சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

சோனியா காந்தியே எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை இது என மத்திய அரசு கூறியுள்ளது.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

எனவே மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு வரவேற்பு இருந்து வருகிறது. அதே சமயம் அபராதங்கள் மிக கடுமையாக உள்ளதால், எதிர்ப்பும் நிலவி வருகிறது. இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், பழைய விதிமுறைகளின்படி 1,000 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கான பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டுமே. ஆனால் இனி நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும். இதேபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளுக்கான அபராதங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

அபராத தொகைகளுக்கு பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு கருதுகிறது. ஆனால் அபராத தொகைகள் கடுமையாக உள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எனவே ஒரு சில மாநில அரசுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

இதில், ஆச்சரியம் என்னவென்றால், பாஜக ஆட்சி செய்யும் ஒரு சில மாநிலங்கள் கூட மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இருக்கின்றன. குஜராத்தை இதற்கு ஓர் உதாரணமாக சொல்லலாம். பாஜக ஆண்டு வரும் குஜராத் மாநிலத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

இந்த சூழலில் புதிய அபராத தொகைகள் அமலுக்கு வர காரணகர்த்தாவான மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது இதுகுறித்து பேசியுள்ளார். இவரது தீவிர முயற்சியால்தான் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

விலை மதிப்பில்லாத உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் உயர்த்தப்பட்டிருப்பதன் பின்னால் இருக்கும் காரணம் என நிதின் கட்கரி தற்போது கூறியுள்ளார். அத்துடன் சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் கூட இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

இதுகுறித்து அவர் கூறுகையில், ''புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழான அதிக அபராதங்கள் வருவாயை பெருக்குவதற்கானது கிடையாது. உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்'' என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் விபத்துக்கள் (இந்தியாவில்) நடைபெறுகின்றன. இதில், 1.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

சுமார் 3 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். பாதிக்கப்படுவர்களில் 65 சதவீதம் பேர், 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்'' என்றார். இதனிடையே அபராத தொகைகளை உயர்த்தியிருப்பதற்கு பாஜக ஆளும் சில மாநிலங்களே எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

இதற்கு, சோனியா காந்தி (காங்கிரஸ் தலைவர்) மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்) ஆகியோர் இந்த சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? என எதிர்கேள்வி கேட்டு நிதின் கட்கரி செக் வைத்தார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிளவு இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

அத்துடன் தன் வாழ்க்கையில் கிடைத்த தனிப்பட்ட அனுபவம் ஒன்றையும் நிதின் கட்கரி நினைவு கூர்ந்தார். மஹாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது அவரும், அவரது குடும்பத்தினரும் சாலை விபத்து ஒன்றில் காயமடைந்ததை நிதின் கட்கரி குறிப்பிட்டார். இதற்காக ஒரு ஆண்டு காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நிதின் கட்கரி கூறினார்.

சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!

எனவே சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களின் சிரமங்களை தன்னால் புரிந்து கொள்ள முடியும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த கருத்து மற்றும் புதிய மோட்டார் வாகன சட்டம் தொடர்பான உங்கள் எண்ணங்களை கமெண்ட் பாக்ஸ் மூலம் தெரியப்படுத்துங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 21, 2019, 13:10 [IST]
English summary
High Penalties Under The New Motor Vehicles Act Are Not Means For Revenue Generation: Union Road Transport Minister Nitin Gadkari. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+