மழைக்கு பயந்து கார மேம்பாலத்துல நிறுத்தாதீங்க! வேளச்சேரி மக்களே இத செய்யுங்க.. கார் மூழ்கினாலும் ஒன்னுமாகாது!!

இப்ப எல்லாம் மழை பெஞ்சா, நம்மல எப்படி காப்பாத்தலாம்னு யோசிப்பவர்களைக் காட்டிலும் நம்முடைய வாகனங்களை எப்படி பாதுகாக்கலாம்னு யோசிக்கிறவர்களே அதிகமா இருக்காங்க. இதுக்கு சமீபத்திய மழைகளை உதாரணமாக சொல்லலாம். குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் சென்னைக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது. அப்போது மக்கள் பலர் தங்களின் வாகனங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மேம்பாலங்களைப் பயன்படுத்தினர். குறிப்பாக, வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பலர், ரெட் அலர்ட் விடுத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மேம்பாலத்தின் ஒரு பக்கத்தை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தத் தொடங்கினர்.

மக்களின் இந்த நடவடிக்கைக்கு முந்தைய மழைய வெள்ளம் கற்றுக் கொடுத்த பாடமே முக்கிய காரணம். இதற்கு முன்னதாக பெய்த மழையில் வேளச்சேரி மிகப் பெரிய சேதத்தைச் சந்தித்தது. குறிப்பாக, வாகனங்கள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலை காரணமாகவே அந்த பகுதி வாசிகள் பலர் இம்முறை முன்கூட்டியே தங்களின் வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்திவிட்டனர்.

Tips to save car from flood

மக்கள் மேம்பாலத்தைப் பயன்படுத்தியதற்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறி அபராதம் விதித்தனர். போலீஸார் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை என கூறி அங்கு வாகனங்களை மேலும் நிறுத்தியவர்களே அப்போது அதிகம். அந்த அளவிற்கு பலர் தங்களுடைய வாகனத்தை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வத்துடன்.

ஆனால், அந்த முறை மழை பெரிய அளவில் பெய்யவில்லை. வீணாக அபராதம் மட்டுமே செலுத்த வேண்டியிருந்தது. இந்த நிலையிலேயே மழை வெள்ளத்தில் இருந்து வாகனங்களை காப்பாற்றுவதற்கான புதிய சிந்தனை வைரல் வீடியோ ஒன்றின் வாயிலாக கிடைத்திருக்கின்றது. ஹோட்டல்களில் பார்சல் கட்டும் யுக்தியே அதுவாகும்.

பொதுவாக ஹோட்டல்களில் சாப்பாடு பார்சல் வாங்க சென்றால், சாப்பாட்டுக்கான குழம்பை பாலித்தீன் பைகளில் அடைத்து தருவார்கள். தடைச் செய்யப்பட்டு இருந்தாலும், மிகப் பெரிய அளவில் பாலித்தீன் பைகள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த செயல்முறையையே இங்கு சிலர் தங்களின் கார்களை வெள்ள நீர் பாதிப்பில் இருந்து காக்க பயன்டுத்தி இருக்கின்றனர்.

இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. உண்மையிலேயே இது மிக சிறந்த ஐடியா ஆகும். நம்மில் பலர் மழையில் வெளியே செல்லும்போது செல்போன் மற்றும் பிற பொருட்களை ஓர் பாலித்தீன் பையில் அடைத்துச் செல்வோம். இதைப்போலவே வெளிநாட்டில் சிலர் தங்களின் கார்களை வெள்ள நீரில் பாதுகாக்க செய்துக் கொண்டிருக்கின்றனர்.

பாலித்தீன் பையில் ஓட்டை ஏதும் இல்லை என்றால் நூறு சதவீதம் கார் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், பாலித்தீன் பை கிழியாமல் இருக்குமா என்பதே இங்கே சந்தேகம். அதேநேரத்தில், அருகாமையில் மேம்பாலம் இல்லை, வாகனத்தை பாதுகாக்க வேறு வழியே இல்லை என்பது போன்ற இக்கட்டான சூழலில் இருப்பவர்கள், வாகனத்தை அப்படியே மூழ்க விட்டுவிட்டு வருவதற்கு பதிலாக குறைந்தபட்சம் இந்த யுக்தியைக் கடைப்பிடித்து தங்களின் வாகனத்தை பாதிப்பில் இருந்து காப்பாற்றும் முயற்சியை மேற்கொள்ளலாம்.

தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவை வைத்து பார்க்கையில் இந்த ஐடியா நூறு சதவீதம் வெற்றியடையும் என்றே தெரிகின்றது. ஆனால், ஓர் காரை உள்ளே நுழுக்கும் அளவிற்கு பெரிய சைஸ் பாலித்தீன் பைகள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறதா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில், சில நிறுவனங்கள் மற்ற முன்னணி நிறுவனங்களுக்கு இதுபோன்று பெரிய அளவுள்ள கவர்களை தயார் செய்து வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது இங்கே கவனிக்கத்தகுந்து.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரிய அளவுள்ள கவர்களை கார்கள் போன்றவற்றிற்காக புழக்கத்திற்குக் கொண்டு வரலாம் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக தற்போது மாறி இருக்கின்றது. அதேநேரம், கார்களை கவருக்குள் நுழைத்து நிறுத்தினாலும், வெள்ள நீர் வேகமாக வந்தால் கார்கள் அடித்துச் செல்லும் சூழல் ஏற்படும் என்பதை இங்கே நாம் மறந்துவிடக் கூடாது. கவர் நீர் உள்புகாமல் மட்டுமே பாதுகாக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 8, 2024, 5:00 [IST]
English summary
Here is unique tips to save car from flood
மேலும்... #car tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+