தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் பிறந்து இந்திய சினிமாவையே கட்டி ஆண்ட நடிகையா இது! 4 கோடி ரூபா கார்ல வர்றாங்க!
தமிழ் திரையுலகில் தற்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடிகைகளும் கொடி கட்டி பறந்து வருகின்றனர். குறிப்பாக கேரளா மற்றும் மஹாராஷ்டிரா போன்ற வட இந்திய மாநிலங்களை சேர்ந்த நடிகைகள் பலரின் ஆதிக்கம் தமிழ் திரையுலகில் இருக்கிறது. அதேபோல் கர்நாடக மாநிலத்தில் பிறந்த நடிகைகள் பலரும் கூட, தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னணி நடிகைகளின் எண்ணிக்கை இங்கு குறைவுதான். ஆனால் ஒரு காலத்தில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் பலர் இந்தியா முழுக்க பிரபலமானவர்களாக இருந்தனர்.
இதற்கு ஸ்ரீதேவி (Sridevi) ஒரு உதாரணம். தமிழ்நாட்டின் விருதுநகர் (Virudhunagar) மாவட்டத்தில் பிறந்தவரான ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால் ஸ்ரீதேவி தற்போது நம்முடன் இல்லை. கடந்த 2018ம் ஆண்டு அவர் உயிரிழந்து விட்டார்.

ஸ்ரீதேவியை போல், ஒட்டுமொத்த இந்தியாவையும் கலக்கிய மற்றொரு தமிழ் நடிகை ஹேம மாலினி (Hema Malini) ஆவார். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டத்தில் உள்ள அம்மன்குடி என்ற கிராமத்தில் பிறந்த ஹேம மாலினி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 1963ம் ஆண்டு திரை துறையில் அறிமுகமான இவர், கடந்த 2020ம் ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு அவர் திரைப்படங்களில் தலை காட்டவில்லை. 1970 மற்றும் 80களில் ஹேம மாலினி புகழின் உச்சத்தில் இருந்தார். அப்போது ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்தார்.

ஆனால் 1991ம் ஆண்டிற்கு பிறகு, அவர் திரைப்படங்களில் நடிப்பது குறைய தொடங்கியது. இருப்பினும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து கொண்டுதான் இருந்தார். இறுதியில் 2020ம் ஆண்டிற்கு பிறகு, அவர் தற்போது வரை எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இந்த சூழலில் ஹேம மாலினியின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz Maybach S-Class) காரில் வந்து ஹேம மாலினி இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது மும்பை விமான நிலையத்தில் (Mumbai Airport) எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.
வெளியூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு ஹேம மாலினி வந்தபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் கார் மிகவும் விலை உயர்ந்தது ஆகும். தற்போதைய நிலையில் இந்த கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவை எஸ்580 (S580) மற்றும் எஸ்680 (S680) ஆகியவை ஆகும். இதில், எஸ்580 வேரியண்ட்டின் விலை 2.77 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் எஸ்680 வேரியண்ட்டின் விலையோ 3.48 கோடி ரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே.
ஆன்-ரோடு விலை (On-road Price) முறையே 3.50 கோடி ரூபாய் மற்றும் 4.40 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். ஆனால் ஹேம மாலினி பயன்படுத்தியது இதில் எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரின் எஸ்580 வேரியண்ட்டில், 4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 496 பிஹெச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்த காரின் எஸ்680 வேரியண்ட்டில், 6.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 603 பிஹெச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் சொகுசான மற்றும் சௌகரியமான பயணத்தை எதிர்பார்க்க கூடிய செல்வந்தர்களுக்கு, மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் கார் ஏற்றதாக இருக்கும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. ஹேம மாலினி தவிர, இன்னும் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த காரில் பயணித்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








