ரோடு சைடு அசிஸ்டன்ஸ் ஏன் முக்கியம்?.. இந்த ஒரு திட்டத்தை பெறுவதன் மூலம் இவ்ளோ பலன்கள் கிடைக்குமா?
ரோடு சைடு அசிஸ்டன்ஸின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக இந்த பதிவைத் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

அனைத்து வாகன உரிமையாளர்களும் சாலையோர உதவி அல்லது ரோடு சைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. வாகனம் இரண்டு சக்கரம் அல்லது நான்கு சக்கரம் என எதுவாக இருந்தாலும் இந்த திட்டத்தை வைத்திருப்பதன் வாயிலாக பல்வேறு பலன்களை இக்கட்டான நேரங்களில் பெற்றுக் கொள்ள முடியும். அப்படி என்ன மாதிரியான பலன்களை இந்த திட்டம் வழங்கும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எந்தவொரு வாகனமும் எப்போது வேண்டுமானாலும் பிரேக்டவுண் ஆகாலாம். திடீரென செயலற்று நிற்கும் இந்த மாதிரியான வாகனங்களை அடுத்த அடி நகர்த்துவதுகூட மிகவும் இயலாத ஒன்றாக மாறிவிடும். இந்தமாதிரியான சூழல்களில் கை கொடுக்கக் கூடியதே சாலையோர உதவி/ ரோடு சைடு அசிஸ்டன்ஸ் திட்டம் ஆகும். வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சில இந்த திட்டத்தை வாகன உரிமையாளர்களுக்கு உதவும் விதமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன.

ரோடு சைடு அசிஸ்டன்ஸ் வாயிலாக கிடைக்கும் பலன்கள்:
பேட்டரி பிரச்னை:
பேட்டரியில் ஏற்படும் பிரச்னை சில நேரங்களில் வாகனங்களை செயலற்றதாக மாற்றிவிடுகின்றன. வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு தேவைப்படும் முக்கியமான ஒன்றாக பேட்டரி இருப்பதால், அது செயலற்றுபோகும் நேரங்களில் வாகனங்களும் செயலற்றதாக மாறிவிடுகின்றன. இத்தகைய சூழல்களில் நீங்கள் சாலையோர உதவி திட்டத்தை பெற்றிருந்தால் அது உங்களுக்கு பல மடங்கு பயனளிக்கும். குறிப்பாக, வாகனத்தை டோவ் செய்து மெக்கானிக் ஷெட் அழைத்து செல்லுதல் அல்லது பேட்டரி கோளாறை நிவர்த்தி செய்ய உதவுதல் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஃபிளாட் டயர்:
கண்ணகளை நடுக்காட்டில் விடுவதுபோன்றதே லாங் டிரைவின்போது திடீரென ஏற்படும் டயர் பிரச்னைகள். இந்த மாதிரியான நேரங்களில் சரியான உதவியைப் பெறவும் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் உதவியாக இருக்கும். பஞ்சரை நீக்குதல் அல்லது புதிய டயரை மாற்றுவது போன்ற பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கார் சாவி காணாமல் போய்விட்டதா?
சில நேரங்களில் வந்த இடத்தில் நாம் நமது வாகனத்தின் சாவிலையை தொலைத்துவிட நேரிடலாம். இதுபோன்ற சிக்கல்களின் போதும் நம்மால் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் வாயிலாக பலனை பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் பயன்படுத்தி வந்த சாவியை கண்டுபிடிக்க முடியாத நேரங்களில், காருக்கான டூப்ளிகேட் சாவியை பெற்றுக் கொள்ள முடியும். அல்லது, மெக்கானிக்கின் உதவியுடன் காரின் கதவை திறந்து தற்காலிகமாக பயணிப்பதற்கான வழி செய்து கொடுக்கப்படும்.

டோவிங் சேவை:
காரை ஒரு அடிகூட நகர்த்த முடியாத நேரங்களில் அதனை உரிய மெக்கானிக்குகளிடத்தில் அழைத்து செல்வதும் ரோடு அசிஸ்டன்ஸின் பணியாகும். ஒரு வேலை ஒரு மெக்கானிக்கிடம் இதற்கான தீர்வு கிடைக்கவில்லை எனில் அடுத்த மெக்கானிக்கிடம் வாகனங்களை இதன் வாயிலாக எடுத்துச் செல்ல முடியும்.

எரிபொருள் இல்லாம வண்டி நின்னுடுச்சா?
கார்கள் கோளாறால் மட்டுமே நடுரோட்டில் நின்றுவிடுவதில்லை சில நேரங்களில் பெட்ரோல் இல்லாமலும் நிற்க நேரிடுகின்றன. கவனக் குறைவாக சில நேரங்களில் நாம் எரிபொருளை நிரப்பாமல் விட்டுவிடுகின்றோம். இதன் விளைவாக எதிர்பாராத நேரங்களில் வாகனங்கள் நிற்க நேரிடும். இந்த மாதிரியான சூழலில் எரிபொருள் தேவையை ரோடு சைடு அசிஸ்டன்ஸ் வாயிலாக பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால், எரிபொருளுக்கான செலவை நாம் வழங்க வேண்டியிருக்கும்.

சிறிய கோளாறுகளை தீர்த்துக் கொள்ள முடியும்:
சிறிய சிறிய கோளாறுகளை தீர்த்து வைக்கவும் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் உதவுகின்றன. வாகனங்களை வைத்திருக்கும் பலர் தங்களுடைய வாகனங்களில் ஏற்படும் சின்ன சின்ன கோளாறுகளைகூட எப்படி தீர்த்துக் கொள்வது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். இந்த மாதிரியான மைனர் கோளாறுகளைக்கூட ரோடு சைடு அசிஸ்டன்ஸ் வாயிலாக சரி செய்து கொள்ள முடியும்.

கட்டணம்:
சில காப்பீட்டு நிறுவனங்கள் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 40 முதலும், கார்களுக்கு ரூ. 100 முதலும் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை வழங்குகின்றன. அதேவேலையில், வாகனத்தின் வயது மற்றும் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் கிடைக்கும் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொருத்து இந்த கட்டணம் மாறுபடலாம்.


Click it and Unblock the Notifications