முதலைமைச்சர் காரை தூக்கிய அமலாக்கத்துறை! இவ்வளவு கோடி ரூபாய்க்கு கார் வாங்கி வச்சிருந்தாரா?
மத்திய அமலாக்கத்துறை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை தற்போது பறிமுதல் செய்துள்ளது. இந்த கார் ரூபாய் 1.26 கோடி மதிப்புள்ள காராகவும் இந்த காரை அமலாக்கத்துறை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பறிமுதல் செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். இவர் மீது பொருளாதார குற்றம் மற்றும் நில ஊழல் தொடர்பான புகார்கள் இருக்கிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவர் சுமார் 236 கோடி ரூபாயை ஊழல் செய்துள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ள நிலையில் இது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து அவர் ஊழல் செய்த பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டும் இருக்கிறது.

இந்நிலையில் அமலாக்க துறையினர் கடந்த 20-ம் தேதி இவரது இல்லத்தில் வந்து சோதனை நடத்தி விசாரணை நடத்தினார். இவரிடம் விசாரணை நடத்த ஜனவரி 29 முதல் 31ஆம் தேதிக்குள் ஒரு தேதியில் முழுமையாக விசாரணை நடத்த ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதன்படி அமலாக்க துறையினர் சுமார் 13 மணி நேரம் இவரது வீட்டில் சோதனை நடத்தி விசாரணை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் அவர்கள் ஜார்க்கண்ட் முதல்வர் பயன்படுத்தி வந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை பறிமுதல் செய்து சென்றனர். இந்த கார் ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கார் ஆகும்.

இந்த சம்பவத்தின் போது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இல்லை தற்போது ஜார்க்கண்ட் முதல்வர் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாய் உள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை.
ஜார்க்கண்ட் முதல்வரை இன்று மதியம் ஒரு மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்பந்தம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மன் தற்போதும் காத்திருப்பில் தான் இருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது காரை பறிமுதல் செய்து சென்றனர். இரண்டு அமுலாக்கத்துறை அதிகாரிகள் அவரது காரை ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ் 7 ரக காராகும். பைட்னிக் ப்ளூ மேட்டாலிக் என்ற நேரத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலையை பொருத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 1.26 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட காராக இருக்கிறது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ சார்ஜர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது பெட்ரோல் பர்சனல் 381 பிஎஸ் பவரையும் 520 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டீசல் மெஷினில் 340 பிஎஸ் பவரையும் 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் கூடுதலாக ஹைபிரிட் ஆப்ஷன் உடனும் இருக்கிறது இதற்காக 48 ஓல்டு மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளதுஇது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ள காராக இருக்கிறது. தற்போது மார்க்கெட்டில் ரூபாய் 1.26 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மிகப் பெரிய செல்வந்தர்கள் அரசியல் தலைவர்கள் மட்டுமே இந்த காரை வாங்கும் நிலை தற்போது உள்ளது.
இந்த காரை எந்த காரணத்திற்காக அமலாக்க துறையினர் பறிமுதல் செய்து சென்றார்கள் என்ற விபரம் தெரியவில்லை ஊழல் செய்த பணத்தில் இந்த கார் வாங்கப்பட்டதா என்ற விவரமும் இதுவரை நமக்கு தெரியவில்லை. பெரும்பாலும் இந்த காருக்கான ஆவணங்கள் முறையாக இல்லாத காரணமாக இந்த காரை அமலாக்க துறையினர் பறிமுதல் செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமலாக்கத்துறையினர் இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் பணங்களை முதலீடு செய்திருக்கும் நபர்கள் மீது சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியாக தற்போது ஜார்கண்ட் மாநில முதல்வர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவரது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது


Click it and Unblock the Notifications









