ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

விமான நிலையங்களில் உங்கள் லேப்டாப்கள் ஏன் குறி வைக்கப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு, விமான நிலையங்களில் லக்கேஜ்களை சோதனை செய்வது தொடர்பான விதிமுறைகள் நன்றாக தெரியும். ஆனால் முதல் முறையாக விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு லக்கேஜ் சோதனை விதிமுறைகள் அவ்வளவாக தெரியாது. குறிப்பாக லேப்டாப்கள் (Laptops) எப்படி பரிசோதிக்கப்படும்? என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.

ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

இங்கே ஏன் லேப்டாப்களை பற்றி பேசுகிறோம் என்றால், விமான நிலையங்களின் லக்கேஜ் சோதனைகளில் லேப்டாப்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும். இதற்கு பின்னால் உள்ள காரணங்களை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக விமான நிலையங்களில், லக்கேஜ் பேக்கில் (Luggage Bag) இருந்து லேப்டாப்கள் தனியாக எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.

ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

லேப்டாப்களை மட்டும் தனியாக ஒரு ட்ரே-வில் வைத்து (Tray) விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் 'ஸ்கேன்' செய்வார்கள். லேப்டாப்களை பேக்கில் இருந்து தனியாக எடுத்து சோதனை செய்வதன் மூலம், பாதுகாப்பு அதிகாரிகளிக்கு ஸ்கேனில் தடையற்ற பார்வை கிடைக்கும். அதாவது மிகவும் நுட்பமாக அவர்களால் லேப்டாப்பை காண முடியும்.

ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

இதன் மூலமாக லேப்டாப்பில் பயணிகள் எதையும் மறைத்து எடுத்து செல்லவில்லை என்பதை அவர்கள் உறுதி செய்வார்கள். லேப்டாப்பில் வெடி பொருட்கள், போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்களை மறைத்து வைத்து கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற பொருட்களை விமானங்களில் கொண்டு செல்வதற்கு தடை உள்ளது.

ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

ஆனால் லேப்டாப்கள் மூலமாக அவற்றை கொண்டு செல்வதற்கான சாத்தியங்கள் உள்ளதுதான், லேப்டாப்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துவதற்கான முதல் காரணம். லேப்டாப்களின் மற்றொரு பண்பும் அவை தனியாக ஸ்கேன் செய்யப்படுவதற்கு காரணமாகிறது. லேப்டாப்கள் அளவில் பெரியவை. எனவே அவற்றுக்கு அடியில் ஏதாவது பொருட்கள் இருந்தால், ஸ்கேனில் அவற்றை தெளிவாக பார்ப்பதில் பிரச்னைகள் ஏற்படலாம்.

ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

அத்துடன் லேப்டாப்களின் பேட்டரிகள் மற்றும் ஒரு சில எலெக்ட்ரானிக்ஸ்கள் அதிக அடர்த்தியான உலோக மெட்டீரியல்களாக உள்ளன. எனவே அடியில் இருக்கும் பொருட்களை அவை மறைத்து விடலாம் எனவும் சொல்கின்றனர். இதுபோன்ற காரணங்களால்தான் விமான நிலையங்களில் லேப்டாப்கள் தனி கவனம் செலுத்தப்பட்டு, தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

இனி விமானங்களில் லேப்டாப்களை கொண்டு செல்வது குறித்து பலருக்கும் இருக்கும் சந்தேகங்களுக்கான விளக்கங்களை பார்க்கலாம். லேப்டாப்களை விமானங்களில் கொண்டு செல்வது பாதுகாப்பானதா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதற்கு 'பாதுகாப்பானது' என்பதுதான் சுருக்கமான பதில். லேப்டாப்களை விமானங்களில் கொண்டு செல்வதால் பாதுகாப்பில் எந்த பிரச்னையும் ஏற்படாது.

ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

ஆனால் லேப்டாப்களில் உள்ள லித்தியம் அயான் பேட்டரி விமானங்களுக்கு ஒரு அச்சுறுத்தல்தான் என்பதை மறுக்க முடியாது. அவை அதிகமாக சூடாகி, தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானவை. அப்படியே ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் கூட, அவற்றை எப்படி கையாள வேண்டும்? என்பது விமானத்தின் ஊழியர்களுக்கு தெரியும்.

ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

இது தொடர்பான சிறப்பு பயிற்சிகளை அவர்கள் பெற்றிருப்பார்கள். அத்துடன் இதுபோன்ற பிரச்னைகளை கையாள்வதற்கு தேவையான உபகரணங்களும் இருக்கும். எனினும் உங்கள் லேப்டாப் வழக்கத்தை விட அதிகமாக சூடானால், உடனடியாக விமான பணிப்பெண்களிடம் தகவல் தெரிவிப்பது நல்லது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது உதவும்.

ஏர்போர்ட்களில் உங்க லேப்டாப் குறி வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்! இப்படி எல்லாம் கூட நடக்குமா?

இதற்கு அடுத்தபடியாக பாதுகாப்பு சோதனையின்போது செய்யப்படும் ஸ்கேன்கள் லேப்டாப்களில் சேதம் உண்டாக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஸ்கேன்களால் லேப்டாப்களில் எந்த பாதிப்புகளும் ஏற்படாது என்பதுதான் இதற்கான பதில். டேப்லெட்கள், செல்போன்கள் மற்றும் கேமராக்கள் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, June 16, 2022, 13:42 [IST]
English summary
Here is why laptops are checked separately at airport security
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+