உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் ஃப்யூவல் தேவைப்படும் என்கிற தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூ-வீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் என்ன மாதிரியான மைலேஜை வழங்கும், ஒரு கிமீ இயங்க அவை எந்தளவு பெட்ரோலை உறிஞ்சும் என்கிற தகவல் தோராயமாக நம்மில் பலருக்கு தெரியும். ஆனால், இந்த வாகனங்களில் மட்டுமே நாம் பயணிப்பதில்லை. சில நேரங்களில் ரயில், விமானம் மற்றும் கப்பல்களிலும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

"இல்லை இல்லை நான் இதுவரை கப்பலில் பயணித்ததே இல்லை. ஏன் அதை நெருக்கத்தில்கூட நின்று பார்த்ததில்லை" என கூறுகின்றீர்களா. நீங்க மட்டுமில்லைங்க நம்மில் பலருடைய நிலை இதுவே ஆகும். நாம் கப்பல்களில் பயணித்திருக்கவில்லை என்றாலும், நாம் ஆர்டர் செய்யும் பெரும்பாலான வெளிநாட்டு தயாரிப்புகள் கப்பல்கள் வாயிலாக பயணித்தே நம் கைகளை வந்து சேருகின்றன.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

இத்தகைய கப்பல்கள் ஓர் நாள் முழுவதும் இயங்க எந்த அளவு எரிபொருள் தேவைப்படும் என்று என்றைக்காவது நீங்கள் யோசிச்சதுண்டா. யோசிச்சாலும் இதற்கான பதில் கிடைப்பது சற்று சிரமமே. ஏனெனில், நம்மில் பலருக்கு இதுகுறித்த ஐடியாவே இருக்காது.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

இந்த நிலையை உடைத்தெறியும் வகையிலேயே மிக பிரமாண்டமான தோற்றம் கொண்ட க்ரூஸ் கப்பல்கள் ஒரு நாள் இயங்க எந்தளவு எரிபொருள் தேவைப்படும் என்கிற தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

அளவுதான் முக்கியம்:

கப்பலின் அளவை பொருத்தே எரிபொருள் பயன்பாடு மற்றும் செயல்திறன் தேவை அமைகின்றது. உதாரணமாக, ஒரு சிறிய கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடியை நோக்கி பயணிக்கின்றது என வைத்துக் கொள்வோம். இதற்கு தேவைப்படும் எரிபொருள் 100 லிட்டர் என்றால், பல மடங்கு பெரிய உருவத்தைக் கொண்டிருக்கும் க்ரூஸ் கப்பல்கள் இதே வழிதடத்தில் பயணிக்க அதன் உருவத்திற்கு ஏற்ப பல டன் எரிபொருளை பயன்படுத்தும்.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

உருவம் பெரியது என்பதால் அதிக இழுவை திறன் தேவைப்படுகின்றது. இதன் விளைவாக எரிபொருளும் அதிகளவில் உறிஞ்சப்படுகின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், ஓர் நடுநிலையான பெரிய உருவம் கொண்ட க்ரூஸ் கப்பல் ஒரு நாள் முழுவதும் இயங்க 250 டன் வரை ஃப்யூவல் தேவைப்படும். அதாவது, 80 ஆயிரம் கேலன்கள் வரை எரிபொருள் தேவைப்படுமாம். ஒரு கேலன் என்பது 4.54 லிட்டருக்கு சமம் ஆகும்.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

அதுவே ஓர் நார்மலான (சிறிய) அளவுள்ள க்ரூஸ் கப்பல் ஒரு நாள் முழுவதும் இயங்குவதற்கு 140 முதல் 150 டன் வரையிலான எரிபொருளே போதுமானதாக உள்ளது. பெரும்பாலான க்ரூஸ் கப்பல்கள் மணிக்கு 21 முதல் 24 நாட்டிக்கல் வேகத்தில் மட்டுமே பயணிக்கும். ஒரு நாட்டிக்கல் வேகம் என்பது மணிக்கு 1.85 கிமீ வேகத்திற்கு சமம் ஆகும். அதாவது, ஒரு கப்பல் இந்த வேகத்தில் தரையில் பயணிக்கும் என்றால் அதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 44.45 கிமீட்டராக மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

இத்தகைய குறைவான வேகத்திலேயே கப்பல்கள் கடலில் பயணிக்கின்றன. ஒரு பெரிய க்ரூஸ் கப்பலின் நீளம் 1,100 அடி வரை இருக்கும். இத்தகைய அளவுள்ள கப்பலில் தோராயமாக இரண்டு மில்லியன் கேலன்கள் வரையிலான எரிபொருளை எடுத்துச் செல்ல முடியும். ஓர் படகானது 40 முதல் 60 அடி நீளம் வரை மட்டுமே இருக்கும். இவற்றில் 200 முதல் 1,200 கேலன் வரையிலான எரிபொருளை நிரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

பிரபல ராயல் கரீபியன் கப்பல் ஒரு மணி நேரம் இயங்க எவ்வளவு எரிபொருளை செலவு செய்கிறது?

ஹார்மனி நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலே ராயல் கரீபியன். உலகின் இரண்டாவது மிகப் பெரிய கப்பல் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கப்பலில் இரு 4-ஸ்டோரி ஹை, 16 சிலிண்டர் வார்ட்ஸிலா மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் முழு வீச்சில் இயங்கும்போது 1,377 கேலன் எரிபொருளை ஒரு மணி நேரத்திற்கு எரிக்குமாம். அதாவது, இந்த கப்பல் ஒரு மணி நேரம் இயங்க 6259.966 லிட்டர் எரிபொருள் தேவைப்படும்.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

நாள் முழுக்க இயங்க இந்த கப்பலுக்கு 66,000 கேலன் வரை எரிபொருள் தேவைப்படும். இந்த எரிபொருளை ஒரு கப்பல் செலவு செய்கின்றது என்றால் யோசித்து பாருங்கள், வாகனத்தைவிட அதிகளவு காற்றை மாசுபடுத்துவது கப்பல்கள்தான் என்பது தெளிவாக தெரியும். இதனால்தான், சில கப்பல் கட்டுமான நிறுவனங்கள் மின்சாரத்தால் இயங்கும் கப்பல்களை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றன.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

குயின் மேரி 2

உலகின் மற்றுமொரு பெரிய க்ரூஸ் கப்பலாக குயின் மேரி 2 இருக்கின்றது. இந்த கப்பலின் ஒட்டுமொத்த நீளம் 1,132 அடி ஆகும். இதன் ஒட்டுமொத்த எடை 151,400 டன்கள் ஆகும். நினைத்துகூட பார்க்ககூட முடியாத பிரமாண்ட வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த கப்பல் சாதாரண நிலையில் மணிக்கு 29 நாட்டிக்கல் வேகத்தில் பயணிக்கும். அதேவேலையில், இந்த கப்பல் உச்சபட்சமாக 32.5 நாட்டிக்கல் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

உறிஞ்சாது... குடிக்கும்... ஒரு க்ரூஸ் கப்பல் நாள் முழுக்க இயங்க எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்?..

இத்தகைய அதிகபட்ச வேகத்தில் இந்த கப்பல் இயங்குகின்ற காரணத்தினால் வாட்டர் ராக்கெட் என்ற செல்ல பெயரிலும் குயின் மேரி2 அழைக்கப்படுகின்றது. இந்த கப்பல் ஒரு மணி நேரத்திற்கு ஆறு டன் எரிபொருளை செலவு செய்யும் என கூறப்படுகின்றது. அதுவே, நாள் முழுக்க இந்த கப்பல் இயங்க 1,30,634 லிட்டர் எரிபொருள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is full details how much fuel does a cruise chip consuming
Story first published: Wednesday, September 21, 2022, 13:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X