இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?

கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் (King Fahd International Airport) அளவில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையை விட பெரியது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். நகரம் மற்றும் விமான நிலையத்தின் அளவையும், விமான நிலையத்தின் சிறப்புகள் பற்றிய விபரங்களையுமே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் வர்த்தக நகரமாக மும்பை அறியப்படுகின்றது. இந்த நகரத்தையே பரப்பளவில் தோற்கடிக்கக் கூடிதாக கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் இருக்கின்றது. இந்த விமான நிலையம் 776 சதுர கிமீ அளவுக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், மும்பை நகரத்தின் ஒட்டுமொத்த பரப்பளவு 603.4 சதுர கிமீட்டராக இருக்கின்றது.

Airport

குறிப்பு: படம் உதராணத்திற்காக வழங்கப்பட்டது. சுமார் 173 சதுர கிமீ அதிக பரப்பளவை இந்த ஒற்றை விமானம் கொண்டிருக்கின்றது. இதனால்தான் உலகின் மிகப் பெரிய விமான நிலையம் என்கிற பெருமை கிங் ஃபஹத் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்து உள்ளது. மனிதனின் கை தேர்ந்த கண்டுபிடிப்பு மற்றும் பொறியியல் திறன்களுக்கு ஓர் மிக சிறந்த எடுத்துக்காட்டாகவும் இந்த விமான நிலையம் அமைந்திருக்கின்றது.

இத்துடன், ஆண்டுதோறும் இந்த விமான நிலையத்தின் வாயிலாக மில்லியன் கணக்கான விமான பயணிகள் பலனடைந்துக் கொண்டிருக்கின்றனற். 1999 ஆம் ஆண்டில் இருந்து இந்த விமான நிலையம் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. உலகெங்கிலும் நாடுகளை சவுதி அரேபியாவுடன் இணைப்பதில் இந்த விமான முனையம் மிகப் பெரிய பங்கினைக் கொண்டிருக்கின்றது.

இதன் அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாகவே இந்த விமான நிலையத்தின் மிகப் பெரிய அளவிற்கும் காரணமாக இருக்கின்றது. மேலும், தொடர்ந்து தேவை இந்த விமான நிலையம் அதிகரித்து வருவதாலும் கிங் ஃபஹத் விமான நிலையத்தை மிக பிரமாண்டமானதாக சவுதி அரேபியா அரசு உருவாக்கி இருக்கின்றது.

கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் அதிநவீன வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பயணிகளுக்கு அனைத்து விதங்களிலும் மிக சிறந்த முனையாக இருக்கும் வகையில் அது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. கட்டணமில்லா ஓய்வெடுக்கும் அறைகள், கழிப்பறைகள் உள்ளிட்டவை இந்த முனையத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும், அதிகப்படியான கடைகளும் இங்கு இருக்கிறது. பயணிகள் தங்களின் தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ள இந்த கடைகள் உதவும். இந்த விமானத்தின் மற்றுமொரு தனிச் சிறப்பாக அதன் காட்டுப்பாட்டு கோபுரம் இருக்கின்றது. இந்த கோபுரத்தின் உயரும் விமான நிலையத்தைப் போல பெரியதாக இருக்கின்றது.

சுமார் 262 அடி உயரம் கொண்டதே இந்த கோபுரம் ஆகும். ஆகையால், உலகின் மிக உயரமான கண்கானிப்பு கோபுரமாக இது தென்படுகின்றது. மேலும், இந்த விமான நிலையத்தின் ஓடுதளமும் மிகவும் நீளமானதாகக் காட்சியளிக்கின்றது. அதன் ஓடுதளம் 4 ஆயிரம் மீட்டர்கள் ஆகும்.

அதாவது 13,123 அடி நீளம் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே, உலகின் மிகப் பெரிய விமானங்களையும் இந்த விமான நிலையத்தில் தரையிறக்க மற்றும் டேக்-ஆஃப் செய்ய முடியும். இந்த விமான நிலையம் பயணிகளுக்கானது மட்டுமல்ல கார்கோவிற்குமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கான சிறப்பம்சங்களையும் இந்த முனையம் தாங்கி இருக்கின்றது.

பெரிய கார்கோ ஏப்ரான், கிடங்குகள் மற்றும் தளவாட மையங்கள் உள்ளிட்ட பிரத்யேக வசதிகளை இந்த விமான நிலையம் தாங்கி இருக்கின்றது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் இன்னும் பல உலக நாடுகளில் இருந்தும் விமானங்கள் இந்த முனையத்திற்கு வந்துக் கொண்டிருக்கின்றன. எனவே சவுதி அரேபியாவில் நுழைவதற்கான முக்கிய நுழை வாயிலாக இந்த விமான நிலையம் இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்ளூர் மற்றும் சர்வதேச நாடுகளை இணைக்கும் வகையிலும் இந்த விமான நிலையம் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. உலக நாடுகளையே பிரம்மிக்க வைக்கும் வகையில் இந்த விமான நிலையம் இருக்கின்றது. தரத்திலும், பயணிகளுக்கு மிக சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் இந்த விமான நிலையம் பெஸ்ட்டான ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2024, 14:49 [IST]
English summary
Here is some interesting facts about king fahd international airport
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+