சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினா என்ன நடக்கும் தெரியுமா?.. புதிய விதி விரைவில்!!

சிறுவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம் என மோட்டார் வாகன சட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினா என்ன நடக்கும் தெரியுமா?.. புதிய விதி விரைவில்!!

இருசக்கர வாகனங்களில் தாய்-தந்தை என இருவர் ஹெல்மெட் அணிந்து பயணித்தாலும் அவர்களுடன் அமர்ந்து செல்லும் குழந்தைகள் (சிறுவர்கள்) தலைக்கவசம் ஏதுமின்றி பயணிப்பதை நாம் கண்டிருப்போம். அவ்வாறு, நீங்களும் பயணிப்பவரானால் விரைவில் நீங்கள் உச்சபட்ச அபராதத்தைப் பெறுவது உறுதி.

சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினா என்ன நடக்கும் தெரியுமா?.. புதிய விதி விரைவில்!!

ஆமாங்க, சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதி மிக விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக, பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் என்ற ஒன்றையே பயன்படுத்துவதில்லை. இதில் குழந்தைகளுக்கு எங்கு அவர்கள் ஹெல்மெட் அணிவிக்க போகிறார்கள் என்ற எண்ணமே பலரின் மனத்தில் தோன்றுகின்றது.

சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினா என்ன நடக்கும் தெரியுமா?.. புதிய விதி விரைவில்!!

ஆனால், அரசு இந்த விவகாரத்தை மிக தீவிரமாக கையில் எடுக்க இருக்கின்றது. சாலை விபத்தும், இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால், சில கடுமையான விதிகளை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைக்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றன.

சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினா என்ன நடக்கும் தெரியுமா?.. புதிய விதி விரைவில்!!

மிக சமீபத்தில்கூட சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் என்ற உத்தரவைப் பிறப்பத்திருந்தது. இந்த நிலையிலேயே இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம் என்ற விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினா என்ன நடக்கும் தெரியுமா?.. புதிய விதி விரைவில்!!

குறிப்பாக, நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தை இருசக்கர வாகனத்தில் பயணிக்கமானால் அக்குழைந்தைக்குக் கட்டாயம் தலையைப் பாதுகாக்கும் கவசம் பொருத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. குழந்தைகளையும் மூன்றாம் நபர் ரைடராக அறிவித்து இந்த புதிய விதி இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் வாயிலாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினா என்ன நடக்கும் தெரியுமா?.. புதிய விதி விரைவில்!!

இதனை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளிடத்தில் இந்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194ஏ-வின் கீழ் ரூ. 1,000 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதி மிக மிக விரைவில் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதனை தீவிரமாக செயல்படுத்தும் முயற்சியில் அரசு களமிறங்கியிருக்கின்றது.

சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினா என்ன நடக்கும் தெரியுமா?.. புதிய விதி விரைவில்!!

ஆகையால், போக்குவரத்து போலீஸார் எப்போது வேண்டுமானால் இப்புதிய விதியின்கீழ் குழைந்தைகளுக்கு தலைக்கவசம் அணியாத பெற்றோர்கள் (இருசக்கர வாகன ஓட்டிகள்) இடத்தில் அபராதம் வசூலிக்க தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினா என்ன நடக்கும் தெரியுமா?.. புதிய விதி விரைவில்!!

இருசக்கர வாகனத்தில் சாலையில் பயணிப்பது என்பது சற்று ஆபத்தான ஒன்றே. கார்களைக் காட்டிலும் இதில் பாதுகாப்பு அம்சம் மிகக் குறைவே. எனவேதான் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை மோட்டார் வாகன சட்டம் வலியுறுத்துகின்றது.

சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினா என்ன நடக்கும் தெரியுமா?.. புதிய விதி விரைவில்!!

இந்த நிலையிலேயே குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அவசியம் என்பதை போக்குவரத்துத்துறை கட்டாயப்படுத்தியுள்ளது. இது பயணத்தின்போது ஏற்படும் கசப்பான அனுபவங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உதவும் என நம்பப்படுகின்றது. எனவேதான் மிக தீவிரமாக இந்த விதியை நடைமுறைப்படுத்த போக்குவரத்துத்துறை ஆயத்தமாகி வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Helmets Are Mandatory For Kids Over The Age Of Four. Read In Tamil.
Story first published: Monday, April 26, 2021, 19:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X