ஒரு பைசா செலவில்லாம ஏரோபிளேன்ல போக முடியுமா! நிறைய பேரு போயிருக்காங்க.. இந்த ட்ரிக்க நீங்களும் ஃபாலோ பண்ணுங்க!
வெளிமாநிலங்கள் அல்லது மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு சட்டென போய் சேர வேண்டும் எனில் விமானப் போக்குவரத்தே மிக சிறந்தது. உலக நாடுகளுக்கும் விரைவில் சென்று சேர முடியும். இதனால்தான் பலர் இப்போது ரயில், பேருந்தைக் காட்டிலும் அதிகம் விமானங்களில் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
ஆனால், எல்லோரும் விமானங்களை தங்களின் பயணங்களுக்காக பயன்படுத்திக் கொள்வது இல்லை. அதிக தொகையை விமான போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்பதே அதற்கு காரணமாக இருக்கின்றது. இதுவே பலரின் விமான பயணம் இப்போதும் வெறும் கனவாகவே இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

அதேவேளையில், பணத்தை எல்லாம் பெரிய தடையாக நினைக்க வேண்டாம் என்றும், விமான டிக்கெட்டை இலவசமாக பெறுவதற்கு சில வழிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த இலவச விமான டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இலவசம் என்றால் போற, வரவங்களுக்கு எல்லாருக்கும் இந்த இலவச விமான டிக்கெட் கிடைத்துவிடும் என நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஒருவேளை அடிக்கடி விமானங்களில் பயணிப்பவர் எனில் உங்களால் மட்டுமே அந்த இலவச டிக்கெட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, அடிக்கடி விமான டிக்கெட்டை புக் செய்யும்போது குறிப்பிட்ட சில விமான நிறுவனங்கள் உங்களுக்கான வெகுமதி புள்ளியை (Reward Point) வழங்கும். அந்த வெகுமதி புள்ளிகளை பல வழிகளில் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இலவச விமான டிக்கெட்டை பெறுவதற்காகவும் அந்த வெகுமதி புள்ளிகளை ரிடீம் செய்துக் கொள்ள முடியும்.
இந்த ரிவார்டு பாயிண்டுகள் ஏர் மைல்ஸ் என இந்தியாவில் அழைக்கின்றனர். இதற்கு கரன்சி மதிப்பும் வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஸ்பைஸ் ஜெட் விமான போக்குவரத்து நிறுவனம் ஒரு ரிவார்டு பாயிண்டிற்கு 50 பைசா என்கிற இந்திய ரூபாய் மதிப்பை வழங்குகின்றது. உங்களிடம் இரண்டு ஸ்பைஸ் ஜெட் பாயிண்டுகள் இருக்கும் எனில் அதன் மதிப்பு ஒரு ரூபாய் ஆகும்.

அதுவே, ஒரு வேளை உங்களிடம் ஸ்பைஸ் ஜெட்டின் 10 ஆயிரம் வெகுமதி பாயிண்டுகள் இருக்கும் எனில் அதை வைத்து ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள விமான டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக வேறு எந்த வழிகளிலும் உங்களிடம் இருந்து ஒரு ரூபாய்கூட வசூலிக்கப்பட மாட்டாது.
வழக்கமாக டோமினோஸ் பிட்சா மற்றும் பிற ஆன்-லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் வழங்கும் அதே ரிவார்டு பாயிண்டுகளைப் போலவேதான் ஏர் மைல் வெகுமதி பாயிண்டுகளையும் நம்மால் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பாயிண்டுகளை ஒரு சில வழிகளை மட்டுமே செய்தால் போதும். ஒவ்வொரு முறையும் டிக்கெட் புக் செய்யும்போது தானாக ரிவார்டு பாயிண்டுகளை அக்கவுண்ட்டை வந்தடையும்.
ரிவார்டு பாயிண்டுகளைப் பெறுவதற்கான வழிகள்: ஏர் மைல் எனப்படும் ரிவார்டு பாயிண்டுகளைப் பெற நீங்கள் ஏர்லைன்ஸின் லாயல்டி புரோக்ராமில் முதலில் அக்கவுண்டை கிரியேட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக மட்டுமே உங்களுடைய ரிவார்டு பாயிண்டை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். முதல் நாம் செய்ய வேண்டும் முதல் செயல் ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக இத்துடன், ஒவ்வொரு பரிவார்த்தனைக்கும் வெகுமதி புள்ளிகளை பெற கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இதன் வாயிலாகவும் ரிவார்டு பாயிண்டுகள் நமக்கு கிடைக்கும். இதுபோன்று பல வழிகளில் ரிவார்டு பாயிண்டுகள் கிரெடிட் கார்டு வாயிலாகவும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய நவீன காலத்தில் பலமடங்கு விமான டிக்கெட்டின் விலை குறைந்து காணப்படுகின்றது. அனைவரும் விமான போக்குவரத்தை நுகர வேண்டும் என்கிற நோக்கத்தில் அரசு மேற்கொண்ட முயற்சிகளாலேயே இது சாத்தியமாகி இருக்கின்றது. ஆகையால், முன்பைக் காட்டிலும் இப்போது விமானங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications
