ஒரு சின்ன நெருப்பு பொறி போதும் முழு வண்டியையும் விழுங்க... தீபாவளி நேரத்துல வாகனங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்!

தீபாவளி பண்டிகையின்போது வாகனங்களை எப்படி எல்லாம் பாதுகாக்கலாம் என்கிற வழிமுறைகளையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

தீபாவளி பண்டிகை நாள் நெருங்கிட்டு இருக்கு. வீட்ல இருக்கவங்களுக்கு புதுசா துணி, பட்டாசு எல்லாம் வாங்கணும், ஊருக்கு போகணும்னு இப்படி பெரிய லிஸ்டையே போட்டிருப்பீங்க. அதுக்கு முன்னாடி உங்க வண்டியை பத்திரமா ஓர் பாதுகாப்பான இடத்தில் நிறுத்த திட்டம் போடுங்க. இந்தியாவில் அதிக தீ விபத்து நிகழ்வுகள் தீபாவளி பண்டிகையின்போதே நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

குறிப்பாக, தீ சார்ந்து அரங்கேறும் விபத்துகள் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளினாலேயே அதிகளவில் அரங்கேறுகின்றன. எனவேதான், பட்டாசு வெடிக்கும் அதிக பாதுகாப்பான முறையில் அவற்றை வெடிக்க செய்ய வேண்டும் என காவல்துறையும், சமூக நல ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர். இருப்பினும், ஒரு சிலர் பாதுகாப்பே இல்லாமல் வெடியை வெடிக்கச் செய்து, சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றனர்.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

இந்த மாதிரியான சூழலில் நம்மையும், நம்முடைய வாகனங்களையும் பத்திரப்படுவது நம்முடைய தலையாய கடமையாக இருக்கின்றது. ஒரு சிறு துளி நெருப்பு பொறிகூட ஒட்டுமொத்த வாகனத்தையும் விழுங்க (தீயிற்கு இரையாக) செய்துவிடலாம். பெட்ரோல், டீசல் வாகனங்கள் மட்டுமின்றி மின்சார வாகனங்களும் எளிதில் தீயிற்கு இரையாகும் நிலை உள்ளது.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

எனவேதான் இந்த பதிவில் வரும் எலெக்ட்ரிக் வாகனங்களை எப்படி இந்த தீபாவளியின்போது பாதுகாக்க வேண்டும் என்கிற சில எளிய வழிமுறைகளை தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

முக்கிய தேவை:

மின்சார வாகனத்தை பயன்படுத்துபவர் தங்களுக்குச் சொந்தமாக ஓர் தீயணைப்பானை வைத்திருப்பது அவசியம். மின் வாகனங்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே இதனை வைத்திருக்க வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு வீட்டிலும் இது இருப்பது அவசியமானது. எதிர்பாராத தீ விபத்துகளைக் கையாள இவை மிகுந்த உதவியாக இருக்கும். எனவேதான் தீயணைப்பான்கள் அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

அந்தவகையில், மின் வாகன பயன்பாட்டாளர்களும் தங்களுடன் தீயை அணைக்கும் வைத்திருப்பதனால் எதிர்பாராத தீ விபத்துகளின்போது பெரியளவு சேதமின்றி வாகனத்தை பாதுகாக்க முடியும். மின்சார கார் மட்டுமின்றி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்களும் இந்த அம்சத்தை மிக தாராளமாக வைத்திருக்கலாம். இதேபோல், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை வாகனங்களை வைத்திருப்பவர்களும் இந்த கருவியை வைத்திருக்கலாம்.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

செய்யக் கூடாதவை:

உங்கள் வாகனத்தை தெருவோரத்தில் நிறுத்த வேண்டாம். எந்த நிலையிலும் வாகனங்களை தெருவோரத்தில் நிறுத்தக் கூடாது என்பதே எங்களின் அறிவுரை ஆகும். தெருவோரங்களில் வாகனத்தை நிறுத்துவதனால் எலி போன்ற கொறித்துண்ணிகளின் தாக்குதலுக்கு வாகனங்கள் ஆளாகலாம். அதுமட்டுமின்றி அதிக தூசி, அதிக வெயில் மற்றும் மர இளைகள் ஆகியவற்றின் தாக்குதல்களால் வாகனங்கள் அதன் புதிய பொலிவை இழக்க நேரிடலாம்.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

இதேபோல், சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களே அதிகளவில் தீபாவளி பண்டிகையின்போது தீ பாதிப்பு ஆளாகின்றன. ஆகையால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்ல பெட்ரோல், டீசல், சிஎன்ஜி என எந்த வாகனமாக இருந்தாலும், தீபாவளி முடியும் வரை சாலையோரங்களில் நிறுத்துவதைக் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். நல்ல பார்க்கிங் ஸ்பேஸில் வாகனத்தை விட்டு அதற்கு பாதுகாப்பை ஏற்படுத்திவிடுவது நல்லது.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

இதேபோல், வாகனங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கச் செய்யலாம். சாலையோரத்தில் வெடிப்பதாக நினைத்து சிலர் வாகனங்களுக்கு அருகில் வைத்து வெடிக்கச் செய்வதை நாம் பார்த்திருப்போம். இந்த மாதிரியான நேரங்களிலேயே பெரும்பாலான வாகன தீ விபத்துகள் அரங்கேறியிருக்கின்றன.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

ஆகையால், வாகனங்களுக்கு வெடி வைப்பதை தவிர்ப்பது சிறந்தது. இதேபோல், வெடி வெடிக்கும் நேரத்தில் வாகனங்களை இயக்குவதை முற்றிலும் தவிர்த்துவிடுவது மிக மிக சிறந்தது. குறிப்பாக, பற்ற வைத்த பட்டாசு வெடிக்கவில்லை என நினைத்து அதைத் தாண்டி செல்வதை முழுக்க முழுக்க தவிர்த்துவிடுங்கள். சில புஷ்வானங்கள் மற்றும் பட்டாசுகள் பற்ற வைத்த சில நேரங்கள் கழித்தே வெடிக்க செய்யும்.

தீபாவளினாலே வண்டிங்களுக்கு ஆபத்துதான்! ஆனா இந்த சூழ்ச்சமங்களை எல்லாம் செஞ்சீங்க உங்க வாகனத்துக்கு ஒன்னுமே ஆகாது!

எனவே வெடிக்கவில்லை என நினைத்து கடப்பதை தவிர்த்துவிடுங்கள். இதுமட்டுமில்லைங்க, இன்சூரன்ஸ் போடம் இருந்தாலோ, காலாவதியாகி இருந்தாலோ அதனை உடனே புதுப்பித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் என்னதான் பாதுகாப்பாக செயல்பட்டாலும் சில நேரங்களில் நம்மை அறியமாலே தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன. இந்த மாதிரியான நேரங்களில் காப்பீடு நமக்கு கை கொடுக்கும்.

மேலே பார்த்த அனைத்தும் மின்சார வாகனங்களுக்கு மட்டுமின்றி பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி அனைத்திற்கும் பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, October 17, 2022, 16:28 [IST]
English summary
Here is some tips to protect your electric vehicle from crackers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+