இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்ருவாங்க!

வாகன இயக்கத்தின்போது தேவைப்படும் ஐந்து முக்கிய ஆவணங்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு விதிமீறல் வாதிகள் மீது அதிரடி நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து விதிமீறல்களே பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

இத்தகைய விதிமீறல்களைக் களைவதனால் விபத்துகளின் எண்ணிக்கையைக் கணிசமாக குறைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு மாநில அரசுகளும் போக்குவரத்து விதிகளையும், அபராதங்களையும் கடுமையாக்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அண்மையில் தமிழக அரசும் அதன் சார்பில் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு, அவற்றிற்கு விதிக்கப்படும் அபராதங்களை பல மடங்கு அதிகப்படுத்தியது.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியதுடன் சேர்த்து, வாகன இயக்கத்திற்கு தேவையான ஆவணங்களையும் ஒவ்வொரு வாகன உரிமையாளர்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தத் தொடங்கியிருக்கின்றனர். வாகன திருட்டு போன்ற வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

இந்த மாதிரியான சூழலில் சில வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களுக்கான முக்கியமான ஆவணங்களை கையில் வைத்திருக்க தவறிவிடுகின்றனர். இவ்வாறு உரிய ஆவணம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது போக்குவரத்து விதிகளின் குற்றமாகும். இதற்கு அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும். இதனைத் தவிர்க்க ஐந்து ஆவணங்களை எப்போதும் வைத்திருப்பது கட்டாயமாகும். அந்த சான்றுகள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

டிரைவிங் லைசென்ஸ்:

வாகனத்தை இயக்க தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் டிரைவிங் லைசென்ஸும் ஒன்று. இதனை மிக முக்கியமான ஆவணமாக இந்திய போக்குவரத்து விதிகள் கருதுகின்றது. அதனால், ஐந்து முக்கிய ஆவணங்களின் பட்டியலில் இந்த ஆவணத்தை முதலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் ஓர் வாகனத்தை இயக்க தகுதியானவாரா, இல்லையா, என்பதை இந்த ஆவணமே உறுதிப்படுத்தும்.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி இந்த ஆவணம் இல்லாமல் வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. நம்முடைய நாட்டில் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமத்தை ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஃபிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, பூட்டான் மற்றும் கனடா போன்ற உலக நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

பதிவு சான்று:

வாகனம் பற்றிய அனைத்து தகவல்களையும் அடக்கி இருக்கக் கூடிய ஓர் ஆவணமே பதிவு சான்று. ஓர் வாகனம் குறிப்பிட்ட மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதை இந்த ஆவணமே உறுதிப்படுத்தும். எனவேதான் இந்த ஆவணம் கட்டாயம் என கூறப்படுகின்றது. இந்த ஆவணம் இல்லாத வாகனங்களுக்கு மிகக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

ரூ. 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகின்றது. மேலும், முதல் முறையாக இந்த விதிமீறலில் ஈடுபடும்பட்சத்தில் 6 மாத சிறைத் தண்டனையும், தொடர்ச்சியாக ஈடுபடும்பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆகையால், வாகனத்தை செகண்ட் ஹேண்டில் வாங்கும்போது உரிய ஆர்சி-யை கேட்டு வாங்கி வைத்துக் கொள்வது.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

விலை குறைவாகக் கிடைக்கின்றது என பலர் செகண்ட் ஹேண்டில் ஆர்சி புத்தம் இல்லாமலே வாகனங்களை வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இந்த விதிமீறலுக்கு ரூ. 2500 முதல் 5000 ரூபா அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

மூன்றாம் நபர் காப்பீடு:

வாகனங்களின் இயக்கத்திற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களில் காப்பீடும் ஒன்று. இது இல்லாத வாகனத்திற்கு ரூ. 2 ஆயிரம் தொடங்கி ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தில் இருந்து மட்டுமல்ல விபத்தினால் ஏற்படும் பெரும் இழப்புகளில் இருந்து தப்பிக்கவும் காப்பீடு உதவும். ஆகையால், இதை எந்த காரணம் கொண்டு வைத்திருக்க தவறாதீர்கள்.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

பியூசி சான்று:

உங்களுடைய வாகனம் எந்த அளவு மாசை வெளிப்படுத்துகின்றது என்பதை வெளிக்காட்டும் சான்றே பியூசி. குறிப்பிட்ட அளவை மீறி மாசை வெளியேற்றும் வாகனங்களின் இயக்கத்திற்கு அனுமதி கிடையாது. எனவேதான் ஒவ்வொரு வாகன உரிமையாளர்களும் தங்கள் வசம் கட்டாயம் பியூசி சான்று வைத்திருக்க வேண்டும் என இந்திய மோட்டார் வாகன சட்டம் கூறுகின்றது. இது இல்லாத வாகனங்களுக்கும், காற்றை அதிகம் மாசுபடுத்தும் வாகனங்களுக்கும் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

அடையாள சான்று:

மேலே பார்த்த ஆவணங்களுடன் சேர்த்து சில அடையாள சான்றுகளை வைத்திருப்பதும் முக்கியமாக இருக்கின்றது. சில நேரங்களில் காவல்துறையினருக்கு அதிகபட்ச சந்தேகம் எழும்பட்சத்தில் அவற்றை கேட்கக்கூடும். ஆகையால், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருத்தல் அவசியம்.

இந்த ஐந்து சான்று கையில இல்லனா முதலமைச்சராலகூட உங்கள காப்பாத்த முடியாது... அபராதம் நிச்சயம் போட்டுடுவாங்க!

மேலே பார்த்த ஆவணங்களை ஹாட் காபியாகவோ அல்லது டிஜி லாக்கர் அல்லது எம்-பாரிவாஹன் போன்ற ஆப்களில் வைத்திருந்தாலோ போதுமானது. காவல்துறையினர் டிஜிட்டல் ஆவணங்களையும் தற்போது ஏற்க தொடங்கியிருக்கின்றனர். குறைந்தபட்சம் இதுவும் இல்லாத பட்சத்திலேயே அபராதம் விதிக்கப்படுகின்றது. ஆகையால், அபராதத்தை ஏதாவது ஓர் வழியில் மேலே பார்த்த ஐந்து ஆவணங்களையும் கட்டாயம் வைத்திருப்பது அவசியம்.

Article Published On: Friday, November 4, 2022, 14:05 [IST]
English summary
Here is 5 important documents you must carry while driving
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+