வீலும் வழவழனு இருக்கு, தண்டவாளமும் வழவழனு இருக்கு, இருந்தும் ரயில் நழுவி ஓடாம நிற்கும்! இதற்கான காரணம் என்ன?
வீலும் வழவழனு இருக்க, தண்டவாளமும் வழவழவென இருக்க ரயில்கள் பிரேக்கிங்கின்போது உடனடியாக நிற்க என்ன காரணம் என்பது பற்றிய தகவலையே இந்த தொகுத்து வழங்கி உள்ளம். இதுகுறித்த ஆச்சரியமளிக்கும் தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டிரெயின்ல போகாதவர்களே இருக்க முடியாது. நம்மில் பலர் தினசரி ரயிலை பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர். அவ்வாறு பயணிப்பவர்களுக்கு ரயில் போக்குவரத்து பற்றிய பல்வேறு சந்தேகங்கள் இருக்கலாம். அந்தவகையில், இருக்கக் கூடிய ஓர் மிகப் பெரிய சந்தேகமே ரயிலின் பிரேக் சிஸ்டம் பற்றியதாக இருக்கின்றது. ஆமாங்க, ரயிலின் வீலும் வழவழவென இருக்க, தண்டவாளமும் வழவழவென இருக்க எப்படி பிரேக் பிடித்த உடன் ரயில்கள் நிற்கின்றன என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு.

இந்த சந்தேகத்திற்கான பதிலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். விரிவான தகவலுக்குள் போகலாம், வாங்க... உராய்வே இதற்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, உடனடி நிறுத்தத்திற்காக ஓர் ரசாயனமும் பயன்படுத்தப்படுகின்றது. இதுவே ஓர் டயர் கொண்ட வாகனத்தைபோல் ரயிலை தண்டவாளத்தில் செயல்பட வைக்கின்றது. அதாவது, உடனடியாக நிற்கும் அளவிற்கு பிடிமானத்தை வழங்குகின்றது. ரசாயனம் வீல் மற்றும் தண்டவாளத்திற்கும் இடையே கடினமான பிடிமானத்தை வழங்க உதவும்.
ஓர் வாகனத்தின் நிறுத்தம் திறன் அதன் உராய்வு குணகத்தை (coefficient of friction) பொருத்தே அமைகின்றது. ஓர் ரப்பர் டயரில் இயங்கும் வாகனத்தின் பொதுவான உராய்வு குணகம் 0.7 மற்றும் 0.9 ஆக உள்ளது. ஆனால், ரயிலின் உராய்வு குணகம் இதைவிட சற்று குறைவே ஆகும். உதாரணமாக ஃபிளாட்டான வீல் தண்டவாளத்தில் 0.4 கேஎஃப்சீயன்டில் இயங்கும். இதுவே அதன் ஸ்டாண்டர்டு உராய்வு குணகம் ஆகும்.

இதில் மிகவும் ஸ்மூத்தாகவே அவை இயங்கும். இந்த லிமிட்டை தாண்டாத வண்ணமே எஞ்ஜினின் வேகம் நிர்ணயம் செய்யப்படுகின்றது. எனவேதான் எஞ்ஜின்கள் தண்டவாளத்தில் இயங்கும்போது ஸ்லிப் ஆகுவதில்லை. அதேவேளையில் மழை காலத்தில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவேதான் மழைக்காலத்தின் சீரான உராய்வு குணகத்தை வழங்க பன்முக கருவிகள் எஞ்ஜினில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் மழைக் காலத்தில் ரயில்கள் வழக்கமான வேகத்தில் இயக்கப்படுவது இல்லை.
சற்று குறைவான வேகத்திலேயே இயக்கப்படும். அதேநேரத்தில், சிறந்த பிரேக்கிங்கிற்காக எஞ்ஜின் வீல்களுக்கு மேல் சேண்ட் பாக்ஸ் எனும் கருவி பயன்படுத்தப்பட்டிருக்கும். இது வீல் ஸ்லிப்பாவதை தவிர்க்க உதவும். இந்த அம்சங்களே ஓர் ரயில் உடனடியாக ஸ்லிப் ஆகாமல் நிற்க உதவியாக இருக்கின்றன. அதேவேளையில் மிதமிஞ்சிய வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் நிச்சயம் ரயில் ஒரு சில கிமீ நழுவிக் கொண்டே செல்லலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமில்லைங்க, ரயில் தடம் புரளவும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் ரயில் பைலட்டுகள் குறிப்பிட்ட அளவு வரை வேகம் குறைந்த பின்னரே முழு நிறுத்தத்தை வழங்குகின்றனர். பாதுகாப்பான நிறுத்தத்திற்கே இந்த கையாளுதலே உதவுகின்றது. இந்தியன் ரயில்வேஸ் வெகு விரைவில் உள் நாட்டிலேயே உருவாக்கிக் கொண்டிருக்கும் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை வெளியீடு செய்ய இருக்கின்றது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ரயில்களை ரீ-பிளேஸ் செய்யும் விதமாகவே இந்த ரயில்கள் பன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.
இந்தியன் ரயில்வேஸ். இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை ரயில்வேத் துறை மற்றும் கம்யூனிகேஷன் துறையின் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கடந்த ஞாயிற்றுக் கிழமை (18 டிசம்பர்) அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே உறுதிப்படுத்தினார். இந்தியன் ரயில்வேஸ் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை மட்டுமே உருவாக்கவில்லை, அது வந்தே பாரத் 3 ரக ரயிலையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
இதில் ஸ்லீப்பர் கிளாஸ்கள் இடம் பெறும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். ஆகையால், விரைவில் வந்தே பாரத் ரயில் நீண்ட நெடிய பயணங்களுக்கும் பயன்பாட்டிற்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது. வந்தே பாரத் 3 ரயில் உலக தரத்திற்கு ஏற்றதாகவும், எதிபார்த்திராத பல்வேறு மிக முக்கிய சிறப்பு வசதிகளுடனும் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஒய்-ஃபை, சொகுசான இருக்கை என பற்பல வசதிகளுடன் இந்த ரயில் உருவாக்கப்பட்டு வருவது குறப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








