ஒரு டிரெயினை ஓட்ட ஏன் 2 பைலட்டுகளை நிர்ணயிக்கிறாங்க? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா! இதுலகூட டுவிஸ்டா!!
பேருந்து, கார், ஆட்டோ மற்றும் பைக் என எந்த வாகனத்தை எடுத்துக் கொண்டாலும் அதை ஓட்ட ஒருவரே போதுமானது. அதுபோலவே டிரெயினை சமாளிக்கவும் (இயக்க) ஒருவரே போதுமானது என கூறப்படுகின்றது. இந்த மாதிரியாக சூழல் இருக்க டிரெயின்களில் பார்க்கும்போது இருவர் இருப்பார்கள். இவ்வாறு இருவர்கள் பைலட் பணிக்காக நியமிக்க என்ன காரணம் என்பது? பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் பேருந்துகளில் பயணிக்காதவர்களைக் கூட பார்த்துவிட முடியும். ஆனால், ரயில்களில் பயணிக்காதவர்களை பார்ப்பது மிகவும் கடினமானது. பலருக்கு ரயிலே முக்கிய போக்குவரத்தாக இருக்கின்றது. அதேவேளையில், என்னதான் இந்த ரயில்களில் நாம் தினந்தோறும் பயணித்தாலும், அதுபற்றிய ஒரு சில தகவல்கள் அறிய முடியாததாகவும், மர்மமானதாகவும் இருக்கின்றன.

அந்தவகையில், நம்மில் பலருக்கு இருக்கக் கூடிய முக்கியமான சந்தேகங்களில் ஒன்றாக ரயில் ஓட்டுநர்கள் பற்றியது இருக்கின்றது. குறிப்பாக, ஓர் ரயிலுக்கு ஏன் இரண்டு பைலட்டுகள் நிர்ணயிக்கப்படுகின்றனர் என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கு இருப்பதுண்டு. இதுபற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
லோகோமோட்டிவ்-க்குள் இருக்கும் இருவரையும் பைலட்டுகள் அல்ல என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இருவருக்கும் வெவ்வேறு பதவிகள் உண்டு. லோகோவை ஓட்டுபவர் லோகோ பைலட் என்றும், மற்றொரு நபர் அசிஸ்டண்ட் லோகோ பைலட் அல்லது ஏஎல்பி என்று அழைக்கப்படுவர். இதில், லோகோ பைலட்டே முக்கியமானவர் ஆவார். இவரின் கன்ட்ரோலிலேயே ரயில் எப்போதும் இருக்கும்.

இவரின் அனுமதி வழங்கும்பட்சத்திலேயே அசிஸ்டண்ட் லோகோ பைலட் ரயிலை டேக்-ஓவர் செய்வார். அதேவேளையில், இந்த பணி அசிஸ்டன்ட் லோகோ பைலட்டிற்கு அவ்வளவு எளிதில் வழங்கப்படாது. ஆபத்தான சூழல் ஏதேனும் ஏற்படும் என்றால் மட்டுமே அசிஸ்டன்டால் லோக்கோவை கையாள முடியும். இதனால்தான் இரண்டாம் நபராக ஏஎல்பி லோகோவில் நியமிக்கப்படுகின்றார்.
ரயில் பயணங்களின்போது பாதுகாப்பில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது என்பதன் அடிப்படையில் அசிஸ்டண்ட் லோகோ பைலட் நியமிக்கப்படுகின்றார் என்றும் கூறலாம். இதுமட்டுமே காரணம் என்றும் கூறிவிட முடியாது. புதிதாக பணிக்கு வருபவர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கவும் லோகோவில் அசிஸ்டன்ட் என்கிற பணி வழங்கப்படுகின்றது.

அதேவேளையில், ஆரம்ப கட்டத்தில் லோகோ பைலட் பதவியில் இருப்பவர் மட்டுமே ரயிலை முழுமையாகக் கன்ட்ரோல் செய்வார். அசிஸ்டண்ட் கை தேர்ந்துவிட்டார், அவரால், ஓர் ரயிலை சமாளிக்க முடியும் என்பது தெரிய வந்த பின்னர் மட்டுமே அசிஸ்டன்ட் லோகோ பைலட் ரயிலை இயக்க அனுமதிக்கப்படுகின்றார்.
இந்த பணி மிகவும் பொறுப்பான பணி என்பதால் இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. சரி, இருவர்களில் யார் லோகோ பைலட்?, யார் அசிஸ்டன்ட் லோகோ பைலட் என்பதைக் கண்டறிவது?, இப்படியும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கும். இதற்கு நீங்கள் கட்டை விரல் விதியைதான் கடைப்பிடிக்க வேண்டும்.
லோகோவிற்குள் முதன்மை லோகோ பைலட் இடது பக்கத்திலும், அசிஸ்டன்ட் லோகோ பைலட் வலது பக்கத்தில் இருப்பர். அதேவேளையில், லோகோ பைலட்டுகள் என யாரையும் நேரடியாக இந்தியன் ரயில்வேஸ் நிர்ணயிப்பதில்லை. முதலில் அசிஸ்டன்ட் லோகோ பைலட்டாக அவர் நிர்ணயிக்கப்படுகின்றார். பயிற்சி நிறைவுற்ற பின்னரே அந்த நபர் முதன்மை லோகோ பைலட்டாக நிர்ணயிக்கப்படுகின்றனர்.
ஆகையால், அசிஸ்டன்ட் லோகோ பைலட் என்பது ஆரம்பகட்ட பதவியாகவே பார்க்கப்படுகின்றது. அசிஸ்டன்டாக இருக்கும் பலதரப்பட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிலருக்கு 8 ஆண்டுகளைக் கடந்தும் பயிற்சி வழங்கப்படுவதுண்டு என்பது குறிப்பிடத்தகுந்தது. அசிஸ்டன்ட் லோகோ பைலட்டாக இருக்கும்போது லோகோமோட்டீவின் அனைத்து இயக்கத்தையும் சரிபார்க்க வேண்டும்.
குறிப்பாக, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் நியூமேட்டிக் பாகங்கள் என அனைத்தும் சரியாக வேலை செய்யும் என்பது சரிபார்க்க வேண்டும். இந்த பொறுப்பே முதலில் ஓர் ஏஎல்பி வழங்கப்படுகின்றது. இதற்கு பின்னர் 'ரன் டியூட்டி' என்கிற பணி அவருக்கு வழங்கப்படும். இந்த பணியின்போது, அவரின் கவனம் முழுமையாக லோகோமோட்டீவில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உதாரணமாகவ எஞ்ஜினுக்குள் இருக்கும் மீட்டர், கேஜ் மற்றும் வரும் சிக்னல்களைப் பார்வையிடுதல் உள்ளிட்டவற்றை அவர் கண்கானிக்க வேண்டும். இதுதவிர, கடக்கப்படும் அனைத்து ரயில் நிலையங்களையம் அவர்கள் பார்வையிட வேண்டும். இதைத்தொடர்ந்து, அனைத்து சரியான தகவல்களையும் எதிரில் வரும் மற்ற ரயில்களில் எஸ்எம்-களுக்கு பரிமாற வேண்டும்.
இதுமட்டுமின்றி ஏசிபி (அலாரம் செயின் இழுக்கப்பட்டால்) போன்ற அசம்பாவிதம் ஏதேனும் ரயிலில் நடைபெற்றாலும் ஏஎல்பி-க்களே சென்று அதை பார்வையிட வேண்டும். தொடர்ந்து பிரச்னையையும் அவர்கள் சரி செய்ய வேண்டும். மேலும், ஏதேனும் காரணத்தினால் முதன்மை லோகோ பைலட்டால் ரயிலை இயக்க முடியாமல் போனால் அடுத்த ரயில் நிலையம் வரும்வரை அசிஸ்டன்ட் லோகோ பைலட்டே ரயிலை இயக்க வேண்டும்.
இதுபோன்று அனைத்து பணிகளும் ஓர் அசிஸ்டன்ட் லோகோ பைலட்டை தலை சிறந்த லோகோ பைலட்டாக மாற்றும் நோக்கிலே வழங்கப்படுகின்றது. அதேவேளையில், ராஜ்தானி, துரந்தோ எக்ஸ்பிரஸ், சதாப்தி போன்ற ஸ்பெஷல் ரயில்களில் மட்டும் இருவரும் லோகோ பைலட்டுகளாக பணியமர்த்தப்படுகின்றனர். அவர் கோ பைலட் என்று அழைக்கப்படுவர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வேளை நீங்கள் லோகோ பைலட் என்றாலோ, அல்லது லோகோ பைலட்டுடன் பழகிய அனுபவம் இருந்தாலோ உங்களுக்கு கிடைத்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவும். அதேவேளையில், இந்த இரண்டு பணிகளும், அதாவது, லோகோ பைலட் மற்றும் அசிஸ்டன் லோகோ பைலட் ஆகிய இரண்டும் மிக முக்கியமான பணி என்பது இந்த பதிவின் வாயிலாக மிக துள்ளியமாக தெரிய வருகின்றது.


Click it and Unblock the Notifications









