இன்னும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லையா... சீக்கிரம் பண்ணிடுங்க... இல்லனா சிக்கல்தாங்க!!

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு இணைப்பது மற்றும் இணைக்கவில்லை என்றால் என்ன மாதிரியான சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இன்னும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லையா... சீக்கிரம் பண்ணிடுங்க... இல்லனா சிக்கலை சந்திக்க நேரிடும்!

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. போலி ஓட்டுநர் உரிமத்தை புழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் அனைவரும் தங்களின் ஆதார் அட்டையுடன் இணைப்பது கட்டாயமாகியிருக்கின்றது.

இன்னும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லையா... சீக்கிரம் பண்ணிடுங்க... இல்லனா சிக்கலை சந்திக்க நேரிடும்!

நீங்கள் இதுவரை உங்கள் ஆதாரையும், ஓட்டுநர் உரிமத்தையும் இணைக்கவில்லை எதிர்காலத்தில் ஆர்டிஓ அலுவலகம் செல்லும்போது பல்வேறு சிக்கலைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆதார்-ஓட்டுர் உரிமம் இரண்டையும் இணைப்பது சுலபமானது.

இன்னும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லையா... சீக்கிரம் பண்ணிடுங்க... இல்லனா சிக்கலை சந்திக்க நேரிடும்!

அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். உங்கள் இணைய வசதியுள்ள செல்போன் அல்லது லேப்டாப் இருந்தால் போதும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி நீங்களே வீட்டில் இருந்தபடி ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைத்துவிட முடியும்.

இன்னும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லையா... சீக்கிரம் பண்ணிடுங்க... இல்லனா சிக்கலை சந்திக்க நேரிடும்!

ஆதார்-ஓட்டுநர் உரிமத்தை இணைக்கும் வழிமுறைகள்:

1. ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்க முதலில் மாநில போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பக்கத்தில் (https://parivahan.gov.in) உள் நுழைய வேண்டும். இதுவே, நீங்கள் செய்ய வேண்டியது.

2. இதன் பின்னர் 'ஆதார் இணைப்பு' என்ற விருபத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

இன்னும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லையா... சீக்கிரம் பண்ணிடுங்க... இல்லனா சிக்கலை சந்திக்க நேரிடும்!

3. அடுத்ததாக ட்ரைவிங் லைசென்ஸ் என இருக்கும் தேர்வை க்ளிக் செய்ய வேண்டும்.

4. இங்கு உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தின் எண் கேட்கப்படும். உங்கள் அட்டையில் இருக்கும் எண்களை முழுமையாக வழிகாட்டுதலின்படி உள்ளிட வேண்டும்.

5. எண்களை உள்ளிட்ட பிறகு, விவரங்களை பெறு என்ற விருப்பத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

இன்னும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லையா... சீக்கிரம் பண்ணிடுங்க... இல்லனா சிக்கலை சந்திக்க நேரிடும்!

6. இதன் பின்னர் ஆதார் எண் மற்றும் கைப் பேச் தொடர்பு எண் கேட்கப்படும். இவற்றையும் அங்கு உள்ளிட வேண்டும்.

7. இதற்கு அடுத்தபடியாக சமர்ப்பி என்ற பொத்த இருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.

8. அப்போது உங்களின் செல்போனுக்கு ஓர் ஓடிபி எண் வரும். அதை அடுத்ததாக தோன்றும் பக்கத்தில் உள்ளிட வேண்டும்.

9. ஓடிபி எண்ணை உள்ளிட்ட பின்னர் ஆதார் அட்டை-ஓட்டுநர் உரிமம் இணைப்பு முடிவுறும்.

இன்னும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லையா... சீக்கிரம் பண்ணிடுங்க... இல்லனா சிக்கலை சந்திக்க நேரிடும்!

மேலே கூறப்பட்ட வழிமுறைகள் வாயிலாகவே ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் மற்றும் முகவரி மாற்றுதல் போன்ற ஆன்லைன் சேவைகளை உங்களால் பெற முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லையா... சீக்கிரம் பண்ணிடுங்க... இல்லனா சிக்கலை சந்திக்க நேரிடும்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் ஆர்டிஓ சேவைகளை இணையத்திற்கு மாற்றியிருக்கின்றன. நேரடி வருகையைத் தவிர்க்கும் பொருட்டு இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே ஒன்றிய அரசு இரு முக்கிய ஆவணங்களையும் இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here’s How To Do Link Driving License To Aadhaar. Read In Tamil.
Story first published: Friday, June 11, 2021, 19:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X