விமான துறையில் பயன்படுத்தப்படும் CAT III பி தொழில்நுட்பத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பனிப் பொழிவு இம்முறை அதிகரித்துக் காணப்படுகின்றது. தமிழகத்தின் தலைநகர் சென்னயில் உச்சி வெயிலின்போதும் குளிர்ச்சியான காற்று வீசிக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகின்றது. அதேநேரத்தில், விடியற்காலை பொழுதில் பன பொழிவு மிகக் கடுமையாகக் காணப்படுகின்றது.
குறிப்பாக, நாட்டின் கிராமப்புறங்களில் பனி பொழிவு மிக தீவிரமாக இருப்பதை நம்மால் காண முடிகின்றது. கிராமங்கள் மட்டுமில்லைங்க சில நகரங்களும் கடும் பனி பொழிவு காரணமாக பெரும் சிக்கலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு மிக சிறந்த உதாரணமாக தலைநகர் தில்லியைக் கூறலாம்.

இங்கு கடும் பொழிவின் காரணமாக வாகன போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதை விட மிகப் பெரிய பாதிப்பை விமான போக்குவரத்து பிரிவு சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. கடுமையான பனி பொழிவின் காரணமாக 120 விமானங்கள் கால தாமதத்தைச் சந்தித்து இருக்கின்றன.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின்படி, 55 உள்ளூர் விமானம் மற்றும் 17 சர்வதேச விமானங்கள் தரையிறங்கவும், 39 உள்ளூர் விமானங்கள் மற்றும் 12 வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கவும் கால தாமதத்தைச் சந்தித்து இருக்கின்றன. இவை அனைத்தும் கடந்த செவ்வாய் (டிசம்பர் 26) காலை மட்டுமே அரங்கேறிய கால தாமதம் பற்றிய புள்ளி விபரம் ஆகும்.

இதுமட்டுமில்லைங்க சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவை அனைத்திற்கும் கடுமையான பனிப் பொழிவே காரணமாக இருக்கின்றது. இதற்கு முந்தைய நாளான டிசம்பர் 25 ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் துளி அளவும் பார்வை தெரியாத அளவிற்கு மிகக் கடுமையான பனிப் பொழிவு அரங்கேறியது.
இந்த நிலை அடுத்து வரும் நாட்களிலும் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், இந்தியாவில் இயக்கப்படும் சில விமானங்களில் சிஏடி III பி (CAT III B,) எனும் தொழில்நுட்பம் இல்லை என பகீரங்க குற்றச்சாட்டை டெல்லி ஏர்போர்ட் நிர்வாகம் முன் வைத்திருக்கின்றது.

சிஏடி III பி தொழில்நுட்பமா? அப்படினா என்ன? இது ஓர் நேவிகேஷன் சிஸ்டம் ஆகும். இது குறைந்தபட்ச பார்வை திறனை வழங்கும். சுமார் 50 மீட்டர் இடைவெளியில் உள்ளவற்றைக்கூட தெளிவாகக் காண உதவும். இந்த அம்சமே கேட் III பி ஆகும்.
இது இல்லாத விமானங்களே பெரும்பாலும் கால தாமதத்திற்கு ஆளாகி இருக்கின்றன. தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், அதிநவீன ஆண்டி-ஃபாக் லேண்டிங் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதைதான் சிஏடி III பி என அழைக்கின்றனர். இது ரேடியோ சிக்னல்களால் இயங்கக் கூடியது.
மோசமான பனி பொழிவின்போது மட்டுமல்ல கடுமையான வானிலையின்போதும் விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க உதவியாக இருக்கின்றது. இந்த அமைப்பை ஓர் விமான நிலையத்தில் அமைக்க ரூ. 10 கோடி வரை செலவாகும். இதோடு முடியாது. இதை பராமரிக்க மாதம் ரூ. 50 லட்சம் செலவாகும்.
மிக முக்கியமாக கொல்கத்தா விமான நிலையத்தில் இந்த அமைப்பு ரூ. 130 கோடி செலவில் சிஏடி III பி தொழில்நுட்பம் செட்-அப் செய்யப்பட்டு இருக்கின்றது. சிஏடி III பி செயல்படும் விதம்: ஓடுபாதை கண்ணில் படாத போது, தரையிலிருந்து 100 அடி உயரம் வரை பைலட்கள் சிக்னல்கள் வாயிலாக வழிநடத்தப்படுவார்.
இதற்கு பின்னர் ஆக வேண்டிய வேலையை சிஏடி III பி தொழில்நுட்பம் பார்த்துக் கொள்ளும். இது சுமார் 50 அடி தூரம் வரை உள்ளவற்றை தெளிவாக காண பைலட்களுக்கு உதவியாக இருக்கும். இதற்கு பின்னர் ஓடு தளத்தை விமானியால் தெளிவாகப் பார்க்க முடியும்.
ஆகையால், இதற்கு பின்னர் பாதுகாப்பான லேண்டிங் மிக தாராளமாக அரங்கேறும். மேலும், இந்த சிஸ்டம் ஆட்டோமேட்டிக் வழிநடத்தலையும் வழங்கும். அதாவது, எப்போது விமானம் திருப்ப வேண்டும், பிரேக் பிடிக்க வேண்டும் என்பதை அது படிபடியாக அறிவிக்கும். இதற்கான தொழில்நுட்ப வசதியை அந்த விமானம் கொண்டிருக்கவில்லை எனில் அது தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படும்.
இதனால்தான் இப்போதும் சில விமானங்கள் கடும் பனி பொழிபொழிவு ரத்து மற்றும் கால தாமதமாக தரையிறக்கப்படுகின்றன. இந்த அம்சத்தை டெல்லி ஏர்போர்ட் கொண்டிருக்கின்றது. இதேபோல், அம்ரித்சர், ஜெய்பூர், லக்னோ மற்றும் கொல்கத்தா விமானங்களும் சிஏடி III பி கொண்டிருக்கின்றன. அதேவேளையில், விஸ்தாரா மற்றும் இண்டிகோ போன்ற சில முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்களின் விமானிகளையும், விமானங்களையும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயார் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்பைக் காட்டிலும் இப்போது விமான போக்குவரத்த துறை பலமடங்கு வளர்ச்சியைச் சந்தித்து உள்ளது. இதற்கு ஓர் மிக சிறந்த முன்னுதாரணமே உள் நாட்டில் தயார் செய்யப்பட்ட சிஏடி III பி அம்சம் ஆகும். இது பயன்பாட்டிற்கு வந்த பின்னர் விமான போக்குவரத்துத் துறை இன்னும் பலமடங்கு மேம்பட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









