ஷோரூமில் இருந்து எடுத்து 6 மாசம் தான் ஆகுது... டிரைவரின் கதி என்ன தெரியுமா? யாராலயும் நம்ப முடியல!!

நம் இந்தியாவில் கார் விபத்துகள் சர்வ சாதாரணமாக தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செய்தித்தாளை திறந்ததால் குறைந்தது ஒரு கார் விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இதன் காரணமாகவே, 6 ஏர்பேக்குகள் உடன் கார்களை நன்கு தரமானவைகளாக உருவாக்கும்படி கார் நிறுவனங்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டு வருகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட பாதுகாப்பான கார்கள் மூலமாக உயிர் பிழைத்தவர்கள் ஏராளம். அத்தகையவர்களுள் ஒருவரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

ஆக்ரோஷமான அதிவேக பயணமும், மதுபோதையும் தான் வாகன விபத்துகளுக்கு முக்கியமான காரணங்களாக விளங்குகின்றன. இதனை குறைக்க அரசாங்கங்களில் இருந்து, சமூக ஆர்வலர்கள் வரையில் பல்வேறு யோசனைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். இருப்பினும், சாலை விபத்துகள் குறைந்துள்ளனவா என்றால், மிகவும் குறைவாகவே குறைந்துள்ளது.

hyundai i20 n-line saved driver

இதனால், சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் அதேநேரம், வாகனங்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்கிற திட்டத்தில் மத்திய அரசு இறங்கியது. குறிப்பாக, கார்களை நல்ல உடல் தரத்துடன், 6 ஏர்பேக்குகள் உடன் உருவாக்க வேண்டும் என நேரடியாக மத்திய அரசிடம் இருந்து கார் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதன்படி, மார்க்கெட்டில் புதியதாக அறிமுகம் செய்யப்படும் கார்களில் 6 ஏர்பேக்குகள் இடம்பெறுகின்றன.

அதேபோல், கார்களின் உடற்கூடை வலிமையானதாகவும், மோதல்களை தாங்கிக் கொள்ள கூடியதாகவும் கார் நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இதன் மூலமாக, புத்தம் புதிய ஹூண்டாய் ஐ20 என்-லைன் காரில் சென்றவர் பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். 6 மாதத்திற்கு முன்னர் வாங்கப்பட்ட பிராண்ட்-நியூ ஹூண்டாய் ஐ20 என்-லைன் கார் இந்த விபத்தில் சிக்கியுள்ளது.

hyundai i20 n-line saved driver

இந்த சம்பவம் நடைபெற்றது 2022ஆம் ஆண்டில் ஆகும். விபத்தில் சிக்கிய கார் உரிமையாளர் விபத்தை பற்றிய விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளார். 2022 ஜூலை மாதத்தில் வாரஇறுதி விடுமுறையில் நண்பர்களுடன் இந்த நபர் ஜாலியாக தனது புத்தம் புதிய ஐ20 என்-லைன் காரில் இந்த நபர் அதிவேகமாக ஹைவேயில் சென்றுள்ளார். பின்னர் பார்டியை முடித்துக் கொண்டு அதே வழியில் அடுத்த நாள் அதிகாலையில் திரும்பி வரும்போது காரில் இவர் மட்டுமே இருந்துள்ளார்.

இவரது நண்பர்கள் தங்களது கார்களில் தனித்தனியாக இவரது காருக்கு அருகாமையில் சென்றுக் கொண்டிருந்துள்ளனர். இந்த ஐ20 என்-லைன் காருக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த கார், அதற்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரியை ஓவர்-டேக் செய்துள்ளது. ஓவர்-டேக் செய்யும்போது அந்த கார் டிரைவர் பிரேக் எதுவும் கொடுக்காமல், ஆக்ஸலரேஷனை மட்டும் குறைத்து லாரியை ஓவர்-டேக் செய்துள்ளார்.

hyundai i20 n-line saved driver

இதனால், இந்த ஓவர்-டேக்கை ஐ20 என்-லைன் கார் டிரைவர் எதிர்பார்க்கவில்லை. முன்னால் சென்றுக் கொண்டிருந்த காரின் வேகம் குறைந்ததை மட்டும் அவரால் உணர முடிந்தது. ஆனால், அதற்கு ரியாக்ட் செய்வதற்குள் முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரியை இந்த ஐ20 என்-லைன் கார் நெருங்கி விட்டது. லாரி உடனான மோதலை தவிர்க்க பிரேக் கொடுத்து, ஸ்டேரிங்கை திருப்பி என இந்த ஐ20 என்-லைன் கார் டிரைவர் என்னென்னமோ செய்து பார்த்துள்ளார்.

இருப்பினும், லாரியின் பின்பக்கத்துடன் கார் மோதிவிட்டது. இந்த மோதலில் காரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளதை படங்களில் காணலாம். அதேபோல், முன்பக்க விண்ட்ஷீல்டும் சேதமடைந்துள்ளது. ஆனால், கார் டிரைவருக்கு நல்ல வேளையாக ஒன்று ஆகவில்லை. இதற்கு அவர் சீட் பெல்ட் அணிந்திருந்துதான் காரணம் ஆகும். அதேபோல், ஏர்பேக்கும் சரியான நேரத்தில் விரிவடைந்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு பெரிய, பெரிய கார் விபத்துகளில் இருந்து தப்பித்தவர்களை பற்றி அரிதாக சிலமுறை பார்த்துள்ளோம். பெரும்பாலும் டாடா, மஹிந்திரா கார்களில் விபத்தில் சிக்குபவர்கள் தான் இவ்வாறு உயிர்பிழைத்துள்ள அதிசயம் நடந்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தில் ஹூண்டாய் கார், டிரைவரின் உயிரை காப்பாற்றி உள்ளது.

Source: Team BHP

More from DriveSpark

Article Published On: Monday, September 16, 2024, 11:51 [IST]
English summary
High speed crash hyundai i20 n line car saved driver life check all details here
மேலும்... #car accident #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X