ரூ.700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்.. பின்வாங்கிய ஹீரோ எலக்ட்ரிக்

700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதலீட்டிற்கு மத்திய அரசு அறிமுகம் செய்த திட்டமொன்று முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

இந்தியாவின் மிகப்பெரிய தேவைகளில் ஒன்றாக மின்சார வாகனங்கள் மாறியுள்ளன. இதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசே முக்கிய காரணமாக இருக்கின்றது. காற்று மாசடைவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகையே மிக முக்கியமானதாக இருக்கின்றது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

இந்த அபாய நிலையை தவிர்ப்பதற்கான ஒரே வழியாக மின்வாகன பயன்பாடு இருக்கின்றது. இவை, சுற்றுப்புறச்சூழலுக்கு நண்பனாக செயல்படுவதுடன், குறைந்த செலவில் அதிக பயனை வழங்குபவையாக இருக்கின்றன. எனவே, இதனை கருத்தில் கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் நாடு முழுவதும் அனைத்துத்துறைகளிலும் மின் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளன.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

இதற்காக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் ஃபேம்-2 திட்டம். இத்திட்டமே, நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகப் பெரிய திட்டத்திற்கு தடைக் கல்லாய் அமைந்துள்ளது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

மின் வாகனங்களின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதால் அதன் விலை சற்றே அதிகமாக காணப்படுகின்றது. எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் அது மிக அதிகம் ஆகும். எனவே, மக்கள் மத்தியில் மின்வாகனங்கள் தற்போதுவரை வரவேற்பைப் பெறாமல் இருக்கின்றது. அதேசமயம், மின் வாகனங்களின் பயன்பாட்டை உணர்ந்த மக்கள் தற்போதே அதன்மீது பார்வையை திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

இருப்பினும், அது சூடுபிடித்தபாடில்லை. எனவே, மக்களை மின் வாகன பயன்பாட்டில் ஈர்ப்பதற்காக முன்னதாகவே மானியம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதை ஃபேம் என்ற பெயரில் அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் முதல்கட்ட பணி ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் (ஃபேம் -2) கட்டம் கடந்த ஆண்டிலிருந்து செயல்பாட்டில் இருக்கின்றது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

தற்போது செயல்பாட்டில் இருக்கும் இந்த ஃபேம்-2 திட்டத்தில் முன்னதாக ஃபேம்-1ல் காணப்பட்ட பல்வேறு சலுகைகள் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக இத்திட்டம், மின் வாகன பயன்பாடு மட்டுமின்றி உற்பத்தியையும் ஊக்குவிப்பதற்காகவும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்டத்தில் செய்யப்பட்ட ஒரு சில மாற்றங்கள் பெரியளவில் மின்வானங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

இதனாலயே, ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ எலெக்ட்ரிக், தற்போது தன்னுடைய 700 கோடி ரூபாய் மதிப்புள்ள மின் வாகன உற்பத்தி முதலீட்டு திட்டத்தை தள்ளிப்போட்டுள்ளது. இதற்கு ஃபோம்-2 திட்டம்தான் காரணம் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கின்ற வகையில் உள்ளது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

முன்னதாக பயன்பாட்டில் இருந்த ஃபேம்-1 திட்டத்தில் குறைந்த வேகமாக இருக்கும் மின்சார வாகனங்களுக்கும் அதாவது 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மானியத் தொகை வழங்கப்பட்டு. ஆனால், ஃபம்-2 திட்டத்தில் குறைந்தபட்ச வேகமாக 40 கிமீ வேகம் இருந்தால் மட்டுமே அரசின் மாணியம் 20 ஆயிரம் வழங்கப்படும் என மாற்றப்பட்டது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

தற்போது, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் குறைந்த வேக மின்சார வாகனங்களை குறிவைத்தே 700 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருந்தது.

ஆனால், புதிய ஃபேம்-2 திட்டத்தில் 25 கிமீ வேகத்திற்கும் குறைந்த வாகனங்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அரசின் இந்த அறிவிப்பால் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதலீட்டை செயல்படுத்த முடியாமல் தவித்து வருகின்றது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

பெரும்பாலும், மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும்கூட குறைந்த வேகத்திலான மின்வாகனங்களுக்கே அதிகம் முக்கியத்துவும் அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தியாவில் இதற்கு முட்டுக்கட்டைப் போடுவது மின்வாகன ஊக்குவிப்பிற்கே முட்டுக்கட்டைப் போடுவதைப் போல் அமைந்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

பொதுவாக, அதிவேக மின்வாகனங்களைத் தயாரிக்க உற்பத்தி செலவு அதிகம் ஆகும். ஆகையால், அத்தகைய வாகனங்களின் விலை மிக கடுமையானதாக இருக்கும். அது, இந்தியா போன்ற பட்ஜெட் வாகன விரும்பிகள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறாது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

எனவேதான், ஹீரோ எலெக்ட்ரிக் குறைந்த வேக வாகனங்களை மையமாகக் கொண்டு தனது முதலீட்டை செலுத்தவிருந்தது. ஆனால், மின் வாகன ஊக்குவிப்பிற்காக மத்திய அரசு அறிமுகம் செய்த திட்டமே தற்போது முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

ஃபேம்-1 திட்டத்தின்கீழ் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 17 ஆயிரமும், அதிவேக மின் வாகனத்திற்கு ரூ. 22 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

ஆனால், கடந்த 2019 ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வந்த ஃபேம்-2 திட்டத்தில், குறைந்தபட்ச ரேஞ்ச் 80 கிமீட்டராகவும், வேகம் 40 கிமீ என்றும் அதிகரிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி முன்னதாக வழங்கப்பட்ட மானியத் தொகையைக் காட்டிலும் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு, 20 ஆயிரமாக மாற்றப்பட்டது.

ரூ. 700 கோடி முதலீட்டிற்கு முட்டுக்கட்டைப் போடும் மத்திய அரசின் திட்டம்... பின்வாங்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

இதனால், கடந்த 2018ம் ஆண்டு காணப்பட்ட மின் வாகன விற்பனையைக் காட்டிலும் 2019ம் ஆண்டின் மின் வாகன விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

Source: ET Auto

Most Read Articles
English summary
Hero Electric Hold Rs. 700cr Investment. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X