குறி வெச்சுட்டாங்க! வண்டில இனி இது இல்லேனா இவ்ளோ அபராதம் கட்டணுமா? அத்தன பேரும் ஆடிப்போய் கெடக்கறாங்க!
இந்தியாவில் நாளுக்கு நாள் போக்குவரத்து விதிமுறைகள் (Traffic Rules) கடுமையாகி கொண்டே வருகின்றன. இதன் மூலம் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன், வாகனங்கள் தொடர்பான குற்ற செயல்களை தடுக்க முடியும் எனவும் அரசு அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வாகனங்களுக்கு ஹெச்எஸ்ஆர்பி என சுருக்கமாக அழைக்கப்படும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் (HSRP - High Security Registration Plates) பொருத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் இல்லாமல் ஏராளமான வாகனங்கள் சாலையில் வலம் வந்து கொண்டுள்ளன. அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 'செக்' வைக்கும் வகையிலான உத்தரவு ஒன்று தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்ளோ அபராதம் கட்டணுமா?
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் அதிரடியான புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இதன்படி உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் இல்லாமல் வலம் வரும் வாகனங்களுக்கு இன்று முதல் (பிப்ரவரி 17) அதிரடியாக அபராதம் (Fine) விதிக்கப்படவுள்ளது. இந்த விதிமுறையை மீறும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவுள்ளனர்.
டைம் முடிஞ்சு போச்சு!
பழைய வாகனங்கள் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை பொருத்தி கொள்ள ஏதுவாக பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் தற்போது முடிவடைந்து விட்டதால், நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் கிட்டத்தட்ட 2.70 லட்சம் வாகனங்களின் உரிமையாளர்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 2.70 லட்சம் வாகனங்கள் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் இல்லாமல் இயங்கி கொண்டுள்ளனர்.

சீக்கிரமா மாட்டிருங்க... இல்லேனா மாட்டிக்குவீங்க!
இதுகுறித்து நொய்டா நகரின் துணை கமிஷனர் (போக்குவரத்து) அனில் யாதவ் கூறுகையில், ''வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை பொருத்தி கொள்வதற்கு பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் வழங்கியிருந்தோம். அது தற்போது முடிவடைந்து விட்டது. எனவே உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் இல்லாத வாகனங்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்க உள்ளோம். இதில் சிக்கும் வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே உங்கள் வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் இல்லாவிட்டால், உடனடியாக அதனை பொருத்தி கொள்ளுங்கள்'' என்றார். உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, உத்தர பிரதேச மாநிலத்தின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குனர் தரப்பில் இருந்து, போக்குவரத்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதையடுத்துதான் இன்று முதல் அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் நம்பிக்கை!
மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் இல்லாவிட்டால், அது ஒரு குற்றமாக கருதப்படும் என நொய்டா போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபராத தொகை மிகவும் அதிகமாக இருப்பதால், நொய்டா போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த அதிரடி நடவடிக்கை மூலம், அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் இருப்பதை உறுதி செய்ய முடியும் என நொய்டா போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதால், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் அவற்றை பெற்று உடனடியாக தங்கள் வாகனங்களில் பொருத்தி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications