இந்த டேஷ்கேம்கள் இருந்தா தேவையில்லாத அபராதங்களை தவிர்க்கலாம்! 5விலை குறைவான சூப்பரான டேஷ்கேம்களின் லிஸ்ட் இதோ!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஐந்து டேஷ்கேம்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் காணலாம்.

பிரபல ஆன்லைன் வர்த்த நிறுவனமான அமேசான், விழா கால விற்பனையை 'கிரேட் இந்தியன் விழா' (Great Indian Festive) எனும் பெயரில் தொடங்கியிருக்கின்றது. வரும் விழாக் காலத்தை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு சலுகை விலையில் பொருட்களை விற்பனைச் செய்வதே இந்த திட்டத்தை அமேசான் தொடங்கியிருக்கின்றது.

வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி மின்சாதன பொருட்கள் வரை என பலவற்றிற்கு அமேசான் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அந்தவகையில், கார்களில் பயன்படுத்தப்படும் 'டேஷ் கேம்' எனப்படும் கேமிராக்களுக்கும் அது சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, சற்று மலிவான விலையில் அதிக சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 டேஷ் கேம்களின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

உலக நாடுகள் சிலவற்றில் டேஷ்கேம்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், இப்போதே இந்தியாவில் டேஷ்கேம்களின் முக்கியத்துவம் உணர்ந்து கார் பயன்பாட்டாளர்கள் அதனை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இது தேவையற்ற சட்ட நடவடிக்கைகளில் இருந்து நம்மைக் காக்க உதவியாக இருக்கும். குறிப்பாக, நாம் செய்யாத விதிமீறல்களுக்கு வழங்கப்படும் செல்லாண்களின் இருந்து தப்பிக்க டேஷ் கேம்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. இத்தகைய கேமிராக்களை வாங்க இதுவே சரியான நேரம். சரி வாங்க நாம பதிவுக்குள்ள போயிருவோம்.

இ-இன்ஃபினிட்டி டி600 (e-INFINITY T600)
நாம் பார்க்க இருக்கும் இந்த மலிவு விலை டேஷ் கேம் லிஸ்டில் மிகக் குறைவான விலைக் கொண்டதாக இ-இன்ஃபினிட்டி டி600 மாடல் டேஷ் கேம் இருக்கின்றது. இதன் விலை ரூ. 5,199 ஆகும்.4.3 அங்குல டிஎஃப்டி எல்சிடி திரையுடன் இந்த கேமிரா விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன் 170 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா 1080 வீடியோ குவாலிட்டியுடன் கிடைக்கின்றது.

இந்த கேமிரா நைட் விஷன், சைக்கிளிக் ரெக்கார்டிங், நடமாட்டத்தைக் கண்டு தானாக ரெக்கார்டு செய்யும் வசதி மற்றும் ஜி-சென்சார் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கருவியில் 32 ஜிபி வரையிலான மெமரி கார்டை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். இதன் ரெக்கார்டரை ஐஆர்விஎம்மிலும் பொருத்திக் கொள்ள முடியும்.

பைலே எச்டி (Pyle HD)
நம்முடைய இந்த பட்டியில் இரண்டாவது குறைந்த விலைக் கொண்ட டேஷ் கேமோக பைலே எச்டி கேமிரா இருக்கின்றது. இதையும், ஐஆர்விஎம்மில் பொருத்திக் கொள்ள முடியும். 4.3 அங்குல டிஎஃப்டி திரை, முழு எச்டி 1080பால் குவாலிட்டி கேமிரா மற்றும் பில்ட்-இன் ஜி சென்சார் ஆகிய அம்சங்களுடன் பைலே எச்டி டேஷ் கேம் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது வாட்டர் ப்ரூஃப் டெக்னாலஜி கொண்டது. இரு விதமான கேமிராக்களே பைலே எச்டி டேஷ் கேம் உடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், யுஎஸ்பி பவர் கேபிள் வசதியும் இந்த பேக்கில் வழங்கப்படுகின்றது. இதன் வாயிலாக சார்ஜ் செய்தல் மற்றும் டேட்டாவை பகிர்ந்துக் கொள்ளுதல் முடியும். இதன் விலை ரூ. 6,509 ஆகும்.

70 மை ஏ400 (70mai A400)
கார் டேஷ் கேம் உலகின் புகழ்பெற்ற ஒன்றே இந்த 70மை ஏ400. இதன் விலை ரூ. 8,329 ஆகும். இது டூயல் சேனல் 1,440 பால் வசதிக் கொண்ட கேமிராவைக் கொண்டிருக்கின்றது. 145 டிகிரி ஒயிட் ஆங்கிள், 128 ஜிபி வரை மெமரி கார்டை பயன்படித்திக் கொள்ளும் வசதி, பில்ட் இன் ஜி சென்சார், எஃப்2.0 அபர்ச்சர் லென்ஸ் மற்றும் டபிள்யூடிஆர் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் இந்த டேஷ்கேமில் வழங்கப்பட்டுள்ளது.

சோம்க் கார் டேஷ் கேம் (SOMK Car Dash Cam)
இதன் விலை ரூ. 9,006 ஆகும். இது ஓர் பிரீமியம் தர டேஷ்கேம் ஆகும். ஆகையால் எக்கசக்க சிறப்பு வசதிகளைத் தாங்கியதாக இது இருக்கின்றது. அந்தவகையில், 1080 பால் வீடியோ குவாலிட்டி, எஃப்1.4 அபர்ச்சர் அம்சம், கிராவிட்டி சென்சிங், லூப் ரெக்கார்டிங், மோசன் டிடெக்சன் வீடியோ, மேக்னட்டிக் ரொட்டேட் பிராக்கட் உள்ளிட்ட அம்சங்கள் பல இந்த டேஷ் கேமில் வழங்கப்பட்டிருக்கின்றன.

எஃப்என்எக்ஸ்® 2கே மிர்ரர் டேஷ் கேம் (FnX® 2K Mirror Dash Cam)
இந்த பட்டியலின் மிக விலையுயர்ந்த பிரீமியம் டேஷ் கேம் இதுவாகும். 2கே தர டூயல் கேமிராக்கள் இந்த டேஷ்கேம் பேக்கில் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 9,999 ஆகும். இரவு நேரத்திலும் படம் பிடிக்கும் திறன், பார்க்கிங் அசிஸ்டன்ஸ் போன்ற நவீன கால அம்சங்கள் பல இந்த கேமிராவில் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், கார் ஆர்வலர்கள் இந்த கேமிராவுக்கு சற்று கிராக்கி அதிகம். 10 ஐபிஎஸ் ஆன்டி கிளார் டச் திரை 2.5 டி கிளாஸ் உடன் இந்த டேஷ் கேம் பேக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








