ஸ்கூட்டர் ஓட்டதெரியாமல் லாரி அடியில் விழுந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த பெண்கள்..!!

Written By:
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

புதுக்கோட்டை பிரதான சாலை ஒன்றில் நிலைதடுமாறிய விதத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய இரு பெண்கள் விபத்தில் சிக்கி, லாரி ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்தனர்.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

அந்த திக்... திக்.. நிமிடங்கள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது அது வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாலையில் இருந்த வாகனங்கள் மெல்ல நகர்ந்து கொண்டுயிருந்தன.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

அப்போது சாலையோரமாக ஸ்கூட்டரில் வந்த இரு பெண்கள், சாலை நடுவே செல்ல முயன்றனர். அதுவரை அவர்கள் பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டரின் வலது பக்கத்தை நெருங்கியது.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

ஸ்கூட்டரை ஓட்டிய பெண், லாரி அருகில் வருவது தெரியாமல், மேலும் ஸ்கூட்டரை சாலையின் நடுப்பகுதிக்கு கொண்டு செல்ல முயல லாரி ஓட்டுநரும் அப்பெண்களின் பக்கவாட்டு பகுதியை வந்தடைந்தார்.

Trending On DriveSpark Tamil:

சன்னி லியோனை தொடர்ந்து மஸராட்டி கார் வாங்கிய 'சென்னை எக்ஸ்பிரஸ்' இயக்குநர்..!!

கார் கவிழ்ந்து நசுங்கினாலும் பயணிகள் பத்திரம்... மீண்டும் நிரூபித்த டாடா கார்!

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

அப்போது லாரியின் சைடு பகுதியில் மோதிய ஸ்கூட்டர் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையில் விழுந்தது. ஸ்கூட்டரில் இருந்த பெண்களும் இரு சக்கரங்களுக்கு நடுவே விழுந்தனர்.

லாரிக்கு அடியில் விழுந்த பெண்கள் மயிரிழையில் உயிர் தப்பும் வீடியோ:

லாரியின் பின் சக்கரம் ஒரு பெண்ணின் தலை மற்றும் நெஞ்சை நெருங்கும் வேளையில், ஓட்டுநர் சுதாரித்து பிரேக்கை அழுத்தினார்.

அப்பெண்ணின் உடம்பு மீது ஏற நெருங்கிக்கொண்டு இருந்த சக்கரங்கள், மயிரிழையில் நின்றது. இதனால் அப்பெண் உயிர் தப்பினார்.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

குறிப்பாக ஓட்டுநர் இந்த இரு பெண்களும் வருவதை கவனித்திருக்கவில்லை என்றால், அந்த இரு பெண்கள் மீது லாரி சக்கரங்கள் ஏறி இறங்கியிருக்கும்.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

மேலும் ஸ்கூட்டரும் இந்த விபத்தில் நசுங்கிபோயிருக்கும். லாரி ஓட்டுநர் சாதுர்யத்தால் நடக்கவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டு வாகன ஒட்டிகள் உயிர் பிழைத்தனர்.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டம் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த விபத்திற்கான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

ஹெல்மட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டி வந்த அந்த இரண்டு இளம் பெண்கள் மீதும் பல சமூக வலைதள வாசிகள் தங்களது கோபங்களையும் வருத்தங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

ஒரு பரபரப்பான சாலையில் வாகனம் ஓட்டி செல்லும் போது, சாலையில் இருந்து மற்ற பகுதிக்கு செல்ல வேண்டும் என்றாலும் அல்லது சாலையை தாண்ட வேண்டும் என்றாலும் கவனத்துடன் செயல்படுவது ஒரு அடிப்படையான சிந்தனை.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

இதற்கு தான் ஸ்கூட்டர் கண்ணாடிகளின் மேல் ஒரு கவனத்தை வைத்துக்கொள்ள வேண்டும். பின்னால் வரும் வாகனங்களை அவை தான் முன்யிருக்கும் நமக்கு காட்டும்.

Trending On DriveSpark Tamil:

2019 ஃபோர்ட் மஸ்டாங் 'புல்லிட்' காரின் விற்பனை தொகையை கேட்டு திகைத்துப்போன அமெரிக்கா..!!

நடிகர் தர்ஷன் லம்போர்கினி சூப்பர் கார் மீது கண் வைத்த பெங்களூர் போக்குவரத்து துறை!

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

இந்த விபத்தில் பெண்கள் ஓட்டி வரும் ஸ்கூட்டரின் இரு பக்கங்களில் கண்ணாடிகள் இல்லை என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் ஸ்கூட்டரை ஓட்டிய பெண் சாலையை கவனிக்கவுமில்லை என்பதை அவரது செய்கையின் மூலம் உணரலாம்.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

இதன்காரணமாகவே அவர், ஸ்கூட்டரை லாரியின் பக்கவாட்டில் கொண்டு போய் மோதுகிறார். மேலும் இந்த சம்பவத்தை பொறுத்தவரை லாரி ஓட்டுநர் தான் நிலையறிந்து செயல்பட்டுள்ளார்.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

லாரி ஓட்டுநர் அந்த இரு பெண்களும் மோத வாய்ப்புள்ளதை முன்பே எதிர்பார்த்து தான் அவர்களை கடக்க முயற்சித்துள்ளார்.

மேலும் நான்கு வழி கொண்ட அந்த சாலை மிக நெருக்கமாகவும் மக்கள் போக்குவரத்து அதிகமாகவும் காணப்படுகிறது.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

இதன் காரணமாக ஸ்கூட்டரில் வந்த பெண்கள் லாரியை கவனிக்காமல், நெருங்கி வருவதை தெரிந்ததும், அவர் கண்ணாடியை பார்த்தவாரே லாரியை சாலையில் செலுத்தியுள்ளார்.

லாரி அடிவரை சென்று உயிருடன் திரும்பிய இளம்பெண்கள்..!!

அந்த சமயோஜித சிந்தனை லாரி ஓட்டுநரிடம் இருந்துள்ளதால் தான், நடக்கவிருந்த பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அது ஸ்கூட்டரை ஓட்டி சென்ற பெண்களிடமில்லை என்பதால் தான் இப்படி ஒரு சம்பவத்தை அவர்கள் சந்திக்க நேர்ந்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Heroic Lorry Driver Saves Two Girls Life Shocking Video. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark