வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

ரயில் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதே இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள். இந்த ரயில்கள் பிற ரயில்களைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றன. பயோ வேக்யூம் கழிவறைகள், ஒய்-ஃபை வசதி, முழு தானியங்கி கதவுகள் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் இயங்கும் திறன் என பன்முக சிறப்புகளைக் கொண்டதாக இந்த ரயில்கள் காட்சியளிக்கின்றன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

இதுமட்டுமில்லைங்க, இந்த ரயில்கள் சுய எஞ்ஜின் கொண்டவை ஆகும். ஆகையால், தற்போது பயன்பாட்டில் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து இது பல மடங்கு மாறுபட்டுக் காட்சியளிக்கும். அதாவது, புல்லட் மற்றும் மெட்ரோ ரயில்களைப் போல் அது காட்சியளிக்கும். பிரதமர் மோடி அறிமுகம் செய்த 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் கடந்த 2019-லேயே இந்த ரயில்கள் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

இது ஓர் செமி ஹை-ஸ்பீடு ரயில்கள் ஆகும். தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் டெல்லி - வாரணாசி, டெல்லி - கத்ரா ஆகிய இரு வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை விரைவில் பல மடங்கு உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

அடுத்த மூன்று ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட இருப்பதாக கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் விரைவில் ஒவ்வொரு மாதமும் நான்கு முதல் ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என அண்மையில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

இந்த நிலையிலேயே வந்தே பாரத் ரயிலை மேலும் பல மடங்கு நவீன மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், வடிவமைப்பில் சில மாற்றங்களையும் ரயில்வே அமைச்சகம் செய்திருக்கின்றது. இவ்வாறு மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும் வந்தே பாரத் ரயிலையே அண்மையில் சென்னை ஐசிஎஃப்-இல் ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

கான்செப்ட் மாடலில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் இயக்கி சோதனை செய்து பார்க்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், ரயிலை பார்வையிட்ட பின்னர் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

இதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விமானங்களில் இடம் பெற்றிருப்பதைப் போன்ற அதிக ஸ்டைலான மற்றும் மிருதுவான இருக்கைகள், புதிய கவாச் எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு போன்ற பன்முக சிறப்பம்சங்கள் பெற இருக்கின்றன. இந்த கவாச் அம்சமானது ஆபத்தான நேரங்களில் மோதலைத் தவிர்க்க உதவும்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

தொடர்ந்து, ஒவ்வொரு கோச்சுக்கும் நான்கு அவசரகால வெளியேற்றம் வழி, 32 அங்குல திரை (முக்கியமான தகவல்களை வழங்குவதற்காக பொருத்தப்பட்டுள்ளது), சிசிடிவி கேமிராக்கள், இரு சிக்னல் எக்ஸ்சேஞ்ஜ் லைட், கேபினில் எமர்ஜென்சி லேம்ப், அதிக வெண்டிலேட் வசதியை வழங்கும் உட்பகுதி என பல சிறப்புகளை புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெற்றிருக்கின்றது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

நாடு 75வது சுதந்திர தினத்தை வரும் திங்களன்று கொண்டாட இருக்கின்றது. இந்த மாதிரியான நேரத்தில் வரும் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் ரயில்வேத்துறை களமிறங்கியிருக்கின்றது. இதற்கான முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே ஐசிஎஃப்-இல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உற்பத்தி பணிகளை அமைச்சர் ஆய்வுச் செய்தார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல மடங்கு நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. வழக்கமாக டெல்லி-வாரணாசியை இணைக்க அதிக வேக ரயில்களில் ஒன்றான சதாப்தி எக்ஸ்பிரஸ் 12 முதல் 13 மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும். ஆனால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 8 மணி நேரங்களையே எடுத்துக் கொள்கின்றது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

இந்த ரயிலில் முழுக்க முழுக்க தானியங்கி கதவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், இதில் இருக்கும் அனைத்து கோச்சுகளும் ஏசி கோச்சுகள் ஆகும். எகனாமி மற்றும் எக்ஸிகியூட்டீவ் என இரு விதமான வகுப்புளை இந்த ரயில் பெட்டிகள் கொண்டிருக்கின்றன. இதில், எக்சிகியூட்டீவ் கோச் மிக அதிக பிரீமியம் வசதிகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 180 டிகிரி சுயலும் சேர்கள், இணைய வசதி உள்ளிட்டவை இங்கு கிடைக்கும்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

டிக்கெட்டின் விலையிலேயே உணவு வழங்கப்படுகின்றது. காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும். நேரத்தை பொருத்து டீ மற்றும் இரவு உணவு இந்த ரயலில் வழங்கப்படுகின்றது. ஜிபிஎஸ் மற்றும் ஒய்-ஃபை வசதியும் இந்த ரயிலில் உள்ளது. மணிக்கு 180 கிமீ வரை இந்த ரயில் இயங்கும். இந்த உச்சபட்ச வேகத்தினால்தான் சதாப்தி எக்ஸ்பிரஸைக் காட்டிலும் வெகு விரைவில் அதனால் சென்று சேர முடிகின்றது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

இதுமட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து உரையாடிக் கொண்டு செல்லும் வகையில் அதிக இட வசதி மற்றும் நடமாடும் ஏரிய பெரியளவில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இந்த ரயிலில் பயணிப்பது மிகுந்த சுவாரஷ்யமானதாக இருப்பதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டாளர்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வைத்து இந்த ரயில்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் ஒரு கோச்சை உருவாக்க சுமார் 6 கோடி ரை செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது. அதேவேலையில், இதன் உற்பத்தி தீவிரப்படுத்தப்படுமானால் இந்த செலவு ரூ. 5 கோடியாக குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் உற்பத்தியை தீவிரப்படுத்தும் முயற்சியில் ரயில்வே அமைச்சகம் களமிறங்கியிருக்கின்றது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் அதுல டிராவல் பண்ண ஆசப்படுவீங்க!

இந்த ரயிலில் கூடுதல் சிறப்பு வசதிகளாக லக்கேஜ்களை பத்திரமாக வைத்துக் கொள்ள மாடுலர் ரேக்குகள், செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள சாக்கெட் (இதில் லேப்டாப்களையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும்), அமைதியான உட்புறம், ரீடிங் லைட்டுகள், ஆட்டோ சென்சார் டேப்புகள், உணவு பொருட்களை பதமாக வைத்துக் கொள்ளும் வகையில் பிரத்யேக உணவு சேமிப்பு பெட்டி என பல அம்சங்களை தாங்கியதாக இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இருக்கின்றன. இந்த ரயில்கள் சென்னை ஐசிஎஃப்-இல் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is interesting facts about vande bharat express train
Story first published: Saturday, August 13, 2022, 21:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X