'CD' நம்பர் பிளேட் கொண்ட காரோட எந்த பிரச்னையும் வச்சுக்காதீங்க... அப்புறம் ரொம்ப 'சிக்கமா' போயிரும்!

இந்தியாவில் பல விதமான நம்பர் பிளேட்டுகள் (Number Plate) பயன்பாட்டில் உள்ளன. அதில் ஒன்றே சிடி (CD) நம்பர் பிளேட் ஆகும். இது நீல நிற பிளேட்டையும், வெள்ளை நிற எழுத்துக்களையும் கொண்டிருக்கும். இத்துடன், சிடி என்கிற ஆங்கில எழுத்து இடம் பெற்றிருக்கும்.

இந்த நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தை அவ்வளவு எளிதில் நம்மால் பொது சாலையில் பார்த்துவிட முடியாது. ஏனெனில் இந்த வகை நம்பர் பிளேட் தூதரகத்தைச் சேர்ந்த வாகனங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த பதிவெண்ணைக் கொண்ட வாகனங்களுக்கு டிராஃபிக் ரூல்ஸ் என்பது கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Cd number plate

Image Courtesy: Team BHP அதேவேளையில், சில நேரங்களில் வேக வரம்பை மீறுவதற்கான அனுமதி இந்த வாகனங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதேபோல், குறிப்பிட்ட சில பகுதிகளில் பார்க்கிங் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகின்றது. இத்துடன், சிக்னல்களையும் இந்த வாகனங்களால் புறக்கணிக்க முடியாது. இருப்பினும், குறிப்பிட்ட பகுதிகளில் இந்த போக்குவரத்து விதிகளை மீறிக் கொள்ள சிடி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்ற காரணத்தினாலேயே இந்த வாகனங்களிடம் பிரச்னை வைத்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. மீறி ஏதேனும் வம்பு வச்சுக்கிட்ட போலீஸின் நடவடிக்கை வேற மாதிரியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. சிடி வகை நம்பர் பிளேட்டுகள் பிரத்யேகமாக இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் வாயிலாக ஒதுக்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

சிடி நம்பர் பிளேட்: சிடி என்பது 'கார்ப்ஸ் டிப்ளோமோடிக்' என்பதைக் குறிக்கின்றது. இந்த வகை நம்பர் பிளேட் பிரத்யேகமாக தூதரகத்திற்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. முன்னதாக கூறியதைப் போல நீல நிற பிளேட்டில் வெள்ளை நிற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும். இரண்டு இலக்க குறியீடு, சிடி என்கிற எழுத்து மற்றும் பதிவு எண் ஆகியவை மட்டுமே அதில் இடம் பெற்றிருக்கும்.

பிரத்யேக ஏற்பாடு: இந்தியாவில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தங்களது வாகனங்களைப் பதிவு செய்து கொள்ள மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துக் கொடுத்திருக்கின்றது. பிற வாகனங்களைப் போல இந்த வகை வாகனங்களுக்கும் பதிவு சான்று வழங்கப்படுகின்றது. ஒருவேளை இந்த காரை தூதரக அதிகாரி வேறு ஒரு நபரின் கைகளுக்கு மாற்றினால் அந்த பதிவு செல்லாது. அந்த வாகனம் வழக்கமான பதிவு எண்ணிற்கு மாற்றப்பட வேண்டும்.

பதிவு செய்வதற்கான வழிமுறைகள்: மூன்று படிவங்களை தூதரக அதிகாரி பூர்த்தி செய்ய வேண்டி இருக்கின்றது. இந்த விண்ணப்பம் தூதரகத்தின் முதல் நிலை அதிகாரி வாயிலாக மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதைத்தொடர்ந்து, மத்திய மோட்டார் வாகன சட்டம், 1989 விதி 81ன் படி உரிய வரி மற்றும் கட்டணம் செலுத்த வேண்டும். இதை செய்யும்பட்சத்தில் மட்டுமே வாகனம் சிடி பதிவு செய்யப்படும்.

சிறப்பு வசதிகள்: இந்த வாகனங்களுக்கு டோல் கட்டணம், பார்க்கிங் கட்டணம் எதுவுமே வசூலிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், அமலாக்கப் படைகளாலும்கூட இந்த வாகனத்தை தடுத்து நிறுத்தவோ அல்லது பறிமுதல் செய்ய முடியாது. இத்தகைய பவரே சிடி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது தவிர சில முக்கிய ஆவணங்களும் பதிவின்போது கோரப்படுகின்றது. அனைத்தும் சரியாக இருப்பின் மட்டுமே சிடி வகை நம்பர் பிளேட் அந்த வாகனத்திற்கு வழங்கப்படும். தூதரக அதிகாரிகள் எளிதில் அடையாம் காணப்படுவதற்கும், அவர்கள் தடையில்லா பயணத்தை இந்தியாவில் தொடரவுமே இந்த வகை பதிவெண் வழங்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, June 16, 2023, 11:49 [IST]
English summary
Here is details about cd number plate
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+