தமிழ்நாட்டின் ஒரு மூலையில் பிறந்து இந்திய சினிமாவையே கைல வச்சிருந்த நடிகையின் மகளா இது! 1.40 கோடி ரூபா காரில்!
இந்திய செல்வந்தர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5). சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரை, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), நடிகை ப்ரீத்தி ஜிந்தா (Preity Zinta) உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வைத்திருக்கின்றனர். தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் 4 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 96 லட்ச ரூபாய் ஆகும். டாப் வேரியண்ட்டின் விலையோ 1.09 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆன்-ரோடு விலை (On-road Price) என கணக்கிட்டால், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1.20 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை 1.40 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். நகரங்களை பொறுத்து, ஆன்-ரோடு விலை சற்று மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மிகவும் விலை உயர்ந்தது என்றாலும் கூட, பனரோமிக் சன்ரூஃப், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே என ஏராளமான அதிநவீன வசதிகளை (Features), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் பெற்றுள்ளது.
எனவே திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பலர் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் பயணம் செய்வதை அடிக்கடி காண முடியும். இந்த வரிசையில் பிரபல நடிகை ஒருவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல பாலிவுட் நடிகையான ஈஷா தியோல் (Esha Deol) ஆவார். சூர்யா, மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவான ஆயுத எழுத்து உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் ஈஷா தியோல் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (Dharmendra) மற்றும் நடிகை ஹேமமாலினியின் (Hema Malini) மகள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதில், ஹேமமாலினி தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்கு பரிட்சயமானவர். ஏனெனில் தமிழ்நாடுதான் அவரது பூர்வீகம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவரான ஹேமமாலினி, பின்னாளில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து, இந்தியா முழுக்க புகழ் பெற்ற நடிகையாக மாறினார்.
அவரது மகள் ஈஷா தியோல் தற்போது பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில், 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை இரண்டுமே 3.0 லிட்டர் இன்ஜின்கள்தான். ஆனால் ஒன்று பெட்ரோல். மற்றொன்று டீசல். இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 381 பிஎஸ் பவர் மற்றும் 520 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது.
மறுபக்கம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 285 பிஎஸ் பவர் மற்றும் 650 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 இன்ஜின்கள் உடனும், 48V மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் டிரான்ஸ்மிஷனுக்காக 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் பெட்ரோல் இன்ஜின் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு வெறும் 5.4 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 243 கிலோ மீட்டர்கள் ஆகும். மறுபக்கம் டீசல் இன்ஜின் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு 6.1 வினாடிகளை எடுத்து கொள்ளும். இதனுடைய டாப் ஸ்பீடும் மணிக்கு 243 கிலோ மீட்டர்கள்தான்.
பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் பகுதியில் எல்இடி ஹெட்லைட்கள், ஏரோ வடிவ பகல் நேர விளக்குகள் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு உரித்தான கிட்னி க்ரில் ஆகியவை மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், 21 இன்ச் அலாய் வீல்கள் இந்த காரின் டிசைனை மெருகேற்றுகின்றன. அதே நேரத்தில் பின் பகுதியில், எல்இடி டெயில்லைட்கள் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசு வசதிகள் மற்றும் செயல்திறன் மிக்க இன்ஜின் உடன் கூடிய ஒரு பிரீமியம் காரை எதிர்பார்க்க கூடிய திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்ற செல்வந்தர்களுக்கு, ஈஷா தியோல் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு எஸ்யூவி கார் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








