குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தது ஹீரோ மோட்டார்கார்ப்

By Ravichandran

இன்று குழந்தைகள் தினத்தையொட்டி, தனது வாழ்த்துகளை ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் தெரிவித்து கொண்டுள்ளது. இதை ஒட்டி ஒரு வீடியோவையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆட்டோமோபைல் மற்றும் இரு சக்கர வாகன உறப்த்தி நிறுவனமும், ஏதாவது சமுதாய நலன் சார்ந்த பணிகளில் (சிஎஸ்ஆர் எனப்படும் கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி இனிஷியேட்டிவ்) பங்கு கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது.

அந்த வகையில், ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம், ‘எஜுகேட் டு எம்பவர்' என்ற கல்வி வழங்குதல் தொடர்பான சமுதாய பணியினை மேற்கொள்கிறது.

இந்த ‘எஜுகேட் டு எம்பவர்' திட்டத்தின் கீழ், கல்வி வழங்குதல், அறிவுப் பகிர்வு, மற்றும் திறன் அபிவிருத்தி உள்ளிட்டவை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க முடியும் என ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் நம்புகிறது. மேலும், கல்வி மூலம் தான் அனைவருக்கும் வளமான மற்றும் பொருளாதார சிக்கல் இல்லாத வாழ்க்கை அமைத்து கொள்ள முடியும்.

இது தொடர்பாக, குழந்தைகள் தினமான இன்று, குழந்தைகள் புத்தகங்களை படித்து, அதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைவது போன்ற வீடியோவை ஹீரோ மோட்டார்கார்ப் வெளியிட்டுள்ளது.

இது தவிர, ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் வேறு சில திட்டங்களையும் வகுத்துள்ளது. இந்நிறுவனம், கல்வி மேம்பாடு தொடர்பான வளங்களை அணிதிரட்டல், அகஸ்தியர் அறக்கட்டளை மூலம் மொபைல் அறிவியல் ஆய்வகம் (மொபைல் சயின்ஸ் லேப்), கேரியர் எஜுகனெக்ட், சிஆர்ஒய் அல்லது கிரை என அழைக்கப்படும் அமைப்புடன் இணைந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறைக்கு எதிர்த்து போராடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் தேதியானது (இன்று), ஒவ்வொரு வருடமும் குழைந்தகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 14, 2015, 17:09 [IST]
English summary
Hero MotoCorp Wishes Happy Children's Day With Educate To Empower. Hero MotoCorp have shared a video, showcasing children reading and admiring books. Hero currently, is promoting education among Indian children through its 'Educate to Empower' CSR (Corporate Social Responsibility) Initiative.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+