இன்று பெங்களூரு வானத்தில் நடைபெற இருக்கும் தரமான சம்பவம்.. டிக்கெட் விலை இவ்ளோ கம்மியா? நாமும் போகலாம் போலையே!

ஆசியாவின் மிகப் பெரிய விமான ஷோ இன்று (பிப்ரவரி 13) தொடங்கி 17 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த விமான ஷோ நிகழ்வில் கலந்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?, எவ்வளவு கட்டணம்?, டிக்கெட்டை வாங்குவது எப்படி? என்கிற முக்கிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆசியாவின் மிகப் பெரிய விமான ஷோ நடைபெற இருக்கின்றது. இன்று (பிப்ரவரி 13) தொடங்கி 17 ஆம் தேதி வரை இந்த விமான கண்காட்சி நடைபெற இருக்கின்றது. பிரதமர் மோடியே இந்த நிகழ்ச்சியை வரும் 13 ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கின்றார். யலஹங்காவில் உள்ள ஏர் ஃபோர்ஸ் (Air Force Station) மைதனாத்திலேயே விமான ஷோ நடைபெற இருக்கின்றது. ஏரோ இந்தியா 2023 (Aero India 2023) எனும் பெயரில் பிரமாண்ட விமான ஷோ இந்தியாவில் நடைபெற இருக்கின்றது.

பெங்களூரு

இந்தியாவில் விமான ஷோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டும் நடைபெற இருக்கின்றது. 1996 ஆம் ஆண்டில் இருந்து பெங்களூருவில் இந்த ஷோ நடைபெற்று வருகின்றது. வெற்றிகரமாக 13 முறை இங்கு ஏர் ஷோ நடைபெற்றிருக்கின்றது. உலக தலைவர்கள், விமானத்துறை முதலீட்டாளர்கள், பெரும் விமான உற்பத்தி நிறுவனங்கள் கலந்துக்கொள்வது வழக்கம். மேலும், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்டோர் இதில் கலந்துக் கொள்ள முடியும்.

அந்தவகையில், இந்த முறையும் பெங்களூருவில் வானத்தைக் கிழித்துக் கொண்டும் பறக்கும் விமானங்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கும் பன்முக விமானங்களைக் காணும் வாய்ப்பு இம்முறையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. இதற்கான டிக்கெட்டுகளை எங்கு பெறுவது, டிக்கெட் விலை எவ்வளவு என அனைத்து விபரங்களையும் இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

பெங்களூரு

ஏரோ இந்தியா 2023 என்ட்ரீ

பெங்களூருவில் நடைபெற இருக்கும் ஏர் ஷோ-வில் பங்குபெற பேட்ஜ் பேட்ஜாகவே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். இதற்கான விபரங்களை கண்காட்சியாளர்கள் http://www.aeroindia.gov.in எனும் தளத்திலேயே சமர்பிப்பார்கள். வணிக பார்வையாளர்கள் இந்த வெப்சைட் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில முக்கிய தகவல்கள் வழங்கிய பின்னர் விமான ஷோவில் கல்ந்துக் கொள்வதற்கான கிளியரன்ஸ் கிடைக்கும். இதற்கு பின்னரே பார்வையாளர்கள் ஷோவிற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும். கட்டணம் செலுத்திய பின்னற் பார்வையாளருக்கான அனுமதி சீட்டு வழங்கப்படும். இ-டிக்கெட்டாக அது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெங்களூரு

டிக்கெட் விலை

மூன்று விதமான சுற்றுலா டிக்கெட்டுகள் வழங்கப்பட இருக்கின்றன. விமானங்களை பார்வையிடும் டிக்கெட், பொது பார்வையாளர் டிக்கெட் மற்றும் வணிக பார்வையாளர் டிக்கெட் என மூன்று விதமான டிக்கெட்டுகளே வழங்கப்பட உள்ளன. பொது பார்வையாளர் மற்றும் விமானங்களை பார்வையிடும் டிக்கெட்டானது வாங்கப்படும் அந்த ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். பொது பார்வையாளர்கள் எக்ஸ்பிஷனைக் கண்டுகளிக்க ரூ. 2,500 கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டு உள்ளது.

வெளிநாட்டினருக்கு 50 அமெரிக்க டாலர்கள் கட்டணம் ஆகும். இந்திய விருந்தினர் பார்வையாளர்கள் ரூ. 1000 ஆயிரம் செலுத்தினாலே போதும். இதேபோல், வெளிநாட்டு விருந்தினர் பார்வையாளர்களுக்கு 50 அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பிசினஸ் விசிட்டர்களுக்கு ரூ 5 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியராக இருப்பின் மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும். வெளிநாட்டினர் 150 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி உடன் சேர்ந்த கட்டணம் இதுவாகும்.

பெங்களூரு

பாஸ் மற்றும் டிக்கெட்

ஒரு முறை நுழைதலுக்கான டிக்கெட் அல்லது ஒரு நாள் முழுக்க செல்லுபடியாகும் டிக்கெட் என இரு விதமான பாஸ்களை விமானங்களைக் காட்சிப்படுத்தும் நிறுவனங்கள் அதன் தனிப்பட்ட பார்வையாளர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அழைப்பிதழ் இருந்தாலும் இதில் எளிதில் பங்குகொள்ள முடியும். அழைப்பிதழ்கள் இருக்கும் எனில் விமான ஷோ நடைபெறும் நாட்கள் வரை அது செல்லுபடியாகும்.

பெங்களூரு ஏர்போர்ட்டில் ஏற்பட்ட குழப்பம்

கடந்த வியாழன் அன்று பெங்களூரு ஏர்போட்டில் விமான ஷோவால் குழப்பமான சூழல் காணப்பட்டது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமான ஷோ ஒத்திகைப் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக சில மணி நேரங்கள் அங்கு குழப்பம் நிலவியது. விமான ஷோ யலஹங்கா விமான தளத்திலேயே நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் இருந்து பார்வையாளர்கள் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.

Article Published On: Sunday, February 12, 2023, 8:30 [IST]
English summary
Here is full details about aero india 2023
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X