விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

விமானங்களில் வழங்கப்பட்டிருக்கும் ஓவர்விங் எக்ஸிட் (Airplanes Overwing Exits) பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

பேருந்துகளில் இருப்பதைப் போலவே கமர்சியல் விமானங்களிலும் அவசரகால வெளியேற்றங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அவை சற்று வித்தியாசமானதாக இருக்கும். விமானங்களின் உயரம் பல மடங்கு அதிகம் என்பதால், அதில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்பதற்காக சில தனித்துவமான வசதிகளுடன் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். இதேபோல், வெவ்வேறு விதமான அவசரகால வெளியேற்றங்களும் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

அவற்றில், முக்கியமான ஒன்றாக ஓவர்விங் அவசரகால வெளியேற்றம் இருக்கின்றது. இது வழக்கமான அவசரகால வெளியேற்றத்தில் இருந்து சற்றே மாறுபட்டுக் காணப்படும். போயிங் 737 விமானம் தொடங்கி ஏர்பஸ் ஏ320 வரையிலான உலகின் முக்கியமான விமானங்கள் பலவற்றில் இந்த வெளியேற்றம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

இத்தகைய ஓர் முக்கியமான வெளியேற்றத்தை பற்றிய சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, ஓவர்விங் என்றால் என்ன?, இது வழக்கமான அவசரகால வெளியேற்றங்களில் இருந்து எப்படி மாறுபட்டு காட்சியளிக்கின்றது?, போன்ற பல்வேறு முக்கிய தகவல்களையே இப்பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

ஓவர்விங் வேளியேற்றம் (Overwing Exits)

விமானத்தின் இறக்கையின் வாயிலாக வெளியேறும் இந்த வசதியையே ஓவர்விங் வெளியேற்றம் என அழைக்கின்றோம். பொதுவாக ஓர் விமானத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் ஏணி அமைப்பு கொண்ட வாகனம் அல்லது பிற இறங்கு உபகரணத்தின் வாயிலாக மட்டுமே வெளியேற முடியும்.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

வழக்கமான நேரங்களில் இதை பயன்படுத்தி வெளியே வந்துவிடலாம். ஆனால், இக்கட்டான சூழல்களில் இந்த உபகரணங்களுக்காக காத்திருந்தோம் என்றால், சோலி முடிந்துவிடும். இந்த காரணத்திற்காகவே பிற வாகனங்களில் இருப்பதைப் போல் விமானங்களிலும் அவசரகால வெளியேற்றங்கள் வழங்கப்படுகின்றன.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

இவை ஏற்கனவே கூறியதை போல் தனித்துவமான தோற்றத்தையும், வசதியையும் கொண்டிருக்கும். இதற்கு மிக சிறந்த உதாரணமாக ஓவர்விங் எக்ஸிட் இருக்கின்றது. இது விமானங்களில் இருக்கும் வழக்கமான எமர்ஜென்சி எக்ஸிட்டைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமானதாக இருக்கும். விமானத்தில் இதற்கென பிரத்யேக வாயில்கள் நிறுவப்பட்டிருக்கும் என்றால் பாருங்களேன்.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

அந்த வாயில்கள் நேராடியாக ரெக்கைகளுக்கு மேலே நடந்து செல்லும் வகையில் இருக்கும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் அவசரகால சூழலில் பயணிகளை அவர்களாகவே தப்பிக்க செய்ய இந்த வாயில் அனுமதிக்கும்.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

பாரம்பரிய அவசரகால வெளியேற்றத்திற்கும், ஓவர்விங் எக்ஸிட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பெரும்பாலான விமானங்களில் வழக்கமான அவசரகால வெளியேற்றம் மற்றும் ஓவர்விங் அவசரகால வெளியேற்றம் ஆகிய இரண்டும் வழங்கப்படுகின்றன. இரண்டும் பயணிகளை தப்பிக்க வைக்கவே பயன்படுகின்றன. ஆனால், ஒரே மாதிரியாக இல்லாமல் சற்று வித்தியாசமான வழிகளில் அவை வெளியேற உதவுகின்றன.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

இதேபோல் இரண்டின் எக்ஸிட் கதவுகளும் வித்தியாசமானவை. அதே நேரத்தில் இரண்டும் வெவ்வேறு இடங்களில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். மேலே கூறியதை போல் ஓவர்விங் எக்ஸிட் கதவுகளானது ரெக்கைகளுக்கு நேராக இடம் பெற்றிருக்கும். ஆனால், வழக்கான அவசரகால வெளியேற்றங்கள் வேறு இடங்களில் (இறக்கை அல்லாத பகுதிகளில்) இடம் பெற்றிருக்கும்.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

அதேநேரத்தில், ஓவர்விங் எக்ஸிட்டின் கதவுகள் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும். இதனை கழட்டுவது மிக சுலபமானது. ஒவ்வொருவராக வெளியேறும் வகையில் அது இருக்கும். வழக்கமான அவசரகால வெளியேற்றம் விசாலமானதாக இருக்கும். இவையே இரண்டு வெளியேற்றங்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்கள் ஆகும்.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

ஓவர்விங் எக்ஸிட்டை எப்படி பயன்படுத்துவது?

எல்லாம் சரிதாங்க விமானத்தின் ரெக்கைகளும் உயரமா இருக்குமே, அதுல இருந்து இளம் வயதுடையவர்கள் குதிச்சு தப்பிச்சிருவாங்க, சின்ன பசங்க, பெரியவங்க எல்லாம் எப்படி இதுல இருந்து தப்பிப்பாங்க அப்படினுதானே கேக்குறீங்க?, இதோ உங்களுக்கான பதில், ஓவர்விங் எக்ஸிட் இருக்கும் அந்த இடத்தில் தானாக காற்றை நிரப்பிக் கொண்டு சருக்கு மேடை போல் மாறக்கூடிய பலூன் அமைப்பு இருக்கும்.

விமானத்தின் இறக்கை மேலே ஏறி தப்பிக்க முடியுமா?.. ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இதோ!

இது மிக பாதுகாப்பாக பயணிகள் தரையை வந்தடைய உதவியாக இருக்கும். அவசரகாலத்தில் ஓடுவதனால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கும் பொருட்டு இந்த சருக்கு மேடைபோன்ற பலூன்கள் ஓவர்விங் எக்ஸிட் பகுதிகளில் வழங்கப்பட்டிருக்கும். இத்துடன், பயணிகள் பாதுகாப்பாக இறங்குவதற்காக ஓர் கயிறு ஒன்றும் கதவு பகுதியில் இருக்கும். அதனை ரெக்கையில் உள்ள துளையுடன் இணைப்பதன் வாயிலாக, பயணிகள் கூடுதல் பாதுகாப்புடன் வெளியேற முடியும்.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 10, 2022, 13:45 [IST]
English summary
Here full details about overwing exits on airplanes
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+