புதிய ஹீரோ கரீஸ்மா பைக்கை இந்த ஒரு விசயத்திற்காகவே வாங்கலாம்!! ஓட்டி பார்த்து உறுதி செய்த ரைடர்!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். சந்தையில் நன்கு பழக்கப்பட்ட பெயரான கரீஸ்மா புத்துணர்ச்சியான தோற்றத்தில் மீண்டும் வந்துள்ளது.
பழைய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கை காட்டிலும் புதிய மாடல் தோற்றத்தில் மட்டுமின்றி, செயல்படுதிறனிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய மாடலில் 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டது, ஆனால் புதிய மாடலில் 210சிசி என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பைக்கில் மணிக்கு 143கிமீ வேகத்தை எட்ட முடியும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு ஸ்பீடை பைக் எட்டுமா? என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கிய ரைடர் ஒருவர் புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 210 பைக்கில் 141kmph வேகத்தை எட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் யுடியூப்பில் வெளியிட்டுள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம். சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கை காட்டுவதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது.
வீடியோவில் பைக் சிவப்பு நிறத்தில் இருப்பதை காணலாம். இந்த மேட் சிவப்பு நிற பெயிண்ட் ஆப்ஷனில் மட்டுமின்றி, பாண்டோம் கருப்பு மற்றும் ஐகானிக் மஞ்சள் நிறத்திலும் புதிய ஹீரோ கரீஸ்மா பைக்கை வாங்கலாம். மேலும், வீடியோவில், பைக்கில் சிவப்பு நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது. அப்படியென்றால், இந்த பைக் எவராலும் வாங்கப்படவில்லை என்பது அர்த்தமாகும்.

டீலர்ஷிப் மையம் அல்லது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சார்பில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம். அல்லது, டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தவர் இவ்வாறு ஈடுப்பட்டிருக்கலாம். ஏனெனில் வாகனங்களுக்கு இந்தியாவில் சிவப்பு நிற நம்பர் பிளேட் டீலர்ஷிப்பின் பயன்பாட்டிற்காகவும், வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனத்திற்காகவும் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், இத்தகைய நம்பர் பிளேட் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லப்படியாகும்.
புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கில் 210சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 25 பிஎஸ் மற்று 20 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினை ஹீரோ மோட்டோகார்ப் பிரத்யேகமாக கரீஸ்மா பைக்கிற்கென உருவாக்கியுள்ளது. இதனாலேயே, என்ஜின் எவ்வாறு செயல்பட போகிறதோ என்கிற ஆர்வத்துடன் வீடியோவில் பைக்கை ரைடர் ஸ்டார்ட் செய்கிறார்.
ஸ்டார்ட் செய்த உடனேயே என்ஜின் ரேடியேட்டர் செயல்பட ஆரம்பித்து, என்ஜினை குளிர்விக்கும் பணியை துவங்குவதை ரைடரால் உணர முடிகிறது. முதல் கியரில் 45kmph வேகத்தை பைக் எட்டியது. அதன்பின் 2வது கியருக்கு சென்றவுடன் பைக்கை 65kmph வேகத்தில் இயக்க முடிந்துள்ளது. 3வது கியரில் 86kmph வேகத்தையும், 4வது கியரில் 108kmph வேகம் வரையிலும் பைக் எட்டியது. அவ்வளவு வேகத்திலும் ரைடர் 5வது கியரை போட்டார். பைக் 126kmph வேகத்தில் பறந்தது.

அப்போதும் மனம் தளராமல் பைக்கின் கடைசி கியரான 6வது கியரையும் ரைடர் மிதிக்க, அவரிடம் இருந்த புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக் 141kmph வேகத்தை எட்டியதை ரைடரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டு இருந்த கேமரா மூலமாக பைக்கின் ஸ்பீடோ மீட்டரில் பார்க்க முடிகிறது. ஆனால் வீடியோவின் இறுதியில், "எங்களால் 147kmph வேகத்தை எட்ட முடிந்தது, ஆனால் அந்த காட்சிப்பதிவுகளை பத்திரப்படுத்த முடியவில்லை" என தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வீடியோவையே தத்ரூபமாக எடிட் செய்து வெளியிடும் இந்த காலத்தில், வெறும் வாய் வார்த்தையாக பைக் 147kmph வேகத்தை எட்டியது என கூறுவதை எவ்வாறு நம்புவது? அதுமட்டுமின்றி, பைக்கை தயாரித்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே பைக் அதிகப்பட்சமாக 143kmph வேகத்தில் தான் இயங்கும் என்றே தெரிவித்துள்ளது. இதனை ஹீரோ நிறுவனம் பல்வேறு சோதனைகளுக்கு பின்பே கணித்திருக்கும்.


Click it and Unblock the Notifications









