மோட்டார் வாகன சட்டம் பிரிவு 166 பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க!

மோட்டார் வாகன சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கிய பிரிவுகளில் ஒன்றான 166 பிரிவு பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இதன் முக்கியத்துவம் என்பது பற்றி பார்க்கலாம், வாங்க.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 166 பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க... ரொம்ப முக்கியமானது!

பிரிவு 166 பற்றி பார்ப்பதற்கு முன்னர் இந்திய மோட்டார் வாகன சட்டம் பற்றிய ஓர் சிறிய அலசலை முதலில் பார்க்கலாம். இந்திய மோட்டார் வாகன சட்டம் ஓர் மேற்பார்வையாளர் (Supervisor) போன்று போக்குவரத்து விதிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 166 பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க... ரொம்ப முக்கியமானது!

அது, மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல், அவற்றிற்கு அனுமதி வழங்குதல், அரசுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கான சிறப்பு விதிகளை உருவாக்குதல், போக்குவரத்து ஒழுங்குமுறைகளை அடிக்கோடிட்டுக் காட்டுதல் மற்றும் பொறுப்புகளை வரையறுத்தல், விதிமீறல்களுக்கு அபராதங்களை வரையறுத்தல் போன்ற மிக முக்கியமான கடமைகளை அது ஆற்றி வருகின்றது.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 166 பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க... ரொம்ப முக்கியமானது!

இதுமட்டுமின்றி, விபத்து போன்ற சிக்கலான நேரங்களில் அவற்றை நிவர்த்தி செய்யவும் மோட்டார் வாகன சட்டம் செயல்படுகின்றது. விபத்துகள் துரதிர்ஷ்டவசமானவை. சில நேரங்களில் நம்முடைய தவறுகளாலும் இது நடைபெறலாம். இதுமாதிரியான நிகழ்வுகளின்போது உரியவர்களுக்கான நீதியை நிலை நாட்டவும், இழப்புகளுக்கு இணையான இழப்பீட்டை பெற்று தரவும் இது உதவுகின்றது.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 166 பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க... ரொம்ப முக்கியமானது!

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 166 என்றால் என்ன?

இப்போதுதான் நாம் முக்கியமான கட்டத்திற்குள் நுழைய இருக்கின்றோம். அதாவது, 166 சட்ட பிரிவு என்றால் என்ன? என்பது பற்றிய தகவலை பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவிறகுள் போகலாம்.

விபத்தில் சிக்கியிருந்தால், மோட்டார் விபத்துகளுக்கான உரிமை கோரல் தீர்ப்பாயத்தில் (Motor Accidents Claims Tribunal) முன் வைக்க உதவுவதே இந்த பிரிவின் முக்கிய பணியாகும். அதாவது, உரிய இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க இந்த விதி உதவும்.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 166 பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க... ரொம்ப முக்கியமானது!

166 பிரிவின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் விதிகள்:

1. காயம் அடைந்த நபரால் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

2. பாதிப்புக்குள்ளான வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறியவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் பாதுகாவலர்களால் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

3. விபத்தில் இறப்பு நேர்பட்டால், இறந்தவரைச் சார்ந்த குடும்பத்தினர் எவராலும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சட்டப்பூர்வமான ஆவணம் அவசியம்.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 166 பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க... ரொம்ப முக்கியமானது!

இழப்பீட்டை எங்கு கோர முடியும்?

166 பிரிவின் கீழ் எங்கு, எந்த இடத்தில் இருக்கும் தீர்ப்பாயத்தின் வாயிலாக இழப்புக்கான உரிய நீதியை பெறுவது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அவற்றிற்கான பதில் இதோ:

1. வாகன உரிமையாளர் வசதிக்கும் பகுதியில் உள்ள தீர்ப்பாயத்தில் நம்மால் விண்ணப்பிக்க முடியும்.

2. உரிமை கோருபவர் வசதிக்கும் பகுதி அல்லது விபத்து நடைபெற்ற பகுதி இங்கு உள்ள எந்த தீர்ப்பாயத்தின் வாயிலாகவும் உரிய இழப்பிற்கான ஆறுதலைப் பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியும்.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 166 பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க... ரொம்ப முக்கியமானது!

எப்போது ஒரு நபரால் இழப்பீடு கோர முடியும்?

விபத்து நடைபெற்ற இந்த காலக்கட்டத்திற்குள் இழப்பீடுக்கான கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என எந்த காலக்கெடுவையும் இது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் தீர்ப்பாயத்திற்கு நம்முடைய கோரிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். ஆகையால், முடிந்தளவு விரைவாக இதனை செய்வது சிறந்தது.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 166 பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க... ரொம்ப முக்கியமானது!

1. விபத்தின்போது உடல் அல்லது தலையில் காயம் ஏற்படுபவர்கள்.

2. விபத்தினால் சொத்து அல்லது பிற சேதத்தை சந்தித்தவர்கள்.

3. மோட்டார் வாகனத்தினால் ஏற்பட்ட விபத்துகளுக்கு மட்டுமே இந்த தீர்ப்பாயத்தின் வாயிலாக இழப்பீட்டை கோர முடியும்.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 166 பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க... ரொம்ப முக்கியமானது!

மேலே பார்த்தவற்றில் உதவும் வகையிலேயே பிரிவு 166 செயல்பட்டு வருகின்றது. ஆனால், நம்மில் பலர் இதுகுறித்து அறியாமல் வாகனங்களின் உரிமையாளர்களாக இருந்து வருகின்றோம். வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பதைப் போல அவற்றை சார்ந்திருக்கும் முக்கியமான விதிகள் பற்றி அறிவது கட்டாயம் ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is all details about motor vehicle act section 166
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X