பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா

கார், பேருந்து, லாரி போன்ற வாகனங்களில் இருப்பதைப் போல் விமானங்களிலும் வைப்பர்கள் வழங்கப்பட்டிருக்குமா? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

மழைக் காலத்தில் தெளிவான பார்வையை வழங்கும் விதமாக கார், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களில் வைப்பர்கள் வழங்கப்படுகின்றன. இது, விண்ட்ஷீல்டு மீது விழும் மழை துளிகளை உடனடியாக அகற்ற உதவும். இந்த அம்சம் பிளேன்களிலும் வழங்கப்படுமா?, என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு உள்ளது. பெரும்பாலான விமானங்களில் வைப்பர்கள் வழங்கப்படுகின்றன.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

அதேநேரத்தில், வைப்பர்களுக்கு பதிலாக மழை நீரை உடனடியாக வழிந்தோட செய்யும் கெமிக்கல், ஹைட்ரோஃபோபிக் சீல் கோட்டிங் மற்றும் நியூமேட்டிக் உள்ளிட்டவையும் சில விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

எந்தெந்த விமானங்களில் என்ன மாதிரியான வைப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன?

விமானங்களிலேயே பல வகை விமானங்கள் உள்ளன. தனியார் பயன்பாட்டு விமானம், வணிக விமானம் மற்றும் ராணுவ பயன்பாட்டு விமானம். இவற்றில் எந்தெந்த விமானங்களில் என்ன மாதிரியான வைப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன?, என்பதை விரிவாக அடுத்தடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம்.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

தனியார் விமானம்:

செல்வம் மிகுந்துக் கிடக்கும் தொழிலதிபர்கள் தங்களின் தனிப்பட்ட பயணங்களுக்கென தனி நபர் விமானங்களை (பிரைவேட் ஜெட்) பயன்படுத்துகின்றனர். சிறிய தோற்றம் கொண்டிருக்கும் ஒற்றை எஞ்ஜின் கொண்ட அந்த விமானத்தில் மழை நீரை அகற்றக் கூடிய வைப்பர்கள் எதுவும் இருக்காது. என்ன வைப்பர் இருக்காதா?, அப்போ அவங்க எப்படி விமானத்தை ஓட்டுவாங்க?, மழை டைம்ல கார் ஓட்டுறதே கஷ்டம், இந்த நேரத்துல விமானத்தை தரையிறக்குவது என்பது மிகுந்த சிரமமானதாச்சே என நினைக்கிறீர்களா?..

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

கவலையே வேண்டாம். ஏனெனில் விமானத்திற்கு முன் பக்கம் ஓர் பெரிய ப்ரொப்பல்லர் இருக்கும். இதுவே விமானத்தை இயங்க செய்யும். இது காற்றை அதிக வேகத்தில் வெளியேற்றும். இந்த செயலே கண்ணாடியில் ஒரு துளி நீரைக் கூட தேங்க விடாமல் செய்கின்றது. ஆகையால், வைப்பருக்கான தேவை அறவே இல்லாத நிலை உருவாகின்றது. அதேநேரத்தில் மிகக் கடுமையான மழை பொழிந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சிறிய ரக விமானங்கள் பறக்க அனுமதிப்பதில்லை. தெளிவான பார்வை கிடைப்பதில் மட்டுமில்லைங்க சீராக பறப்பதிலும் அப்போது சிக்கல் என்பதால் இந்த கெடுபிடி கடைபிடிக்கப்படுகின்றது.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

வர்த்தக விமானம்

வணிக விமான பிரிவில் பயன்படுத்தப்படும் போயிங் 737, போயிங் 747, ஏர்பஸ் 330 உள்ளிட்ட விமானங்களில் வைப்பர்கள் வழங்கப்படுகின்றன. இரு விதமான வேகங்களில் இயங்கும் வகையில் அந்த வைப்பர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த வைப்பர்களை பெரும்பாலும் விமானிகள் விமானங்கள் பறக்கும் பயன்படுத்த மாட்டார்களாம். அதேவேலையில், விமானங்கள் டேக்-ஆஃப் மற்றும் லேண்ட் ஆகும் போது மட்டுமே பயன்படுத்துவர்களாம். இந்த இரு செல்களின்போது மட்டுமே வைப்பர்கள் அதிகபட்சம் தேவைப்படும்.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

விமானங்கள் பறக்கும்போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த நிலை வைப்பர்களின் தேவையை போக்கிவிடுகின்றன. மேலும், விமானத்தின் மூக்கு பகுதி கூர்மையாக இருப்பதால் காற்று அதன் மீது மீதி கண்ணாடி மீது இருக்கும் நீர் துளிகளை வேகமாக மேல் நோக்கி நகர்த்திவிடுகின்றன. இதுபோன்ற காரணங்களால்தான், பறக்கும் நேரங்களில் விமானிகள் வைப்பர்களை அணைத்து வைத்துவிடுகின்றனர்.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

மிலிட்டரி விமானங்கள்:

ஃபைட்டர் ஜெட் போன்ற திறன் வாய்ந்த மிலிட்டரி விமானங்களில் விண்ட்ஷீல்டு வைப்பர்கள் வழங்கப்பட மாட்டாது. இதற்கு பதிலாக மழை நீரை உடனடியாக வழிந்தோட செய்யக் கூடிய சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கும். ஃபைட்டர் ஜெட் விமானங்கள் பொதுவாகவே வழக்கமான விமானங்களைக் காட்டிலும் காட்டிலும் மிக அதிக வேகத்தில் இயங்கக் கூடியவையாக உள்ளன.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

இந்த அதி வேக திறனே கண்ணாடி மீது மழை நீரை துளியளவும் தேங்க விடாமல் செய்துவிடுகின்றது. அதாவது, விமானத்தின் அதீத வேகம் விண்ட் ஷீல்டை தெளிவான பார்வைத் திறன் கொண்டதாக மாற்றிவிடுகின்றது. இதைத் தாண்டியும் விமானிக்கு தெளிவான பார்வைத் தேவைப்படும் எனில் விண்ட்ஷீல்டில் அதீத வேகத்துடன் காற்றை அடிக்கும் வகையில் ஓர் வசதி வழங்கப்பட்டிருக்கும்.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

அது, விமானத்தின் எஞ்ஜினில் இருந்து காற்றை நேரடியாக விண்ட்ஷீல்ட் மீது செலுத்த உதவும். மழை நீர் மட்டுமின்றி ஐஸ் கட்டி போன்றவற்றையும் அது தேங்க விடாது. அந்தளவிற்கு கடுமையான வேகத்தில் காற்றை வெளியேற்றும் திறன் கொண்டத அந்த கருவி. இத்துடன், அது அதிக வெப்பமான காற்றை வெளியேற்றும் வசதியையும் கொண்டிருக்கின்றது.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

விமானங்களில் விண்ட்ஷீல்டு வைப்பர்கள் எப்படி வேலை செய்யும்?

பெரும்பாலான விமானங்களில் எலெக்ட்ரிக் மோட்டாரால் இயங்கக் கூடிய விண்ட்ஷீல்டுகளே வழங்கப்பட்டிருக்கும். தொடர்ந்து, ஹைட்ராலிக் வைப்பர் மோட்டார்களும் மற்றொரு மாற்றாக விமானங்களில் வழங்கப்படுகின்றது. பேருந்துகளில் காணப்படுவதைப் போலவே நீரை வழிக்கும் ரப்பர் துண்டு, அதை தாங்கிக் கொண்டிருக்கும் கை மற்றும் மோட்டார்/ கன்வெர்டர் இந்த அமைப்பே விமானங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

விமானி மற்றும் கோ-பைலட் என இரு பக்கங்களிலும் இந்த அமைப்புடைய வைப்பர் வழங்கப்பட்டிருக்கும். ஒரு வேலை விமானி பக்கத்தில் இருக்கும் வைப்பர் இயங்காமல் போனால், கோ-பைலட் பக்கத்தில் இருக்கும் வைப்பரை பயன்படுத்தி தெளிவான பார்வையைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த மோட்டார்கள் மித மிஞ்சிய வேகத்தில் செயல்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. அவை குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

ஒரு வேலை வைப்பரில் பிரச்னை என்றால் விமானிகள் என்ன செய்வார்கள்?

மேலே கூறியதைப் போல் ஒரு பக்கம் வைப்பர் வேலை செய்யவில்லை எனில் மற்றொரு பக்கம் இயங்கக் கூடிய வைப்பரைக் கொண்டு விமானிகள் மேனேஜ் செய்து கொள்வார்கள். ஒரு வேலை இரண்டும் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வார்கள்? பொதுவாகவே, விமானம் அதன் பயணத்தைத் தொடங்கும் அதன் அனைத்து முக்கிய பாகங்களும் சரிவர செயல்படுகின்றதா என்ற சோதனைக்கு உட்படுத்துவது வழக்கம்.

பிளேன்களில் வைப்பர்கள் இருக்குமா? இருந்தாலும் பறக்கும்போது அதை விமானிகள் யூஸ் பண்ண மாட்டாங்களாம்! ஏன் தெரியுமா?

அந்த நேரத்தில் வைப்பர்கள் வேலை செய்யவில்லை எனில் அந்த விமானம் பறக்க அனுமதிக்கப்படாது. இதைத்தாண்டியும் சில நேரங்களில் திடீரென வைப்பர்கள் தோல்வியுறும் சம்பவங்கள் அரங்கேறலாம். மழைக்காலங்களில் இந்த நிலை ஏற்படும் எனில், மழை பொழியக் கூடிய அந்த இடத்தில் தரையிறங்காமல் மாற்று விமான நிலையங்களுக்கு அந்த விமானங்கள் திருப்பி விடப்படும். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் இவ்வாறு செய்யப்படும்.

Article Published On: Saturday, July 9, 2022, 14:00 [IST]
English summary
Here is to know about airplanes and windshield wipers
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+