இ-செல்லாணுக்கு எதிராக புகாரை பதிவு செய்வது எப்படி? இந்த காரணம் இருந்தா போதும் உடனே ஏத்துப்பாங்க!
உங்களுக்கு வழங்கப்பட்ட அபராத செல்லாணுக்கு எதிராக உங்களுக்கு புகாரை தெரிவிக்க முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். தவறுதலாக வழங்கப்படும் அபராத செல்லாண் மற்றும் தவறாக வழங்கப்படும் அபராத செல்லாண் ஆகிய இந்த இரண்டிற்கு எதிராக மட்டுமே நம்மால் புகாரை தெரிவிக்க முடியும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படுகின்றது. சொத்தையே எழுதி வாங்கும் அளவிற்கு கடுமையான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஆமாங்க, போக்குவரத்து விதிமீறலே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் ஆளும் பாஜக அரசு விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை மிக மிகக் கடுமையாக உயர்த்தி இருக்கின்றது.

இருப்பினும் நாட்டில் போக்குவரத்து விதிமீறல்கள் இப்போதும் அதிகளவில் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது. இவர்களுக்கு பல வழிகளில் போக்குவரத்து காவலர்கள் அபராதச் செல்லாண்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஸ்பாட்டிலேயே அபாரத செல்லாண் போட்டுக் கொடுத்தல் மற்றும் வீடு தேடி செல்லாணை அனுப்பி வைத்தல் ஆகிய நடைமுறைகளே போக்குவரத்துக் காவல்துறை பின்பற்றி வருகின்றது.
இதுதவிர, சில நேரங்களில் ஸ்பாட்டிலேயே அபராதத்தை வசூல் செய்யும் செயலிலும் காவல்துறை ஈடுபட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலில், சிலருக்கு விதிமீறலில் ஈடுபடாமலேயே போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. அது எப்படி சாத்தியமாகும் என கேட்கின்றீர்களா.

அது சாத்தியம்தான். இந்த மாதிரியான சூழலில் நீங்கள் குற்றமற்றவர் என்பதன் அடிப்படையில் அபராத செல்லாணுக்கு எதிராக உங்களால் பதில் புகாரையும் அளிக்க முடியும். இதன் வாயிலாக இ-செல்லாண் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், உங்கள் வாகனத்தின் மீது போடப்பட்ட பிளாக் மார்க்கும் அகற்றப்படும்.
இதற்காக விண்ணப்பிக்கும் முன்னர் முதலில் நீங்கள் எந்த காரணத்திற்காக போக்குவரத்துக் காவல்துறையிடம் இருந்து அபராத செல்லாணை பெற்றிருக்கின்றீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியமானது ஆகும். இதேபோல், இந்தியாவில் எந்தெந்த காரணங்களுக்காக எல்லாம் அபராதம் விதிக்கப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இதன் வாயிலாகவே நீங்கள் குற்றமற்றவரா இல்லை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுதான் இருக்கின்றோம் என்பதை புரிந்துக் கொள்ள முடியும். இந்தியாவில் பல காரணங்களுக்காக அபராத செல்லாண் வழங்கப்படுகின்றது. மிக முக்கியமாக டேமேஜ் ஆன நம்பர் பிளேட், நம்பர் பிளேட்டில் பதிவெண்ணைத் தாண்டி வேறு படமோ அல்லது ஸ்டிக்கர் இருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக அபாரத செல்லாண் வழங்கப்படுகின்றது.
இதுதவிர, பேன்சியான ஸ்டைலில் எண்களை ஒட்டி இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல், ஹெல்மெட், டிரிபிள் ரைடு உள்ளிட்டவற்றிற்கும் அபராத செல்லாண் விதிக்கப்படுகின்றது. இதுதவிர, டிராஃபிக் சிக்னைலை தாண்டி நிற்குதல் மற்றும் டிராஃபிக் சிக்னலை ஜம்ப் செய்தல், அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுதல், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், ஹெல்மெட், சீட் பெல்ட் போடாதது என ஏகப்பட்டவை விதிமீறல்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே சிலருக்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. மோசமாக பாதிக்கப்பட்ட நம்பர் பிளேட்டுகளால் ஏற்படும் குழப்பத்தினாலேயே அதிக அளவில் தவறுதலாக அபராதம் அப்பாவிகளுக்கு வழங்கப்படுகின்றது. இதுதவிர, சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிச் சென்றதற்கு, ஹெல்மெட் அணியவில்லை என கூறியும் தவறுதலாக அபராதம் வழங்கப்படுகின்றது.
இதுபோன்ற குளறுபடிகளே அபராத செல்லாண் விஷயங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமல்ல இன்னும் பல வழிகளில் தவறுதலாக அபராத செல்லாண் சிலருக்கு வழங்கப்பட்டு வருக்கின்றது. அந்தவகையில், சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், பல நேரங்களில் மனித தவறுகளாலும் விதிமீறலிலேயே ஈடுபடாதவர்களுக்கு அபராதம் வழங்கப்படுகின்றது.
இந்த மாதிரியான சூழலில் நீங்கள் செய்யாத தவறுக்கு உங்களுக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டு இருக்கும் எனில் அதற்கு எதிராக புகாரை தெரிவிக்க முடியும். இதற்கான வசதியை அரசு பாரிவாஹன் தளத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இந்த தளத்தில் கிரைவன்ஸ் சிஸ்டம் (Grievance System) எனும் பிரிவிற்குள் நுழைய வேண்டும்.
இதில் உள்நுழைந்து உங்களுக்கான கணக்கை தொடங்க வேண்டும். இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் அபராத செல்லாணை ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை வழங்க வேண்டும். விண்ணப்பத்துடன் சேர்த்து நீங்கள் குற்றமற்றவர் என்பதற்கான சான்றையும் வழங்க வேண்டும். நீங்கள் குற்றம் செய்யாதவர் என்பது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக உங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு அபராத செல்லாண் ரத்து செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அபராத செல்லாணை அவ்வளவு ரத்து செய்துவிட முடியாது. அதற்ற்கு மிகவும் ஸ்ட்ராங்கான காரணம் மற்றும் சரியான விளக்கத்தையும் நீங்கள் வழங்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். இதைச் செய்தால் மட்டுமே சில விசாரணைகளுக்கு பின்னர் உங்கள் மீதான அபராத செல்லாண் ரத்து செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








