சீக்கிரமே ஊரு போய் சேருவதற்காக இத்தனை ரோடு போட்டுட்டு இருக்காங்களா!வெளிநாடுகளையே மிஞ்சப்போகும் இந்தியா!
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விரைவுச் சாலைகள் (Express Ways) அமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது அதிக வேகத்தில் வாகனங்களை இயங்க அனுமதிக்கும் சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளன. அத்தகைய குறிப்பிட்ட சில முக்கிய எக்ஸ்பிரஸ் சாலைகளின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிப் பொருப்பை ஏற்றதில் இருந்து போக்குவரத்து சார்ந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில், இந்த பாஜக அரசு மேற்கொண்டு வரும் மிக முக்கிய பணிகளில் ஒன்றாக புதிய சாலைகள் அமைத்தல் இருக்கின்றது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சாலைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. எனவேதான் இவற்றைக் கட்டமைப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதி தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சிறந்த மற்றும் அதி வேக சாலைகளைக் கட்டமைப்பதில் இந்த அரசு அதிகம் ஆர்வம் கொண்டதாக இருக்கின்றது.
இதன் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிதாக எக்ஸ்பிரஸ் சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு சில விரைவில் பயன்பாட்டிற்கு வரும் அளவிற்கு தயாராகிவிட்டன. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். குறிப்பாக சீக்கிரமே பொதுப் பயன்பாட்டிற்கு வர உள்ள விரைவு சாலைகளையே பார்க்க உள்ளோம்.

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே: கூடிய சீக்கிரமே பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறும் அளவிற்கு விரைவில் முடிவுறும் நிலையில் உள்ள விரைவுச் சாலைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த புதிய சாலை பயன்பாட்டிற்கு வரும் எனில் இரு முக்கிய நகரங்களை இணைக்கும் நேரம் வெகுவாகக் குறையும்.
இப்போது இரு நகரங்களுக்கும் இடையில் பயண நேரம் 13 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை உள்ளது. ஆனால், புதிய விரைவுச் சாலை பயன்பாட்டிற்கு வரும் எனில் அந்த பயண நேரம் 11-12 மணி நேரங்களாக குறையும். மேலும், இந்த சாலையில் பயணிக்கும்போது கணிசமான அளவு எரிபொருளையும் சிக்கனப்படுத்திக் கொள்ள முடியும்.

மும்பை-நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே: இந்த சாலை கட்டமைப்பு பணிகள் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் நிறைவடைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைவதற்குள் இந்த எக்ஸ்பிரஸ்வே பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் 8மணி நேரங்களாக குறையும். 8மாவட்டங்கள், 388கிராமங்களை இணைக்கும் வகையில் 701கிமீ நீளத்தில் இந்த எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டு வருகின்றது.
டெல்லி-அம்ரித்ஸர்-கத்ரா எக்ஸ்பிரஸ்வே: டெல்லியில் இருந்து ஜம்முவை இணைக்கும் பாதையாக இது பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இது ஓர் 4லேன்கள் கொண்ட எக்ஸ்பிரஸ் சாலையாகும். இந்த பாதை அம்ரித்ஸர், நோகடர் மற்றும் குர்தஸ்பூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் ஒட்டுமொத்த நீளம் 648 கிமீ ஆகும்.

கங்கா எக்ஸ்பிரஸ்வே: இதன் ஒட்டுமொத்த நீளமே 94 கிமீ மட்டுமே ஆகும். 6 லேன்களைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டு வருகின்றது. 12 நகரங்களை இணைக்கும் விதமாக இதனை அரசு கட்டமைத்து வருகின்றது. ஹபுர், புலந்த்ஷார், அம்ரோஹா, சாம்பல், ஷாஜகான்பூர், படாவுன், ஹர்டோய், உன்னாவ், பிரதப்கர்ஹ் மற்றும் ராபேரெலி ஆகிய நகரங்களையே இது இணைக்க இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்பிரஸ்வே சாலைகள் இந்தியாவில் வாகனங்களை அதிக வேகத்தில் செல்ல அனுமதிக்கின்றன. இதுமட்டுமின்றி, இவை பயண நேரத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கின்றன. இவற்றையே அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இவை அதிகளவில் பயன்பாட்டிற்கும் வரும்பட்சத்தில் தொழில்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும்.


Click it and Unblock the Notifications









