இந்த ரூட்ல போற ஃப்ளைட்ல மட்டும் ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் புக் பண்ணிடாதீங்க.. சொத்தையே எழுதி வைக்க சொல்லுறாங்க!

விமான போக்குவரத்து முந்தைய காலத்தைக் காட்டிலும் இப்போது மிகவும் சுலபமானதாக மாறிவிட்டது. நம்மில் பலர் இப்போது விமானங்களையே டவுண் பஸ் போல பயன்படுத்திக் கொண்டிருக்கும். அந்த அளவிற்கே விமான பயணத்திற்கான கட்டணம் குறைந்துக் காணப்படுகின்றது. சொல்லப் போனால், சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் ரயில் கட்டணத்தைவிட மலிவு விலையில் விமான போக்குவரத்து சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், நாம் இந்த பதிவில் உலகின் மிக மிக விலை உயர்ந்த விமான பயணத்திற்கான டிக்கெட்டுகள் பற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் உலகிலேயே மிக அதிக கட்டணத்தில் விற்கப்படும் முதல் வகுப்பு விமான டிக்கெட் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

Luxury flights cabin

எடிஹட் ஏர்பஸ் ஏ380 (Etihad Airways A380): உலகிலேயே இந்த விமானத்தின் முதல் வகுப்பு டிக்கெட்டே மிக மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. குறிப்பாக, நியூயார்க் நகரம் மற்றும் அபுதாபியை இணைக்கும் வகையில் செயல்படும் எடிஹட் ஏர்பஸ் ஏ380 விமானத்தின் முதல் வகுப்பு டிக்கெட் சுமார் 66 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகின்றது.

இதன் இந்திய ரூபாய் மதிப்பு 54 லட்சத்து 98 ஆயிரத்து 773 ரூபாய் ஆகும். இத்தகைய அதிக விலையிலேயே எடிஹட் ஏர்பஸ் ஏ380 விமானத்தின் முதல் வகுப்பு டிக்கெட் விற்கப்படுகின்றது. உலக செல்வந்தர்களுக்கு என்றே இயக்கப்படும் விமான சேவையாக இது பார்க்கப்படுகின்றது.

Flights

ஓர் தனி நபர் ஜெட் விமானத்தில் சொகுசாக பயணிக்கும் அனுபவம் இந்த விமானத்தின் முதல் வகுப்பில் கிடைக்கும். விமானத்தின் மேல்தளத்திலேயே முதல் வகுப்பிற்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு முதல் வகுப்பு கேபினும் 430 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும். படுக்கை வசதி, லக்சூரி சீட்டிங் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் அதில் வழங்கப்பட்டு இருக்கும்.

ஏன் தனிப்பட்ட குளியலறைகூட இதில் வழங்கப்படுகின்றது. நியூயார்க் நகரம்- அபுதாபி இடையிலான பயண நேரம் 12 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இந்த நீண்ட நேர டிராவலை மிகுந்த லக்சூரிய டிராவல் அனுபவத்துடன் பயணித்திட இந்த சேவை செல்வந்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

First class cabin

எமிரேட்ஸ் ஏ380 (Emirates A380): எடிஹட் ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு அடுத்தபடியாக அதிக கட்டணம் எமிரேட்ஸ் ஏ380-இன் முதல் வகுப்பிற்கே வசூலிக்கப்படுகின்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் தொடங்கி துபாய் வரை செல்லும் இந்த விமானத்தின் முதல் வகுப்பு டிக்கெட்டின் கட்டணம் 31 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 25 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

இதன் பயண நேரம் 16 மணி நேரம் ஆகும். அப்படி பார்த்தால் ஒரு நிமிடம் இதில் பயணிக்க 32 அமெரிக்க டாலர்கள் செலவாகும். இந்த விமானத்தில் பயணிப்பவர்களுக்கு ஸ்பா சேவை உள்ளிட்ட சூப்பர் லக்சூரி சேவை வழங்கப்படும். விலை உயர்ந்த சோப்பு, கிரீம்கள் உள்ளிட்டவை பயணிகளுக்கு வழங்கப்படும். இதில், ஓர் ஸ்பாவைப் போட்டு மீதமுள்ள பயண நேரத்தில் தூக்கம் அல்லது உற்சாகத்துடன் கழிக்க முடியும்.

Most expensive first class flights

கொரியன் ஏ380 (Korean A380): நியூயார்க் -டூ- சியோல் வரை செல்லக் கூடிய இந்த விமானத்தின் முதல் வகுப்பு டிக்கெட் 28ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இதன் இந்திய மதிப்பு ரூ.23லட்சம் ஆகும். கொரியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களுக்கு என்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஓர் விமான சேவையே இதுவாகும். பொழுதுபோக்கு திரை, நவீன தொழில்நுட்ப வசதி என ஏகப்பட் வசதிகள் இந்த முதல் வகுப்பு வழங்கப்படுகின்றன.

விர்ஜின் அட்லாண்டிக் ஏ330 நியோ (Virgin Atlantic A330neo): இந்த விமான சேவையின் லண்டன் - லாஸ் ஏஞ்சல்ஸ் வழித் தடத்தின் முதல் வகுப்பிற்கே மிக மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. சுமார் 22 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இதற்கான கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

ஏ330 நியோ என்பது மினி ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏர்பஸ் ஆகும். மிக பெரிய இடவசதியை இதுக் கொண்டிருக்கும். இதில், ஒரே நேரத்தில் நான்கு பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் இட வசதி கொடுக்கப்பட்டு இருக்கும். இதுதவிர இன்னும் பல ஆடம்பர வசதிகளைத் தாங்கியதாக இந்த விமானம் இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மில் பலருக்கு ஆண்டு வருமானமே 3 லட்சம் முதல் 5 லட்சமாக இருக்கின்றது. ஆனால், இந்த உலகில் ஒரே முறை செல்ல சிலர் பல லட்சங்களை விமானத்திற்கு செலவழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, எடிஹட்டின் ஏ380 முதல் வகுப்பு டிக்கெட்டின் கட்டணம் மிகப் பெரிய ஆச்சரியத்திற்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 25, 2023, 15:15 [IST]
English summary
Here is list of world s most expensive first class flights ticket
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X