ஹீரோ மோட்டோகார்ப் - உபர் இணைந்து பைக் டேக்ஸி சேவை அளிக்க திட்டம்?

உபர் நிறுவனத்துடன் இணைந்து ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம், பைக் டேக்ஸி சேவையில் இறங்க உள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இருசக்கரவாகன சந்தையில் 46% சந்தை பங்கு கொண்ட
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமாக ஹீரோ மோட்டார்கார்ப் விளங்கி வருகிறது. இது ஒரு இந்திய நிறுவானமாகும். தற்போது பைக் டேக்ஸி தொழிலில் இறங்க வாடகை கார் சந்தையில் கோலோய்ச்சி வரும் அமெரிக்காவின் உபர் நிறுவனத்துடன் இநிறுவனம் கூட்டணி அமைக்க உள்ளது.

பைக் டேக்ஸி சேவைக்காக ஹீரோ மோட்டோகார்ப் - உபர் இணைப்பு?

இந்தியாவில் வாடகை கார் டேக்ஸி சேவை மிகவும் மதிப்பு வாய்ந்த தொழிலாக விளங்கி வருகிறது. மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடாக விளங்குவதால் இங்கு வாடகை டேக்ஸி தொழில் உச்சத்தில் உள்ளது.

பைக் டேக்ஸி சேவைக்காக ஹீரோ மோட்டோகார்ப் - உபர் இணைப்பு?

சொந்தமாக கார்களை வைத்திருக்காவிட்டாலும், தற்போது இத்துறையில் விரல் நுனியில் டேக்ஸி புக் செய்யும் மொபைல் ஆப் நிறுவனங்கள் தான் இங்கு முன்னணியில் உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த உபர் நிறுவனம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பைக் டேக்ஸி சேவைக்காக ஹீரோ மோட்டோகார்ப் - உபர் இணைப்பு?

வாடகை கார் டேக்ஸி தொழிலில் கொடிகட்டிப்பறந்தாலும், கடும் சாலை போக்குவரத்து கொண்ட இந்தியாவில், இத்துறையில் அடுத்த கட்டமாக வாடகை பைக் டேக்ஸி விளங்கப் போகிறது.

பைக் டேக்ஸி சேவைக்காக ஹீரோ மோட்டோகார்ப் - உபர் இணைப்பு?

இதற்கெனெ சில நிறுவனங்கள் ஏற்கெனவே இங்கு களமிறங்கி விட்டன. அதிலும், குறிப்பாக கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் பெங்களூரு நகரில் பைக் டேக்ஸி சேவை ஆரம்பித்துவிட்டது, அது தற்போது பிரபலமடைந்தும் வருகிறது.

பைக் டேக்ஸி சேவைக்காக ஹீரோ மோட்டோகார்ப் - உபர் இணைப்பு?

இத்துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள எண்ணிய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தற்போது இதுகுறித்து உபர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பைக் டேக்ஸி சேவைக்காக ஹீரோ மோட்டோகார்ப் - உபர் இணைப்பு?

ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால், ஏற்கெனவே ‘ரேபிடோ' எனப்படும் பைக்டேக்ஸி சேவை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதேபோல உபர் நிறுவனத்திற்கும் அமெரிக்காவை அடுத்த பெரிய தொழில்சந்தையாக இந்தியா விளங்குகிறது.

பைக் டேக்ஸி சேவைக்காக ஹீரோ மோட்டோகார்ப் - உபர் இணைப்பு?

பைக் டேக்ஸி சேவை தொழிலில் ஹீரோ நிறுவனத்துடன் உபர் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவே இத்துறைசார்ந்த வல்லுநர்கள் தெரிவித்தனர், மேலும் இதனால் இருநிறுவனங்களுமே இது பெரிய அளவில் பயன் தரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். தற்போது வாடகை ஆட்டோ தொழிலும் வெற்றிகரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பைக் டேக்ஸி சேவைக்காக ஹீரோ மோட்டோகார்ப் - உபர் இணைப்பு?

எனினும், இது தொடர்பான தகவலை உறுதிப்படுத்த ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் மறுத்துவிட்டது. உபர் நிறுவனமோ இன்னும் தனது விளக்கத்தை அளிக்கவில்லை.

பைக் டேக்ஸி சேவைக்காக ஹீரோ மோட்டோகார்ப் - உபர் இணைப்பு?

விரைவில் இது தொடர்பான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு சாத்தியப்பட்டால், போக்குவரத்து மிகவும் எளிமையாகவும், விலை குறைவாகவும், குறைந்த நேரத்திலும் மக்களுக்கு சாத்தியப்படும்.

2017 டகார் ரேலியின் படங்கள் கீழே உள்ள கேலரியில் காணலாம்:

Most Read Articles
English summary
Hero MotoCorp and Uber may tie up to tap into the bike taxi segment in India. Talks are underway and here’s a report of what can be expected.
Story first published: Wednesday, March 8, 2017, 12:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X