பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணமா! 'மிதவை விதி' எப்படி வேலை செய்யுது பாருங்க!

கப்பல்கள் மூழ்காமல் மிதப்பதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

இந்த உலகத்தில் அதிசயங்கள் பல உள்ளன. காற்றில் விமானம் மிதப்பதும், தண்ணீரில் சிறிய உருவம் கொண்ட படகுகள் தொடங்கி பிரமாண்ட தோற்றம் கொண்ட க்ரூஸ் கப்பல்கள் பயணிப்பது வரை அனைத்தும் இந்த உலகில் அதிசயமே. இந்த அதிசயங்கள் எப்படி நிகழ்கின்றன என்பதையே வெளிக்கொணரும் தகவல்களை நமது டிரைவ்ஸ்பார்க் தளம் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

அந்தவகையில், கடந்த காலங்களில் விமானங்கள் பற்றிய பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை நாம் பார்த்திருக்கின்றோம். இதைபோல் இப்போது இந்த பதிவில் நாம் படகுகள் மற்றும் பிரமாண்ட க்ரூஸ் கப்பல்கள் தண்ணீரில் மூழ்காமல் மிதப்பதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணிகளையே பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

கண்டிப்பாக நம்மில் பலர் இந்த விஷயத்த ஸ்கூல படிச்சிருப்பீங்கனு நினைக்கின்றோம். ஆனால், பலருக்கு இது ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை. அந்த மாதிரியானோருக்கு பழைய நினைவை இந்த பதிவு மீண்டும் நினைவிற்குக் கொண்டு வரும் என நாங்கள் நம்புகின்றோம். ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரையும் நிரப்பிக் கொள்ளுங்கள்.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

இதில் ஓர் திடமான பொருளை போடுங்கள். உதாரணமாக செல்போன் ஸ்லிம் ஸ்லாட்டை வெளியேற்ற உதவும் ஊசி அல்லது ஆணி போன்ற எந்தவொரு அடர்த்தி நிறைந்த பொருளை போட்டாலும் அது உடனடியாக மூழ்கிவிடும். ஏன், வட்டமான உருவத்தில் இருக்கும் ஒரு ரூபாய் அல்லது பத்து ரூபாய் காயினை அந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டாலும்கூட அந்த நாணயம் உடனடியாக மூழ்க தொடங்கும்.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

அதுவே அந்த பாத்திரத்தில் நாம் சாப்பாடு சாப்பிட பயன்படுத்தும் வட்ட வடிவ தட்டு அல்லது காபி டபராவை போட்டால் அது மிதக்க செய்யும். இவற்றின் எடை நாணயம் மற்றும் ஊசியைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். இருப்பினும், அவை அசால்டாக மிதக்கும். அதுவே, மிதந்துக் கொண்டிருக்கும் அந்த பாத்திரத்தில் எடையை அதிகரிக்கச் செய்தால் அது மெல்ல மெல்ல நீரில் அமிழ தொடங்கும்.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

கடைசியில் குறிப்பிட்ட எடை அளவைக் கடந்த பின்னர் அந்த பாத்திரம் மெல்ல மெல்ல மூழ்க தொடங்கும். இந்த நிலையே கப்பல் மற்றும் படகுகளிலும் தென்படுகின்றது. இதற்கு அறிவியல் ரீதியில் 'மிதவை விதி' என அழைக்கப்படுகின்றது.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

மிதவை விதியா அப்படினா என்ன? அந்த விதி கூறும் பொருள் என்ன?

ஒரு திடப் பொருளை ஒரு திரவத்தில் வைக்கும்போது அந்த திடப் பொருளினால் ஏற்படும் அழுத்தம் அதற்கு சமமான திரவத்தை (நீரை) வெளியேற்றும். அதுவே, திரவப் பொருளை விட அதிக எடைக் கொண்டதாக திடப் பொருள் இருக்குமானால், அது வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிக்கச் செய்யும். இதனால் அந்த திடப் பொருள் மூழ்கும் நிலை ஏற்படும். இதையே மிதவை விதி கூறுகின்றது.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

சரி இந்த விதி கப்பல் விஷயத்தில் எப்படி வேலை செய்கின்றது?

கப்பல்தான் இங்கு திடப் பொருள். இது, கடலில் மிதக்கும்போது, அதாவது, திரவப் பொருளான கடல் நீரில் மிதக்கும்போது, அதன் எடைக்கு சமமான திரவத்தை கடல் பரப்பில் வெளியேற்றும். இது கப்பலின் எடையைவிட சற்று அதிகமாக இருக்கும். இந்த நிலை இருக்கும் வரை மட்டுமே கப்பல் மிதக்கும். ஒரு வேலை கப்பலினுள் தண்ணீர் புக தொடங்கிவிட்டால் கப்பலின் எடை பல மடங்கு கூட தொடங்கும்.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

அதாவது, கப்பலின் ஒட்டுமொத்த எடை மற்றும் உள்ளே புகுந்த நீரின் எடை அது கடல் பரப்பில் வெளியேற்றிய நீரின் எடையைவிட அதிகமாக்கிவிடும். ஆகையால், கப்பலின் மிதவை திறன் மறைந்து அது மூழ்க தொடங்கிவிடும். இதனால்தான் குறிப்பிட்ட அளவில் மட்டுமே கப்பல்களில் சரக்குகளை ஏற்ற வேண்டும் என கூறப்படுகின்றது.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

ஒரு காலத்தில் இரும்பு கப்பல்கள் கட்டியபோது பலர் அதனை சாத்தியமற்றது என கூற தொடங்கினர். மேலும், மரக் கட்டைகளால் தயாரித்த கப்பல்கள் மட்டுமே நீரில் மிதக்கும் என்றனர். இந்த கூற்றை உடைத்தெறியும் வகையில் அமைந்ததே இந்த மிதவை விதி. அதேநேரத்தில் பேராசை பிடித்த சிலர் கப்பல்களில் அதிக பொருட்களை ஏற்றுமதி செய்த ஆரம்பித்தினர். இதனால் பல கப்பல்கள் கடந்த காலங்களில் நீரில் மூழ்கின.

பெரிய பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மூழ்காமல் மிதக்க இதுதான் காரணம்... மிதவை விதி எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா!

ஆகையால், பின்னாளில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே கப்பல்களில் சரக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்ற விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த விதி சாமுவேல் ப்ளிம்சால் என்பவரால் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரின் ஞாபகமாகவே இந்த விதிக்கு பிளிம்சால் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 31, 2022, 15:37 [IST]
English summary
Here is reason behind ship float on water
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+