போக்குவரத்து விதிகளை அரசு கடுமையாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்திய சம்பவம்..!! (வீடியோ இணைப்பு)

Written By:

பிரதான சாலையில் அதிவேகமாக வந்த ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று திடீரென தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த வாலிபர் பலியானார்.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சாலை எண் 3ல் குறைந்த அளவிலான வாகனங்களே இயங்கியது. அப்போது அந்த வழியாக வந்த ஹூண்டாய் ஐ20 கார் திடீரென ஸ்கிட் ஆனது.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

பிறகு மூன்று முறை பெரியதாக குலுங்கி சாலையில் தலைக்குப்புற விழுந்தது. இதில் காரை ஓட்டிவந்த ஃபர்ஷாஹத் அலி என்ற 20 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

காரில் இருந்த அவரது நண்பர்களான தனிஷ் ஜாவத், சையத் வாஸிஸ் ஹூசைன் என்ற இரு இளைஞர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

12ம் தேதி நடைபெற்ற இந்த விபத்தை குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.வாகன ஓட்டிகளுக்கு நடுவில் அதிவேகமாக வரும் சாம்பல் நிற ஐ20 கார், அதே வேகத்துடன் ஒரு வளைவில் திரும்பும் போது, அப்படியே தலைக்குப்புற கவிழும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே சாலையில் அந்த நேரத்தில் இருந்தால் மற்ற வாகன ஒட்டிகள் யாரும் இதில் பாதிக்கப்படவில்லை.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

ஒருவேளை இன்னும் கொஞ்ச அளவிலான வாகனங்கள் இருந்திருந்தால் கூட, ஹூண்டாய் ஐ20 கார் வந்த வேகத்தில் பெரிய விபத்து நடந்திருக்கும்.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

அதிவேகத்தில் வளவை கடக்க முயற்சிக்கையில் கார் டிவைடரில் மோதி, தலைக்குப்புற கவிழ்ந்து விழும் காட்சிகள், நெஞ்சை பதற வைக்க செய்வதாக உள்ளன.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தை குறித்து விசாரித்த போலீசார், சிசிடிவி காட்சிகள் குறித்தும் ஆராய்ந்தனர். அதன்மூலமாக பல்வேறு முடிவுகளை அவர்கள் வெளியிட்டனர்.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

விபத்திற்குள்ளான ஹூண்டாய் காரில் இருந்த ஃபர்ஷாஹத் அலி சீட் பெல்டு அணியாமல் காரை ஓட்டியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

மேலும் ஃபர்ஷாஹத் அலி காரை ஓட்டும்போது குழப்பமான மனநிலையில் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

விபத்தில் மரணமடைந்துள்ள ஃபர்ஷாஹத் அலி சிறந்த கார் ஓட்டக்கூடியவர் என்றும், அதற்கு உரிமம் கூட அவர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் அவரது தந்தை.

அதிவேகமாக காரை ஓட்டிய வாலிபர்: நடுரோட்டில் உயிரை விட்ட சோகம்

அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் சிலர் இந்த விபத்து நடந்த இடம் ஆபத்தான பகுதி தான் என்றும். இங்கு இதுபோல் விபத்து நடப்பது தொடர்கதையாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

விபத்து நடைபெற்ற போது பதிவான சிசிடிவி காட்சிகள்

நிதானம் பிரதானம் என்பது வாழ்க்கையில் மட்டுமல்ல, வாகனங்களை இயக்கும் போதும் அது பொறுந்தும். இதுபோன்ற விபத்துகள் மனவேதனையை கூட்டும் இது, போக்குவரத்து விதிகளை மதிப்பதன் அவசியத்தை உணர்த்துக்கின்றன.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: High Speed Driving Clainms One Life in Hyderabad two Other Injured. Click foe Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more