினை குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முடி கொட்டுவது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை தான். ஆனால் முடி கட்டுவதற்கான காரணம் பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு வகை காரணமாகவும் பெண்களுக்கு மற்றொரு வகை காரணமாகவும் இருக்கிறது. பெரும்பாலும் ஆண்களுக்கு டைஹைட்ரேட்ரெஸ்ட்ரோஸ்ரோம் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை இருக்கும். பெண்களுக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ், பிசிஓடி, ஹைப்பர் அல்லது ஹைபோ தைராய்டு பிரச்சினை இருந்தால் முடி கொட்டும் பிரச்சினை இருக்கும்.
முடி கொட்டும் பிரச்சினை இருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒவ்வொரு விதமான காரணம் காரணமாக இது இருக்கும். அதை கண்டறிந்து அதை சரி செய்தாலே முடி கொட்டும் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டுகிறது என்ற எந்தவித அறிவியல் ஆய்வுகளும் இதுவரை நிறுபனமாகவில்லை.

நீண்டநேரம் ஹெல்மெட் அணிவதால் தலைக்குள் அதிகமாக வியர்வை வந்து சுகாதாரமின்மையாக மாறி இது தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஆனால் இது ஹெல்மெட் அணிவதால் மட்டுமே நடக்கிறது என்ற புரிதலை நாம் பெறக்கூடாது. சராசரியாக ஹெல்மெட் அணியும் மனிதருக்கு இந்த பிரச்சனை எல்லாம் வராது. நீண்ட மணி நேரங்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டே இருக்கும் நபர்களுக்கு இப்படியான பிரச்சினைகள் வரலாம். ஆனால் அவர்கள் இதை தவிர்க்கவும் வாய்ப்புகள் உள்ளது.
ஹெல்மட்டை சுகாதாரமாக பராமரிக்காமல் இருந்தால் அதன் மூலம் ஏற்படும் கிருமி தொற்று காரணமாக தலையில் ஏதாவது பிரச்சனை வரலாம். இந்த பிரச்சனையின் நீட்டிப்பாக முடி கொட்டும் பிரச்சினை ஏற்படலாம். இதனால் ஹெல்மெட்டை நீங்கள் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஹெல்மெட்டை மாற்றினாலும் அது சிறந்தது தான்.
அதே நேரம் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் மற்ற சுகாதார பிரச்சனை காரணமாக முடி கொட்டும் வாய்ப்பு இருக்கிறது. இதற்காக நாம் சரியாக முடியை பராமரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. முக்கியமாக ஹெல்மெட் அணியும்போது அதன் உள்ளே வியர்வை அதிகமாக வராத அளவிற்கு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். வியர்வை வந்தாலே அதன் மூலம் ஏற்படும் பிற தொற்று காரணமாக முடி கொட்டும் பிரச்சினை ஏற்படலாம்.
நாம் முன்னரே சொன்னது படி சிலர் ரெகுலராக ஹெல்மெட் அணிந்தும் அவர்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை இருக்காது. இதற்கான காரணம் அவர்கள் முடியை முறையாக பராமரிப்பார்கள். அதே நேரம் நீண்ட நேரம் ஹெல்மெட் அணிவதையும் தவிர்ப்பார்கள். இதன் மூலம் முடி கொட்டும் பிரச்சினை அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹெல்மெட் என்பது டூவீலரில் பயணிக்கும் அனைவரும் அணியக்கூடிய முக்கியமான பாதுகாப்பு கவசம். அதிக வேகமோ அல்லது குறைவான வேகமோ இரண்டிலும் ஹெல்மெட் உயிரைக் காக்கும் கருவியாக இருக்கிறது. இதனால் நீங்கள் வாகனத்தில் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுங்கள். முடி கொட்டும் என்ற பிரச்சினை காரணமாக ஹெல்மெட்டை தவிர்க்காதீர்கள்.


Click it and Unblock the Notifications









