கொஞ்சம் அசந்தீங்கன்னா அசால்டா ஏமாத்திடுவாங்க! பெட்ரோல் பங்கில் நடக்கும் நூதன கொள்ளை!
சமீப காலமாக பெட்ரோல் பங்கில் குறைவான அளவிற்கு பெட்ரோலை போட்டுவிட்டு அதிகமாகப் பணம் வசூலிக்கும் நூதன வகையான மோசடி ஒன்று நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. என்ன வகையான மோசடி நடக்கிறது. அதில் நாம் ஏமாறாமல் இருப்பது எப்படி? இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
பெட்ரோல் என்பது நாம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு முக்கியமான விஷயமாகிவிட்டது. நாம் அனைவரும் தினமும் அல்லது வாரம் குறைந்தது மாதம் ஒரு முறையாவது பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்குச் சென்றிருப்போம். பெட்ரோல் இல்லை என்றால் மனிதன் கூட நீண்ட தூரப் பயணத்தை எல்லாம் கனவில் தான் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு பெட்ரோல் மிக அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.

சந்தேகம்
ஆனால் சில நேரங்களில் நம்மில் பலர் பெட்ரோல் போட்டுவிட்டு வாகனத்தைப் பயன்படுத்தும் போது வழக்கத்தை விடக் குறைவாகவே பயணிக்கும் போதே பெட்ரோல் காலியாகிவிட்டதாக உணருவோம். அப்பொழுது எல்லாம் நமக்கு பெட்ரோல் பங்கில் நாம் ஏமாற்றப்பட்டிருப்போமோ என்ற உணர்வு வரும் வழக்கமாகக் கொடுக்கும் மைலேஜிலிருந்து சில நேரம் பாதி மைலேஜ் தான் கிடைக்கும் இப்படியான நேரங்களில் இந்த சந்தேகம் எழும்.
இப்படியாகச் சமீபத்தில் பெட்ரோல் பங்க்களில் நடக்கும் மோசடி குறித்த தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. அதைப் பற்றிக் காணலாம். பொதுவாக பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் போடும் போது பெட்ரோல் பம்பில் பெட்ரோலை போடுவதற்கான பம்பை இடையில் நிறுத்திவிட்டு மீண்டும் போடுவார்கள். இப்படியாக இரண்டாவதாக அவர்கள் அழுத்தும் போது பெட்ரோல் விழுவதில்லை. இப்படி நாம் ஏமாற்றப்படுகிறோம் என்ற பேச்சு நிலவுகிறது.

நூதன கொள்ளை
ஆனால் இதற்கு தொழிற்நுட்ப ரீதியாகச் சாத்தியம் கிடையாது. அதனால் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் பெட்ரோல் பம்ப்களில் தற்போது உள்ள மிஷினில் தொழிற்நுட்ப ரீதியாக ஏமாற்ற முடியாத படி இருந்தாலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களால் ஏமாற்ற முடியும். அவர்கள் உங்கள் கவனத்தைத் திசை திருப்பி உங்களிடமிருந்து அதிகமான பணத்தை வசூலிக்க முடியும்.
இன்று பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் போடும் பலர் அதற்கான பில்லை வாங்குவதில்லை. பலர் அவசர அவசரமாகக் கடைசி நேரத்தில் தான் வந்து பெட்ரோல் போடுகின்றனர். இந்த இரண்டையும் பயன்படுத்திப் பல இடங்களில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நூதனமான மோசடியில் ஈடுபடுவதாகப் பல இடங்களிலிருந்து புகார்கள் வரத் துவங்கியுள்ளது. பொதுவாக ஒரு வாகனத்திற்கு பெட்ரோல் போதும் போது பம்பில் உள்ள மீட்டரை ரீசெட் செய்ய வேண்டும்.
அப்பொழுது தான் முதலிலிருந்து பெட்ரோல் கணக்கிடப்படும். ஆனால் சில ஊழியர்கள் நீங்கள் அவசர கதியில் இருக்கிறீர்கள் என்றால் உங்களை நோட்டமிட்டுக் குறி வைத்து நீங்கள் பெட்ரோல் போட வரும்போது உங்களிடம் பேச்சுக் கொடுத்து உங்கள் கவனத்தைத் திசை திரும்பி ரீ செட் செய்யாமலேயே மேலும் பெட்ரோல் அடித்து உங்களிடமிருந்து அதிகமான பணத்தை வசூலித்து விடுகின்றனர்.
எப்படி நடக்கிறது!
அதாவது முன்பு பெட்ரோல் போட்டவர் ரூ100க்கு பெட்ரோல் போட்டுச் சென்றார் என்றால் நீங்கள் உங்கள் வாகனத்திற்கு ரூ500 க்கு பெட்ரோல் போடச் சொல்கிறீர்கள் என்றால் அவர்கள் முன்பு போட்ட ரூ100ஐ ரீசெட் செய்யாமலேயே அடுத்து பெட்ரோல் போடத் துவங்கிவிடுவார்கள். உங்களிடம் ஜீரோவை காட்டாமல் உங்கள் கவனத்தைத் திசை மாற்றிவிடுார்கள்.
ரூ500 வந்ததும் பம்பை நிறுத்திவிட்டு உங்களிடம் ரூ500 வசூலிப்பார்கள். ஆனால் உங்கள் டேங்கிற்குள் விழுந்தது முன்பு போனவர் போட்டுச் சென்ற ரூ100க்கான பெட்ரோல் போக மீதம் உள்ள ரூ400க்கான பெட்ரோல் தான் டேங்கில் இருக்கும் உங்களுக்கும் அது தெரியாமல் வாகனத்தை எடுத்து சென்று விடுவீர்கள். இது வாகனம் ஓட்டும் போதும் மீண்டும் பெட்ரோல் குறையும்போது தான் எவ்வளவுக்கு பெட்ரோல் போட்டோம் எவ்வளவு தூரம் பயணித்துள்ளீர்கள் எனக் கணக்கிட்டால் தான் நீங்கள் ஏமாற்றப்பட்டதே உணருவீர்கள்.
கவனமாக இருங்க!
இதனால் இனி நீங்கள் பெட்ரோல் பங்கிற்குச் செல்லும் போது உங்கள் கவனத்தை அவர்கள் திசை திருப்ப முயற்சித்தாலும் சரி சரியாக பெட்ரோல் போடுவதற்கு முன்னர் ரீடிங் ரீசெட் செய்யப்பட்டு பூஜ்ஜியத்திற்கு வந்துவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதன்பின்னரே பெட்ரோலை உங்கள் டேங்கிற்குள் நிரப்ப அனுமதியுங்கள். சமீபகாலமாக அதிகமாக நடக்கும் இந்த வகையான மோசடியிலிருந்து கவனமாக இருங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








