புது ரோடு ஒன்னு வர போகுது.. அந்த ஊருக்கு போக 7மணி நேரம்கூட ஆகாதா! பக்கத்து ஊருக்கு போற மாதிரி போயிட்டு வரலாம்!

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், புதிய அதிக வேக எக்ஸ்பிரஸ் சாலைக்கான திட்டத்தை வெளியீடு செய்திருக்கின்றது. ஏற்கனவே புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையிலேயே இரண்டு முக்கிய நகரங்களை இணைப்பதற்காக போடப்பட்டு இருக்கும் புதிய எக்ஸ்பிரஸ் சாலை பற்றிய திட்டத்தை அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்றது. இந்த புதிய அதி-வேக எக்ஸ்பிரஸ் சாலையானது கர்நாடகாவின் இரண்டு முக்கிய நகரங்களையே இணைக்கும் வகையில் அமைய இருக்கின்றது. பெங்களூரு - மங்களூருவை இணைக்கும் வகையிலேயே சாலை அமைக்கப்பட உள்ளது.

மேலும், புதிய சாலை பயன்பாட்டிற்கு வரும் எனில் பயண 7 மணி நேரத்திற்கும் கீழாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இரண்டு முக்கிய நகரங்களுக்கும் இடையிலான பயண நேரமானது 8 மணி நேரத்திற்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அதிக பயண நேரத்தை குறைப்பதற்கான பணியில் அமைச்சகம் களமிறங்கி இருக்கின்றது.

Bengaluru mangaluru expressway

இதன் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் புதிய அதி-வேக எக்ஸ்பிரஸ் சாலையை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தனியார் நிறுவனத்தை தேடும் பணியையும் அமைச்சகம் தொடங்கியது. இந்த நிலையிலேயே, நடப்பு நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக ஒன்பது நிறுவனங்கள் முன் வந்து புதிய சாலையை அமைப்பதற்காக விண்ணப்பித்திருக்கின்றன.

விரைவில் யார் வெற்றியாளர் என்பதை அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, எந்த நிறுவனம் பெங்களூரு - மங்களூரு இடையே அமைய இருக்கும் புதிய அதிக வேக எக்ஸ்பிரஸ் சாலையை அமைக்க இருக்கும் நிறுவனம் என்பதை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள்ளாகவே இந்த தகவல் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தேர்வு செய்யப்படும் அந்த நிறுவனத்திற்கு 540 நாட்களுக்குள் தன்னுடைய திட்டங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தொடர்ந்து, 2028 ஆம் ஆண்டில் சாலையை அமைப்பதற்கான பணிகளையும் அவர்கள் தொடங்க வேண்டும். ஆகையால், இன்னும் நான்கு ஆண்டுகளில் புதிய சாலை அமைவதற்கான அனைத்து பணிகளும் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய அதி-வேக எக்ஸ்பிரஸ் சாலையானது நான்கு முதல் ஆறு வழி சாலையாக அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திட்டம் முழுமையாக இறுதிக் கட்டத்தை எட்டும்போதே அது எத்தனை வழி சாலையாக அமைய இருக்கின்றது என்பது உறுதியாக தெரிய வரும். கர்நாடகாவின் ஹசன் நகரம் வழியாக பெங்களூரு மற்றும் மங்களூருவை இந்த சாலை இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கர்நாடகத்தின் அழகிய நகரங்களில் மங்களூருவும் ஒன்றாகும். கடலோர நகரமாகவும் இது காட்சியளிக்கின்றது. ஆகையால், புதிய எக்ஸ்பிரஸ் சாலையின் ஒரு பகுதி கடலோர மார்க்கமாக செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது பயன்பாட்டில் இருக்கும் பெங்களூரு-மங்களூரு வழித்தடம் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும், அதிக பயண நேரத்தை எடுக்கக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது.

இந்த நிலையிலேயே பயண நேரத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கும் விதமாக புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட இருக்கின்றது. இது பயன்பாட்டிற்கு வந்த பின்னர் பயண நேரம் 7 மணி நேரத்திற்கும் குறைவாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இரு நகரங்களிலும் உள்ள மக்கள் பக்கத்து ஊருக்கு சென்று வருவதைப் போல இரு நகரங்களுக்கும் இடையில் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுமார் 367 கிமீ தூரம் இடைவெளிக் கொண்ட ஓர் ரூட்டே பெங்களூரு - மங்களூரு வழித்தடம் உள்ளது. இந்த கிமீ இடைவெளியும் மிகப் பெரிய அளவில் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை கர்நாடகா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக மாநிலத்தின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையிலும் இந்த சாலை செயல்படும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையிலேயே விரைவில் புதிய பெங்களூரு - மங்களூரு அதி-வேக எக்ஸ்பிரஸ் சாலையும் இணைய இருக்கின்றது. இது பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் மக்கள் மற்றும் முக்கிய நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் பயனடைவார்கள் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 16, 2024, 19:00 [IST]
English summary
High speed bengaluru mangaluru expressway set to cut travel time by 7 to 8 hours
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+