இந்தியாவிடம் இவ்ளோ சக்தி வாய்ந்த போர் விமானங்கள் எல்லாம் இருக்கா!! விமான படையில் உள்ள டாப் 3 போர் விமானங்கள்!
இந்தியா தன்னை எதிரி நாடுகளிடம் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் பலகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், சமீபத்தில்கூட இந்தியா அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனைச் செய்து பார்த்தது. சுமார் 5 ஆயிரம் கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளைக் கூட துள்ளியமாக சென்று தாக்கும் திறன் கொண்டதே இந்த அக்னி 5 ஏவுகணை ஆகும்.
குறி வைத்த இலக்கு மட்டுமின்றி தான் பயணிக்கும் பாதையில் உள்ள பிற சில இலக்குகளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாவும் இந்த ஏவுகணைக் காட்சியளிக்கின்றது. இத்தகைய ஏவுகணையின் சோதனையோட்டத்தையே வெற்றிகரமாக செய்து பார்த்திருக்கின்றது, நமது இந்தியா. அக்னி5 மிஷன் திவ்யஸ்த்ரா எனும் பெயரில் இந்த சோதனையோட்டம் வெற்றியடைந்திருப்பதாக பிரதமர் மோடியும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

இதுமாதிரியான திறன் படைத்ததாக இந்தியா வளர்ச்சியடைந்து இருப்பதனாலேயே இந்தியாவிடம் சில நாடுகள் வாலாட்ட தயங்குகின்றன. இதுமட்டுமில்லைங்க, நம்முடைய இந்திய ராணுவத்திடம் இதேபோல் இன்னும் பல மேம்பட்ட திறன் கொண்ட போர் விமானங்களும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் டாப் 3 போர் விமானங்களை பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
எச்ஏஎல் தேஜஸ் (HAL Tejas): இந்த போர் விமானம் இந்திய தேசத்தின் பெருமையாகக் கருதப்படுகின்றது. நாம் பார்க்க இருக்கும் இந்த பட்டியலில் உள்ள ஒரே உள்நாட்டு போர் விமானமும் இதுவே ஆகும். எச்ஏஎல் ஓர் மல்டி ரோல் போர் விமானம் ஆகும்.

1980களில் தொடங்கப்பட்ட இலகு ரக போர் விமானம் எனும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த போர் விமானம் ஆகும். இந்த விமானத்தின் பே-லோடு 4 ஆயிரம் கிலோ ஆகும். அதாவது, 4 ஆயிரம் கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை எச்ஏஎல் தேஜஸ் ஏற்றி செல்லும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு1.8 மேக் ஆகும். இதன் ஃபைட்டிங் ரேஞ்ஜ் 500 கிமீ தூரம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இஎல்/எம்-2052, உத்தம் ஏஇஎஸ்ஏ ரேடார், செல்ஃப் புரடெக்சன் ஜாம்மர், ரேடார் வார்னிங் ரிசீவர், இசிஎம் பாட் போன்ற அம்சங்களையும் இந்த விமானம் தாங்கி இருக்கின்றது. இதனால்தான் இந்தியாவின் பெருமிதம் இந்த போர் விமானம் என கூறப்படுகின்றது. இந்த போர் விமானம் ஏற்கனவே இந்தியாவிடம் 40க்கும் அதிகமாக உள்ளன. இத்துடன், மேலும் 324 யூனிட்டுகளை வாங்கவும் இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.

சுகோய் எஸ்யூ-30எம்கேஐ (Sukhoi SU-30MKI): எச்ஏஎல் தேஜஸ்-ஐ போலவே இந்த போர் விமானமும் ஓர் மல்டிரோல் வசதிக் கொண்ட போர் விமானமாகக் காட்சியளிக்கின்றது. இந்திய விமானப் படையின் முதுகெலும்பாகவும் இது பார்க்கப்படுகின்றது. இந்த விமானம் ரஷ்யா கட்டமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனத்தின் உரிமத்தின்கீழே கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் இந்த வகை போர் விமானம் 272க்கும் அதிகமாக பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய பெரிய எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த போர் விமானம் இந்திய விமானப் படையின் முதுகெலும்பாகக் காட்சியளிக்கின்றது. சூழ்ச்சி செய்து தாக்கி திறன் கொண்டதாகவும் இந்த போர் விமானம் அறியப்படுகின்றது.
இந்த விமானம் போர் காலத்தில் தொடர்ச்சியாக களத்தில் இருந்து சண்டை புரியும் திறன் கொண்டது. சுமார் 3.75 மணி நேரம் வரை இடைநில்லாமல் இதனால் போர் புரிய முடியும். இதன் ரேஞ்ஜ் திறன் 3 ஆயிரம் கிமீ ஆகும். இதனால் விமானத்தில் இருந்து எறிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.
இதுபோன்று இன்னும் பல திறன்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே நம்முடைய இந்த டாப் 3போர் விமானங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை சுகோய் எஸ்யூ-30எம்கேஐ பிடித்திருக்கின்றது. இந்த விமானத்தில் இந்திய விமானப் படை பிரமோஸ் ஏர்-லான்சை பொருத்தி பயன்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரமோஸால் 290கிமீ தொலைவில் உள்ள இலக்கைக் கூட துள்ளியமாக தாக்கி அழிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு 1.9மேக் ஆகும். 12,500கிலோ பேலோடு திறனை இந்த விமானம் கொண்டிருக்கின்றது.
டசால்ட் ரஃபேல் (Dassault Rafale): பிரெஞ்சு நாட்டு நிறுவனத்தின் டசால்ட் ரஃபேல் போர் விமானம் ஓர் இரண்டு எஞ்ஜின் கொண்ட ரகம் ஆகும். கேனர்டு டெல்டா விங், பல முறை உருளும் திறன் ஆகியவற்றையும் இந்த போர் விமானம் தாங்கி இருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த போர் விமானத்தை வாங்க இந்தியா ஆர்டர் கொடுத்திருக்கின்றது.
ஆனால், இப்போது வரை 26 யூனிட்டுகள் மட்டுமே இணைக்கப்பட்டு இருக்கின்றன. சுகோய் எஸ்யூ-30எம்கேஐ, யூரோஃபைட்டர் டைஃபூன், எஃப்-16 மற்றும் பல பயங்கரமான போர் விமானங்களுக்கு மிகப் பெரிய அளவில் டஃப் கொடுக்கும் போர் விமானமாக டசால்ட் போர் விமானம் பார்க்கப்படுகின்றது. எனவேதான் இந்த மிகப் பெரிய எண்ணிக்கையில் இந்த விமானத்திற்கு இந்திய விமானப் படை ஆர்டர் கொடுத்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பலம் நாளுக்கு நாள் விரிவடைந்துக் கொண்டே வருகின்றது. இதற்கு சான்றாகவே இந்த போர் விமானங்கள் உள்ளன. மேலும், பல போர் விமானங்களை படையில் இணைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இத்துடன், ஏவுகணைகளை மேம்படுத்தல் மற்றும் சோதனையோட்டங்களையும் அது அதிகப்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









