வண்டில போலீஸ் இதை பாத்துட்டா கஞ்சி காச்சீறுவாங்க! திடுதிப்புனு உத்தரவை போட்ட ஐகோர்ட்! உடனே கழட்டி வீசுங்க!
இந்தியாவில் கார் உள்ளிட்ட வாகனங்களின் முன் பகுதியில் க்ராஷ் கார்டுகளை (Crash Guards) பலரும் பொருத்தியுள்ளனர். வாகன உரிமையாளர்கள் க்ராஷ் கார்டுகளை விரும்பி பொருத்துவதற்கு பின்னால் 2 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. வாகனம் முரட்டுத்தனமாக காட்சியளிக்கும் என்பதுதான் இதற்கான முதல் காரணம்.
இந்த ஸ்டைல் வாகன உரிமையாளர்களுக்கு பிடிக்கிறது. க்ராஷ் கார்டுகளை பலரும் பயன்படுத்தி வருவதற்கு இரண்டாவது காரணம், வாகனம் சேதமடைய கூடாது என்பதுதான். விபத்துக்களின் போது வாகனத்தின் முன் பகுதி சேதம் அடைவதை க்ராஷ் கார்டுகள் தடுக்கின்றன. ஆனால் சிறிய நன்மைகளை வழங்கினாலும், பெரிய ஆபத்துக்களை க்ராஷ் கார்டுகள் ஏற்படுத்தும்.

க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மோதினால், பாதசாரிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு உண்டாகும். அத்துடன் க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் சாலை விபத்தில் சிக்கினால், ஏர்பேக்குகள் விரிவடைவது சந்தேகம்தான். ஏர்பேக்குகளை விரிவடைய செய்யும் சென்சார்களின் பணியில், க்ராஷ் கார்டுகள் பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இதற்கு காரணம்.
எனவே க்ராஷ் கார்டுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே கருதப்படுகின்றன. எனவே க்ராஷ் கார்டுகளுக்கு எதிரான வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெட்லா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:
வாகனங்களில் க்ராஷ் கார்டுகளை பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. எனவே மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை அரசு அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி மட்டுமல்லாது, இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே உங்கள் வாகனங்களில் க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்டிருந்தால், உடனடியாக அவற்றை அகற்றி விடுவது மிகவும் நல்லது.
இது போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் நடவடிக்கைகளில் இருந்து உங்களை காப்பாற்றுவதுடன், சாலை விபத்துக்கள் நிகழ்ந்தால், உங்கள் உயிரையும் காப்பாற்றும் என்பதை மனதில் கொள்ளுங்கள். க்ராஷ் கார்டுகளால் கிடைக்கும் ஒரு சில நன்மைகளை அனுபவிப்பதை விட, அது ஏற்படுத்தும் பேராபத்தை தவிர்ப்பதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, க்ராஷ் கார்டுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். அந்த நடவடிக்கையை மீண்டும் தொடர்வது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications