இதை யாருமே கவனிக்கறது இல்ல... விமான இருக்கையில் சின்னதா ஒரு ரகசிய பட்டன் இருக்கும்... எதற்காக தெரியுமா?
விமான இருக்கைகளில் சிறியதாக ஒரு பட்டன் இருக்கும். அது எதற்காக? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். ஆனால் விமானங்களில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே அதில் உள்ள பிரச்னைகளை பற்றி ஆழமாக தெரியும். விமானங்களில் 'எகானமி க்ளாஸ்' (Economy Class) இருக்கைகளில் பயணம் செய்பவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக இட நெருக்கடி உள்ளது.

'எகானமி க்ளாஸ்' இருக்கைகளில் மிக நீண்ட நேரம் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் கடினம். அந்த அளவிற்கு இருக்கைகள் மிகவும் நெருக்கடியாக இருக்கும். ஆனால் உடனடியாக இடவசதியை அதிகரித்து கொள்வதற்கு ரகசிய பட்டன் ஒன்று உள்ளது. விமானத்தின் இருக்கைகளில் இருக்கும் இந்த ரகசிய பட்டன் பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. உண்மையில் பலரும் இந்த பட்டனை கவனிப்பதே கிடையாது.

ஆனால் இந்த பட்டனை நீங்கள் அழுத்தினால் உடனடியாக உங்களுக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும். எனினும் இங்கே ஒரு விஷயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். ஒரு வரிசையில் ஒரு இருக்கையில் மட்டுமே இந்த வசதி இருக்கும் என்பதுதான் அது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், 'எய்ஸில் சீட்' (Aisle Seat) மட்டுமே இந்த வசதியை கொண்டிருக்கும்.

எப்போதும் ஜன்னல் ஓர இருக்கையை விரும்புபவர்கள் இதனை கவனத்தில் கொள்வது நல்லது. அது சரி, 'எய்ஸில் சீட்' என்றால் என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். எளிமையான சொல்வதென்றால், விமானத்தில் ஒரு வரிசையில் கடைசியாக அமைந்திருப்பதுதான் 'எய்ஸில் சீட்'. இன்னும் புரியும்படி சொல்வதென்றால், ஒரு வரிசையில் நாம் நுழைகிறோம் என வைத்து கொள்வோம்.

அப்போது முதலில் இருக்கும் இருக்கையைதான் 'எய்ஸில் சீட்' என்கின்றனர். அந்த இருக்கையை கடந்துதான் ஜன்னல் ஓர இருக்கைகளுக்கு செல்ல முடியும். தற்போது எது 'எய்ஸில் சீட்' என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம். பொதுவாக 'எய்ஸில் சீட்' ஆர்ம்ரெஸ்ட்டை மேலே தூக்க முடியாது. ஆனால் ஆர்ம்ரெஸ்ட்டிற்கு அடியில் இருக்கும் ஒரு சிறிய பட்டன் மூலமாக, ஆர்ம்ரெஸ்ட்டை உங்களால் மேலே தூக்க முடியும்.

ஆர்ம்ரெஸ்ட்டிற்கு அடியில் கையை விட்டு தேடினால், அந்த பட்டன் உங்கள் கைகளுக்கு எளிதாக சிக்கும். இந்த பட்டனை அழுத்துவதன் மூலம், 'எய்ஸில் சீட்' ஆர்ம்ரெஸ்ட்டை மேலே தூக்கி கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு சற்று இடவசதி கிடைக்கும். பொதுவாக ஆர்ம்ரெஸ்ட்கள் இருந்தால், காலை நகர்த்த முடியாத சூழல் இருக்கும்.

நீங்கள் மேற்கொண்டு காலை நகர்த்த முயற்சி செய்தால், ஆர்ம்ரெஸ்ட் இடிக்கும். எனவே நெருக்கடியாக அமர்ந்து கொண்டு பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் இந்த பட்டனை அழுத்துவதன் மூலமாக ஆர்ம்ரெஸ்ட்டை நீங்கள் மேலே தூக்கி கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு சௌகரியமான இடவசதி கிடைக்கும்.

கால்களை நீங்கள் சௌகரியமாக வைத்து கொண்டு பயணம் செய்வதற்கு இது நிச்சயமாக உதவி செய்யும். இது மிகப்பெரிய இடவசதியை அளிக்காது என்றாலும், பயணத்தின்போது நீங்கள் கால்களை சௌகரியமாக வைத்து கொள்வதற்கு இது கண்டிப்பாக உதவும். அத்துடன் அவசர சூழ்நிலைகளின்போதும் கூட, இந்த பட்டன் உங்களுக்கு உதவி செய்யும்.

பயணிகள் தடங்கல் இல்லாமல் வெளியே வருவதற்கு இந்த பட்டன் உதவி செய்கிறது. ஆர்ம்ரெஸ்ட் கீழே இறக்கப்பட்டிருக்கும் நிலையில் வெளியே வருவதற்கும், ஆர்ம்ரெஸ்ட் மேலே உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் வெளியே வருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. விமானங்களில் அவசர சூழ்நிலையின்போது, ஒவ்வொரு நொடியும் விலை மதிப்பில்லாதது.

இதன் காரணமாகவும் இந்த பட்டன் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இந்த ரகசிய பட்டன் மூலமாக நீங்கள் ஆர்ம்ரெஸ்ட்டை மேலே தூக்கி வைத்து கொண்டு பயணித்தாலும், ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும். விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்ட் ஆகும்போது எக்காரணத்தை கொண்டும் ஆர்ம்ரெஸ்ட் மேலே தூக்கப்பட்ட நிலையில் இருக்க கூடாது.

கீழே இறக்கப்பட்ட நிலையில்தான் இருக்க வேண்டும். இது அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. விமானம் 'டேக்-ஆஃப்' மற்றும் 'லேண்ட்' ஆகும்போது அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்போது ஆர்ம்ரெஸ்ட் உயர்த்தப்பட்ட நிலையில் இருந்தால், அது பயணிகளுக்கு காயத்தை ஏற்படுத்தலாம்.

எனவேதான் விமானம் 'டேக்-ஆஃப்' மற்றும் 'லேண்ட்' ஆகும்போது, ஆர்ம்ரெஸ்ட்டை மேலே உயர்த்திய நிலையில் வைக்க கூடாது என்கின்றனர். சரி, அடுத்த முறை நீங்கள் நெருக்கடியான விமானத்தில் பயணம் செய்யும்போது, இந்த பட்டன் உங்களுக்கு உதவி செய்யும் என நம்புகிறோம். அதேசமயம் சில விமானங்களில் பட்டனுக்கு பதிலாக, சிறிய லிவர் வழங்கப்பட்டிருக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








