வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றங்களை தடுக்க இனி இது கட்டாயம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

வாகனம் சார்ந்த குற்றச் சம்பவங்களைத் தவிர்க்கும் விதமாக மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க இனி இது கட்டாயம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு...!

நாட்டில் இயங்கி வரும் அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுக்கு மத்திய அரசு ஓர் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இனி புதிதாக விற்பனையாகும் வாகனங்கள் அனைத்திற்கும் உயர் பாதுகாப்புக் கொண்ட நம்பர் பிளேட்டைப் பொருத்த வேண்டும் என்ற கட்டாய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, வாகன திருட்டைத் தடுக்கவும், வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் ஒழிக்கவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புத்தம் புதிய உத்தரவானது மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க இனி இது கட்டாயம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு...!

மத்திய அரசின் இந்த புதிய திட்டமானது, கடந்த 2001 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இதுவரை இந்த திட்டம் முழுமையான அளவில் நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில்தான், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிய உத்தரவை அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. மேலும், இந்த புதிய உத்தரவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க இனி இது கட்டாயம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு...!

உயர்பாதுகாப்புக் கொண்ட நம்பர் பிளேட் என்றால் என்ன...?

எலக்ட்ரானிக் நம்பர் பிளேட்டான இது அலுமினியத் தகட்டால் உருவாக்கப்படுகிறது. அதில், அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட குரோமியம் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதை கிழிக்க முடியாது. அதற்கு கீழே 'ஐஎன்டி' என நம் நாட்டின் அடையாளத்தைக் குறிக்கும் விதமாக, நீல நிறத்தில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். அதற்குக் கீழே அல்லது பக்காவட்டில், ஒவ்வொரு பலகைக்கும் பிரத்யேக பதிவெண்கள் ஸ்டிக்கராக அல்லாமல் அழுத்தமாக அச்சிடப்படும்.

வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க இனி இது கட்டாயம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு...!

இந்த எழுத்தினை அழித்தாலும், அதன் பின்னணியில் உள்ள அச்சு அப்படியே இருக்கும். பின்னர், மத்திய அரசின் 'வாஹன்' என்ற இணையதளத்தில், குறிப்பிடப்பட்ட வாகனத்தின் உரிமையாளர், பதிவு எண்கள், பிரத்யேக எண்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்படும்.

வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க இனி இது கட்டாயம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு...!

இந்த ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டைக் கொண்ட வாகனம் குறிப்பிட்ட தூரத்தில் வரும்போதே, வாகனம் குறித்த தகவலை குறிப்பிட்ட கருவியின் மூலம் போலீஸாரால் தெரிந்துக்கொள்ள முடியும். ஆகையால், காணாமல் போகின்ற வாகனங்களை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க இனி இது கட்டாயம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு...!

இந்த நம்பர் பிளேட்டானது ரிவிட் முறை மூலம் வாகனங்களில் பொருத்தப்படும். இதனால், வாகனத்தில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டை அகற்றவோ அல்லது போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தவோ முடியாது. ஆகையால், போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் இதன்மூலம் தவிர்க்கப்படும்.

இந்த புதிய முறையின் மூலம், போக்குவரத்து விதிமீறல்களும் கணிசமாக குறையும். இதேபோன்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த உயர் பாதுகாப்புக் கொண்ட வாகன பதிவு எண் பலகைகளை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க இனி இது கட்டாயம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு...!

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டமானது, நமது அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் டில்லி, கோவா, சத்தீஸ்கர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. ஆனால் தமிழகத்தில் எப்போது வரும் என கேள்வி குறியாகத்தான் உள்ளது.

வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க இனி இது கட்டாயம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு...!

இந்த நிலையில் தான், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 1-ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் ஹெச்.ஆர்.எஸ்.பி., திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் உத்தரவிட்டது. இதை முன்னிட்டே தற்போது அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் சுற்றறிக்கை அனுப்பி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Vehicles To Now Come With High Security Registration Plates — Mandatory Rule From April-2019. Read In Tamil.
Story first published: Saturday, April 6, 2019, 16:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X