ஃபாஸ்ட் டேக் கார்டில் ரீசார்ஜ் செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி கிடைக்குமா? கோர்ட் வழக்கில் புதிய திருப்பம்!

இந்தியாவில் ஃபாஸ்ட்டேக் கார்டில் வாகன உரிமையாளர்கள் செலுத்தும் பணத்திற்கு ஏன் வட்டி வழங்கப்படுவது இல்லை? என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திடம், டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை, விரிவாக காணலாம் வாருங்கள்

ரவீந்தர் தியாகி என்பவர் பிரவீன் அகர்வால் என்ற வக்கீல் மூலம் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில் பல முக்கியமான தகவல்கள் இடம் பெற்றன. இதில் தீர்க்கப்படவேண்டிய சிக்கல்கள் இருந்ததால் இந்த வழக்கை விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரணையை நடத்தியது.

fastag card interest court notice

இந்தியாவில் டோல்கேட் கட்டணங்களை பெரும்பாலான மக்கள் ஃபாஸ்ட்டேக் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்கின்றனர். இவர்கள் வங்கி வழியாக ரீசார்ஜ் செய்து இந்த கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரீசார்ஜ் மூலம் டோல்கேட்டில் செலுத்தப்படாமல் வங்கிக்கணக்கில் மட்டும் ரூ30 ஆயிரம் கோடி புழக்கத்தில் இருக்கிறது. இந்த பணம் நேரடியாக வங்கிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இந்த பணத்திற்கு ஆண்டிற்கு 8.25 சதவீதம் வட்டி எனக் கணக்கிட்டால் கூட ரூ2 ஆயிரம் கோடி வட்டியாக மட்டுமே வருகிறது. வங்கிகளின் கட்டுப்பாட்டில் இந்த பணம் இருப்பதால் அந்த பணத்தின் மூலம் வரும் வட்டியை வங்கிகளே அனுபவித்துவருகின்றனர். ஆனால் இந்த பணம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கோ அல்லது பணத்தைச் செலுத்திய பொதுமக்களுக்கோ சொந்தமானது.

fastag card interest court notice

இந்த பணம் நெடுஞ்சாலை பணிகள் அல்லது பயணிகளுக்காகத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகச் செலவு செய்யப்படலாம். ஆனால் வங்கிகள் இதை இலவசமாக அனுபவித்து வருகின்றனர். இதைத் தடுத்து இந்த பணத்தைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கோ அல்லது ஃபாஸ்டேக் ரீசார்ஜ் கார்டில் பணம் வைத்திருப்பவர்களுக்கு வட்டியாகவோ வழங்கப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இது குறித்துப் பதிலளிக்கும் படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். இது குறித்த பதில் 4 வாரங்களுக்குள் வர வேண்டும் எனவும் இந்த வழக்கின் அடுத்த அமர்வு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fastag card interest court notice

இந்த வழக்கிற்குப் பிறகு ஃபாஸ்ட்டேக் கார்டுகளுக்கு செலவு செய்யப்படாமல் பேலன்ஸ் இருக்கும் பணத்திற்கு வட்டி பிரித்து வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவை கோர்ட் பிறக்கபிக்கலாம். அல்லது நெடுஞ்சாலைத்துறையே வங்கிகளுக்கு இந்த பணத்தைக் கையாளும் முறையில் மாற்றத்தைக் கொண்டு வரலாம். இதன் மூலம் இந்த பணத்திற்கான வட்டி பணம் நெடுஞ்சாலைத் துறைக்கு வருமான செல்ல வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெடுஞ்சாலைத் துறைக்கு ஃபாஸ்ட்டேக் இல்லாமல் பணம் செலுத்துபவர்கள் இரு மடங்கு பணத்தைச் செலுத்த விதிக்கப்பட்ட உத்தரவை வாபஸ் பெறுவதற்கான கோர்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தற்போது பரிசீலனையில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஃபாஸ்டேக் கட்டணத்தில் பயன்படுத்தப்படாத பணத்திற்கு வட்டி கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்தும் கோர்ட் பதில் கேட்டுள்ளது இதை நெடுஞ்சாலைத் துறை முக்கிய வழக்கமாக எடுத்துக்கொண்டு இதற்குத் தீர்வு காண வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 20, 2023, 9:45 [IST]
English summary
High court seeks nhai to ask the banks to pay interest on fastag collected money
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X