இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! (பி.கு - சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல)

வடிவேலு காமெடியை மிஞ்சும் வகையில், இந்திய சாலைகளில் தினமும் நடக்கும் கூத்துக்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். (பின் குறிப்பு: சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல)

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் 1.50 லட்சம் பேர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு முதன்மையான காரணமாக உள்ளது.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

ஒரு சில நாடுகளில் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்கின்றனர். ஆனால் இந்தியாவிலோ நிலைமை அப்படியே தலை கீழாக இருக்கிறது. இங்கு வாகன ஓட்டிகளுடன் சேர்ந்து பாதசாரிகளும் சாலையில் எக்கச்சக்கமாக காமெடி செய்கின்றனர். வடிவேலுவின் திரைப்படங்களை மிஞ்சும் வகையிலான இத்தகைய காமெடிகளை அனேகமாக இந்தியாவில் மட்டுமே காண முடியும்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

அவ்வாறு வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலைகளில் செய்யும் சில காமெடிகளைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்திய சாலைகளில் நடக்கும் இந்த கேலி கூத்துக்களை வெளிநாடுகளில் கிண்டல் அடிக்கும் நிலை உள்ளது என்பதை மனதில் வைத்து கொண்டு மேற்கொண்டு செய்தியை படியுங்கள்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

இந்தியாவில் சில பாதசாரிகள் சாலையின் நடுவே ஹாயாக நடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இது சாலை என்பதையே மறந்து விட்டு, ஏதோ பூங்காவிற்குள் ஜாலியாக செல்வதை போல் கையை வீசி கொண்டு நடக்கும் பாதசாரிகளை நீங்கள் அடிக்கடி பார்த்து எரிச்சல் அடைந்திருக்க கூடும். மோட்டார் வாகனங்களை எல்லாம் அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

சாலை என்பது நடந்து செல்வதற்கு மட்டும்தான் போடப்பட்டுள்ளது என அவர்கள் நினைத்து கொள்கிறார்கள் போல. பிஜிலி ரமேஷ் பாணியில் சொல்வதென்றால், இது மிகவும் தவறான விஷயம். நீங்கள் ஒய்யாரமாக நடந்து செல்வதற்காக மட்டும் சாலை அமைக்கப்படவில்லை. எனவே சாலையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் பாதசாரிகளுக்கான நடைபாதையை பயன்படுத்துங்கள்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

'அவுங்களுக்கு நல்லா எடுத்து சொல்லுங்க பாஸ்' என வாகன ஓட்டிகள் வரிந்து கட்டி கொண்டு வர வேண்டாம். ஏனெனில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளும் சமயங்களில், நடைபாதைகளில் வண்டியை ஓட்டும் பழக்கம் வாகன ஓட்டிகள் பலருக்கும் இருக்கிறது. இதுவும் தவறான விஷயம்தான் என்பதை வாகன ஓட்டிகளும் உணர வேண்டும்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

அதெல்லாம் சரிங்க... நடைபாதை, நடைபாதைனு சொல்றீங்களே அப்டினா என்ன? என நீங்கள் யோசிப்பதும் புரிகிறது. உங்க சந்தேகம் நியாயம்தான் பாஸ். ஏனெனில் இந்தியாவின் அனேக இடங்களில் நடைபாதை என்ற ஒன்று கிடையாது. அப்படியே இருந்தாலும் கூட, பூக்கடை, பழக்கடைகாரர்கள் ஆக்கிரமித்து விடுகின்றனர்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

சரி, இருக்கட்டும். அடுத்த விஷயத்திற்கு வருவோம். கும்பலாக சுத்துவோம் பாட்டு வருவதற்கு முன்னதாகவே இந்திய சாலைகளில் பாதசாரிகள் கும்பலாகதான் சுற்றி கொண்டுள்ளனர். அதாவது 4-5 பேர் ஒன்றாக செல்லும்போது, ஒருவர் பின் ஒருவராக வரிசையில் சென்றால் பரவாயில்லை. ஆனால் அதை விடுத்து, ஒருவருக்கு அருகில் ஒருவர் என அனைவரும் கும்பலாகதான் செல்வார்கள்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

அதுவும் ஏதோ நாசா விண்வெளி வீரர்கள் எல்லாம் தங்கள் விண்கலத்தில் ஏறுவதற்கு செல்வது போல் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களின் முகத்தில் ஒன்றை கவனித்து பாருங்கள். நிச்சயமாக நாசா விண்வெளி வீரர்களின் அதே கம்பீரம் இருக்கும். போதாக்குறைக்கு கையை வேறு கோர்த்து கொள்வார்கள். இந்த உச்சகட்ட காமெடி எல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

சரி, இருக்கட்டும். அடுத்த விஷயத்திற்கு வருவோம். இன்டிகேட்டரை ரைட் சைடில் போட்டு விட்டு லெப்ட் சைடில் வண்டியை திருப்பும் காமெடி மட்டுமல்லாது, இன்டிகேட்டரையே போடாமல் திடீர் திடீரென வண்டியை ஏதோ ஒரு பக்கம் திருப்பி மற்றவர்களை பயமுறுத்தும் காமெடியும் இந்தியாவில்தான் எக்கச்சக்கமாக நடக்கும்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

அது மட்டுமா? இன்டிகேட்டரை போடாமல் வண்டியை திருப்பியதன் காரணமாக ஏதாவது 'சம்பவம்' நடந்து விட்டால், இவர்கள் செய்யும் அலப்பறையே வேற லெவலில் இருக்கும். சம்பவத்திற்கு பின் இன்டிகேட்டரை ஆன் செய்து விட்டு, நான் இன்டிகேட்டர் போட்டுட்டுதான் வந்தேன் என லந்து கொடுப்பார்கள். எதற்கும் இவர்களிடம் கொஞ்சம் சூதானமாகவே இருங்கள்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

சிரிக்காதீங்க பாஸ். இன்னும் எக்கச்சக்கமா இருக்கு. சிக்னல் பச்சை விளக்கிற்கு மாற ஒரு சில வினாடிகள் இருக்கும்போது, நீங்கள் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். ஏதோ பார்முலா 1 ரேஸ் ஆரம்பிக்கப்போவதை போல் அனைவரும் இன்ஜினை ஸ்டார்ட் செய்து உர்... உர்... என்று முறுக்குவார்கள். அவ்வளவுதான். மற்றவர்களின் காது சவ்வு கிழிந்து விடும்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

இது போதாதென்று சிக்னல் பச்சை விளக்கிற்கு மாறிய உடனே அனைவரும் ஹாரனை வேறு அடிப்பார்கள். அவ்வளவு அவசரம். சிக்னலில் பச்சை விளக்கு எரிந்த உடனேயே ஹாரனை அடிக்க வேண்டும் என்பது இந்தியாவில் எழுதப்படாத விதி போல. மேலும் எதற்கு ஹாரனை அடிக்கிறோம் என்பதே தெரியாமல், ஜாலிக்காக ஹாரன் அடித்து கொண்டு செல்லும் காமெடியையும் நீங்கள் இங்குதான் காண முடியும்.

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

ஒரு வேளை வேறு ஏதேனும் ஒரு வாகனத்துடன் மோதி விட்டாலும் கூட, இவர்கள் அலப்பறை தாங்க முடியாது. தவறு அவர்கள் மீதே இருந்தாலும் கூட, இல்லவே இல்லை என சாதித்து சண்டை கட்டுவார்கள். இதுபோன்ற சண்டைகளை இந்திய சாலைகளில் நீங்கள் தினந்தோறும் கண்டு களிக்க முடியும். டோண்ட் மிஸ் இட்!!

இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல

ஆனால் இதனை வேடிக்கையான பதிவாக எடுத்து கொள்ள வேண்டாம். இந்திய சாலைகளில் தினந்தோறும் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் திருந்தாதவரை இங்கு எதுவுமே மாறப்போவதில்லை.

எனவே இதனை உணர்ந்து பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுங்கள். போக்குவரத்து விதிகளை எப்போதும் பின்பற்றுங்கள். உங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!!

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here Are The 10 Funny Things That Happen Only On The Indian Roads. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X