வந்தே பாரத் ரயில் எல்லாம் ஒரமா போ! 1000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் புதிய ரயிலின் சோதனை வெற்றி!

சீன அரசு மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயில் தொழில்நுட்பமான அல்ட்ரா ஹை ஸ்பீட் என்ற மேக்லீவ் டிரான்ஸ்போர்டேஷன் சிஸ்டத்தை ஷாக்ஸி மாகாணத்தில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் சீனாவில் தற்போது ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்திற்கு இணையாக செல்லும் ரயில்வே நெட்வொர்க் தயாராகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது அதிவேகமாக பயணிக்கும் ரயிலாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை தான். அதேநேரம் மும்பை மற்றும் ஆமதாபாத் இணைக்கும் வகையில் தற்போது புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

high speed flying train

வெளிநாடுகளில் உள்ள புல்லட் ரயில்களுக்கு இணையாக இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த புல்லட் ரயில்கள் எல்லாம் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இந்நிலையில் சீனாவில் மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர்ஸ் வேகத்தில் பயணிக்கும் புதிய அல்ட்ரா ஹை ஸ்பீடு ரக ரயில்வே தொழில்நுட்பத்தை அந்நாட்டு அரசு உருவாக்கி உள்ளது.

இது லோ வேக்கம் டியூப் வழியாக மேக்னடிக் லீவ் ஸ்டேஷன் மூலம் இயங்கும் போக்குவரத்து வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது யாங்கோ கவுண்டிங் முதல் தட்டான் சிட்டி வரை இந்த ரயில் திட்டம் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இதை மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

high speed flying train

இந்த மேக்லீவ் டெக்னாலஜியை பொறுத்தவரை ஸ்ட்ராங்கான எலெக்ட்ரோ மேக்னெட் கொண்டு இயங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. ரயில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லும்போது ரயில் தண்டவாளத்தில் இருந்து ரயிலின் வீல் விலகி சென்று விடும். இந்த இரண்டுக்கும் இடையே காந்த சக்தியில் தான் ரயில் வேகமாக பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் காற்றை குஷனாக பயன்படுத்தி இந்த ரயில் பயணிக்கும்.

இதனால் ரயில் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். சாதாரண மற்ற ரயிலை ஒப்பிடும்போது இந்த ரயில் குறைவான சத்தத்தையும் அதே நேரம் குறைவான அதிர்வையும் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சோதனை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வேக்கம் டியூப் உருவாக்கப்பட்டு அதன் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனையில் நேவிகேஷன் சிஸ்டம் ஸ்டேபிள் சஸ்பென்ஷன் பாதுகாப்பான ஸ்டாப்பிங் உள்ளிட்ட அம்சங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டன.

இந்த ரயிலில் அதிகபட்ச வேகம் மற்றும் சஸ்பென்ஷன் உயரம் என்பது நிர்ணயிக்கப்பட்டது படி சரியாக இருந்தது. பேப்பரில் திட்டமிடப்பட்ட பெரும்பாலான கணக்கீடுகள் மிகச் சரியாக சோதனை முயற்சியின் போது நடந்ததாக சோதனை செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அடுத்த கட்டமாக நீண்ட தூரத்திற்கு வேகம் டியூப் அமைப்பது, சுற்றுச்சூழலால் இதற்கு ஏற்படும் பிரச்சனை, சூப்பர் கண்டக்டிங் நேவிகேஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட வேண்டும்.

சீன அரசு கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தை துவங்கியது தற்போது இரண்டு ஆண்டுகளில் இது முக்கியமாக முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் உலகிலேயே அதிவேகமாக பயணிக்கும் ரயிலாக இதுதான் இருக்கும் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதன் மூலம் தற்போது சீனாவில் உள்ள ஷாங்காய் மற்றும் பீஜிங் ஆகிய நகரங்களை இணைப்பது சுலபமாகிவிடும்.

இந்த இரு நகரங்களுக்கும் இடையே சுமார் 1200 கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. இந்த தூரத்தை வெறும் 90 நிமிடங்களில் இந்த ரயிலால் கடந்து விட முடியும். தற்போது உள்ள புல்லட் ரயில் நான்கு மணி நேரம் 18 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. சுமார் 1.30 மணி நேரத்தில் இந்த இரு நகரங்களும் இணைக்கப்பட்டால் இரு நகரங்களில் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீன நாடு தற்போது போக்குவரத்து துறையில் பல்வேறு அப்டேட்களை செய்து வரும் நிலையில், இந்த 1000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயில் குறித்த தொழில்நுட்பம் நாட்டிற்கு மிகப்பெரிய கௌரவமாக இருக்கப் போகிறது. இதை வெற்றிகரமாக சோதனை செய்து அந்நாடு மிக முக்கிய இடத்தை எட்டி உள்ளது . இது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான்

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2024, 14:57 [IST]
English summary
High speed flying train china maglev 1000kmph test success
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+