இவ்வளவு இலட்சம் கொடுத்து வாங்கிய காரில் ஏர்பேக் வெளிவரலயா!! டொயோட்டா நிறுவனத்துக்கு தான் இது பெரிய அசிங்கம்!
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் ஒன்று லாரி உடன் அதிவேகமாக மோதலுக்கு உள்ளாகி உள்ளது. இருப்பினும், ஃபார்ச்சூனர் காரில், பயணிகளை காப்பாற்றும் விதமாக ஏர் பேக்குகள் வெளிவராதது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கார்களில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்து வரும் நிலையில், இவ்வாறு விபத்திற்கு உள்ளான காரில் ஒரு ஏர்பேக் கூட வெளிவராதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு பஞ்சமே கிடையாது. பரந்து விரிந்து கிடக்கும் இந்த பாரத நாட்டில் நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான விபத்துகள் நிகழ்கின்றன. இதன் விளைவாக, ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துகளினால் இலட்சக்கணக்கில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இந்த வகையில், தெலுங்கானாவில் சமீபத்தில் நிகழ்ந்துள்ள சாலை விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில், இந்த விபத்தில் லாரி உடன் மோதலுக்கு உள்ளான டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில், தக்க நேரத்தில் வெளிவர வேண்டிய ஏர்பேக் கடைசி வரையில் விரிவடையாமல் போகியுள்ளது. இத்தனைக்கும், இந்த விபத்து சுமார் மணிக்கு 140கிமீ வேகத்தில் நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது ஏர்பேக் விரிவடையாததால், ஃபார்ச்சூனர் கார் ஓனர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏர்பேக் விரிவடையாவிடினும், ஃபார்ச்சூனர் காரின் உறுதியான கட்டமைப்பினால் விபத்தில் இருந்து கார் பயணிகள் அனைவரையும் காப்பாற்றி உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, விபத்திற்கு உள்ளான டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் சுமார் 140kmph வேகத்திற்கு சென்றுக் கொண்டிருந்துள்ளது. கிட்டத்தட்ட இதே வேகத்திற்கு காருக்கு முன்னால் லாரி சென்றுள்ளது.

திடீரென லாரி டிரைவர் பிரேக்கை கொடுக்க, ஃபார்ச்சூனர் கார் லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதியுள்ளது. அந்த சமயத்தில், ஃபார்ச்சூனர் கார் டிரைவர் சடர்ன் பிரேக் கொடுத்துள்ளார். இருப்பினும் அவ்வளவு வேகத்தில் வந்ததால், பயனில்லை. இந்த மோதலில், ஃபார்ச்சூனர் காரின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்து இருப்பதை கீழே செய்தியின் இறுதியில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
இந்த அளவிற்கு சிதலடைந்த காரில் இருந்து பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டு உள்ளனர் எனும்போது, நம்பவே முடியவில்லை. இதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும். நல்லவேளையாக, விபத்தின் போது, காரில் இருந்த பயணிகள் அனைவரும் சீட்பெல்ட் அணிந்து இருந்துள்ளனர். இதனால்தான் அவர்களது உயிருக்கு பெரியதாக எந்த ஆபத்தும் இல்லை.

காரில் இருந்தவரில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்து குறித்து இணையத்தில் வெளியாகி உள்ள படங்கள் அனைத்திலும் ஃபார்ச்சூனர் கார் மட்டுமே உள்ளது. லாரியின் பின்பக்கத்தை காண முடியவில்லை. அதை வைத்தே காரில் ஏர்பேக் ஏன் விரிவடையவில்லை என்பதை கூற முடியும்.
ஏனெனில், பொதுவாகவே கார்களில் ஏர்பேக்குகள் சென்சார்கள் மூலமாக செயல்படுகின்றன. சென்சாரின் வளையத்திற்குள் ஏதேனும் பொருள் நெருக்கமாக வந்து மோதினால் மட்டுமே, ஏர்பேக் விரிவடையும். இதற்காகவே, சென்சார்கள் காரை சுற்றிலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த ஃபார்ச்சூனர் காரில் ஏர்பேக் விரிவடையாததை வைத்து பார்க்கும்போது, லாரி உடன் கார் ஒரு கோணத்தில் மோதலுக்கு உள்ளாகி இருக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமின்றி, பெரும்பாலான நாடுகளில் சாலை விபத்துகளை தடுப்பதில் ஏர்பேக்குகள் முக்கியமான பணியை மேற்கொள்கின்றன. இதனால்தான், நம் மத்திய அரசு கார்களில் குறைந்தப்பட்சம் 6 ஏர்பேக்குகளை வழங்குமாறு கூக்குரலிட்டு வருகிறது. இப்படிப்பட்ட தற்போதைய சூழலில், ஃபார்ச்சூனர் போன்ற விலையுயர்ந்த கார் ஒன்றில் விபத்தின்போது ஏர்பேக் விரிவடையாதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.


Click it and Unblock the Notifications









