ஒரு விமானம் டேக்-ஆஃப் ஆக வேகம் இவ்ளோ முக்கியமா! டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்டாகும்போது என்ன வேகத்தில் இயங்கும்!

விமானங்கள் டவுன் பஸ்-ஐ போல ஆகிவிட்டன. அண்டை (பக்கத்துல இருக்க) மாவட்டங்களுக்கு செல்வதற்குகூட ஒரு சிலர் தற்போது விமானங்களை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இத்தகைய விமான போக்குவரத்துத் துறையில் வேகம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இது விமான இயக்கவியலின் முதுகெலும்பாகவும் பார்க்கப்படுகின்றது.

ஓர் விமானம் உயர பறக்க வேண்டும் என்றால் வேகம் முக்கியமானதாக இருக்கின்றது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அது பாதுகாப்பாக பறக்க அல்லது தரையிறங்க வேகமே முக்கிய காரணமாக உள்ளது. இந்த வேகத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் எனில் அந்த விமானம் மிகப் பெரிய ஆபத்தில்கூட சிக்க நேரிடலாம்.

Speed of an airplane

இதனால்தான் வேகத்தை விமான இயக்கவியலின் முதுகெலும்பு என கூறுகின்றனர். விமானத்தின் வேகத்தை அனிமோமீட்டர் (anemometer) வாயிலாக கணக்கிடுகின்றனர். இதை வைத்தே விமானத்தை டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகியவற்றை விமானிகள் மேற்கொள்கின்றனர். விமானத் துறையை பொருத்த வரை இரண்டு விதமாக வேகத்தை அளவிடுகின்றனர். நாட்ஸ் மற்றும் மேக் நம்பர் ஆகியவை அவை ஆகும்.

உதாரணமாக, ஓர் வணிக போக்குவரத்து விமானத்தின் வேகத்தை மேக் நம்பர் அடிப்படையில் குறிப்பிட வேண்டும் என்றால், வழக்கமாக ஒவ்வொரு வணிக விமானமும் மேக் 0.77 வேகத்தில் இயங்கும். கிமீட்டரில் இதை கூற வேண்டும் என்றால் தோராயமாக ஒரு மணி நேரத்திற்கு 860கிமீ ஆகும். இந்த வேகத்திலேயே வணிக விமானங்கள் வானில் பறக்கின்றன. இந்த வேகத்தில் பயணத்தால் மட்டுமே விமானத்தால் எரிபொருள் சிக்கனம் மற்றும் நேரத்திற்கு சென்று சேருவதை நிறைவேற்ற முடியும்.

Airplane

வேகமான வணிக விமானம்: இரண்டு விமானங்களே உளகின் மிக வேமகான கமர்சியல் விமானங்களாக உள்ளன. ஏர்பஸ் ஏ330 நியோ மற்றும் போயிங் பி788 ஆகியவை அவை ஆகும். இவை மின்னலையே மிஞ்சும் வேகத்தில் வானத்தில் பயணிக்கும். மணிக்கு 1,061 கிமீ மற்றும் 1,051 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை இவை ஆகும்.

டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்கின்போது விமானங்கள் என்ன வேகத்தில் இயங்கும்: குறிப்பிட்ட வேகத்தை எட்டினால் மட்டுமே ஓர் விமானம் பறக்க அனுமதிக்கப்படுகின்றது. அந்த வேகத்தை தொடவில்லை என்றால் மீண்டும் வட்டமடிக்கப்பட்டு பின்னரே அதை டேக் - ஆஃப் செய்ய விமானிகள் முயற்சிக்கின்றனர்.

Airplane speed

அந்தவகையில், மணிக்கு 250 கிமீ வேகம் அல்லது 300 கிமீ வேகத்தை விமானம் தொட வேண்டும் என்பது கட்டாயமாக பார்க்கப்படுகின்றது. இந்த வேகத்தை எட்டினால் மட்டுமே விமானிகள் விமானத்தை வானில் செலுத்துவார்கள். இதேபோல்தான் விமானம் தரையிறங்கவும் குறிப்பிட்ட வேகம் கட்டாயமாக உள்ளது.

வானில் பறக்கும்போது அதிக வேகத்தில் பறக்கும் விமானங்கள் தரையை தொடுவதற்கு முன்னர் மணிக்கு 240 கிமீ அல்லது 250 கிமீட்டராக குறைக்கப்படுகின்றது. இதைவிட அதிகம் வேகம் அல்லது குறைவான வேகத்தில் விமானம் இயங்கும் எனில் அந்த விமானம் தரையிறக்கப்படுவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும். இது மிகப் பெரிய ஆபத்தான சூழலை ஏற்படுத்த நேரிடும்.

விமானங்களுக்கு வேகக் கட்டுப்பாடு உள்ளதா? ஆமாங்க இருக்கு. வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு இருப்பதைப் போலவே விமானங்களுக்கும் குறிப்பிட்ட சில காரணங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், ஓர் வணிக வாகனத்தால் அதிகபட்சமாக மேக் 0.77 வேகத்தில் பயணித்துக் கொள்ள முடியும்.

இந்த வேகத்தை தாண்டிய விமானங்களும் இருக்கின்றன. அத்தகைய வாகனங்கள் கண்டிப்பிற்கு ஆளாகி வரலாறும் உண்டு. புகழ்பெற்ற சூப்பர் சோனிக் பயணிகள் ஜெட் விமானமான கான்கார்ட், ஒட்டுமொத்த விமான போக்குவரத்துத் துறையையும் அதிர்ச்சியில் உறைய வைக்கின்ற வகையில் அது மேக் 2.35 வேகத்தை எட்டியது. இத்தகைய அதீத வேகத்தால் இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சாதனைகளையும் அது முறியடித்தது. மேலும், விமானத்துறை வரலாற்றில் ஓர் புதிய அளவுகோலையும் அது உருவாக்கியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்வேறு மர்மங்களையும், சுவாரஷ்யங்களையும் உள்ளடக்கியதே விமான உலகம் ஆகும். அந்தவகையிலேயே விமானத்தின் வேகம் குறித்து இருந்த மர்மத்தை இந்த பதிவின் வாயிலாக நாங்கள் விளக்கி இருக்கின்றோம். விமானங்களுக்கும் வேக வரம்பு இருக்கின்றது என்பது உங்களுக்கு விநோதமாக தெரியலாம். ஆனால், அது பறக்க மற்றும் தரையிறங்க வேகம் மிக மிக முக்கியமானதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 30, 2024, 21:58 [IST]
English summary
Here we explains the speed of an aircraft
மேலும்... #விமானம் #aeroplane
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X